நேற்று மாலை தோழர் அப்துல் காதர் தொலைபேசியில் அழைத்திருந்தார்.
மெட்ராஸ் கபே படத்தை எதிர்த்து ஹைதராபாத் திரையரங்குகளில் பரப்புரை செய்ய வேண்டும். வாருங்கள் என்று அழைத்தார். "நான் வேறு மாநிலத்தில் இருக்கும் காரணத்தால் வர முடியாத சூழ்நிலை. பிற நண்பர்களை அழைப்போம்" என்று கூறினேன்.
பின்னர் இரவு அவருக்கு அழைப்பு விடுத்தேன். "தோழர், எத்தனை பேர் வருகிறார்கள்?" என்று கேட்டேன். "யாரும் வருவதாக தெரியவில்லை. நான் என் மனைவி குழைந்தைகளுடன் சென்று பரப்புரை செய்யப்போகிறேன்" என்று கூறினார்.
சொன்னது போலவே இன்று தன் குழந்தைகளை அழைத்து சென்று மெட்ராஸ் கபே படத்தை எதிர்த்து பரப்புரை மேற்கொண்டார். நூற்றுக்கணக்கான மக்களிடம் இலங்கை-இந்தியாவின் கூட்டு அயோக்கியத்தனத்தை எடுத்து கூறியுள்ளார். தோழருக்கு வாழ்த்துகள்.

மதவாதிகளாய் ஒன்று சேரக் கூடாது. ஜனநாயகவாதிகளாய் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்துபவர் தோழர் அப்துல் காதர்.
தன் குழந்தைகளையும் அதே வழியில் நடத்துபவர்.
முகநூலில்தான் தோழர் எனக்கு பழக்கம். கடந்த ரம்ஜானுக்கு அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். மறக்க முடியாத அனுபவம்.
இவரை மாதிரி ஆட்களை வாழ்த்த மட்டுமே முடிகிறது. இவரைப் போல போராட்டங்களில் ஈடுபட முடியவில்லை.
"தீவிரவாதியாகப் போறியா?
உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை?
சாஃப்ட்வேர் இஞ்சினீர் சாஃப்டா இருக்கனும்' என்று அறிவுரை சொல்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
"புலிகளை ஆதரிக்காதே! உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க'ன்னு வரைக்கும் எனக்கு அறிவுரை கொடுத்துவிட்டார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ நம்மை ஒருவித சுயநலம் ஆட்கொண்டு விட்டது.
தோழர் அப்துல் காதர் போல இருக்க நானும் முயற்சிக்கிறேன்.....
[ வழக்கம் போல இன்றும் 'தமிழன் பிரச்சினைக்கு ஏனப்பா இங்கு ஆந்திராவில் வந்து போராட்டம் செய்கிறீர்கள்?' என்று சொல்லி இல்லாத ஒருமைப்பாட்டை நினைப்படுத்திய ஆந்திரா காவல்துறைக்கு வாழ்த்துகள்!! ]

நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்திய திரைப்படம், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள் செய்த இஸ்லாமிய நண்பர்கள் இப்போது அமைதி காக்கின்றனர்.
ஒரு இனத்தின் வரலாற்றையே திரித்து வெளியிட்ட படத்தை எதிர்க்க வேண்டாமா??
குறைந்தபட்சம் இணையத்தில் பதிவுகள் கூட போடாமல் இருப்பது சற்று வேதனை தருகிறது.