செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா?

 பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார்.
இதே பதிவை பல சமயங்களில் இணையத்தில் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பதிவின் நோக்கம் என்னவென்றால் எப்படியாவது பெரியாரை சிறுமைப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

சமூக நீதிக்கும், மனிதனின் சிந்தனைக்கும் குறுக்கே மதமும் கடவுளும் வந்து நிற்பதால் நாத்திகத்தை முன்மொழிந்தார் பெரியார். அவ்வளவே!

அவரது கொள்கை சரியா? தவறா? என ஆராய்வதே சிறப்பு.
அதை விடுத்து பெரியார் மீது சேறு வாரி இறைத்து ஆனந்தம் காண்பது சிறப்பல்ல.


பதில் தெரியாமல் பெரியார் முழித்தார் என நடக்காத ஒன்றை எழுதி பரப்புகிறார்கள்.
ஆனால் பெரியார் கேட்ட பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமால் சாதி, மத வெறியர்கள் ஒடுகிறார்களே!

பெரியாரை, தேவரை விடுங்க.
நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்காவது பதில் சொல்லுங்க.

  • விக்ரஹங்கள் கடவுளின் பிம்பம் என்கிறீர்கள். சிலைக்கு நெய், பால், மற்றும் உணவுப் பொருட்களை ஊற்றி வீணாக்குகிறார்களே!  அதற்கு என்ன விளக்கம்(சமாளிஃபிகே ஷன்) வைத்துள்ளீர்கள்?
  • அலகு குத்துதல், தீ மிதித்தல் ஆகியவற்றை செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • விநாயகர் சிலையை கரைத்து கடல் வளத்தை மாசுபடுத்த எந்தக் கடவுள் சொன்னான்?
  • உன் மதம் பெருசு, என் மதம் பெருசு என்று தகராறு செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • பார்ப்பான் அல்லாதவரோ, பெண்களோ கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டு எந்த விளக்கெண்ணை கடவுள் சொன்னான்?

இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். எதற்கும் எந்த பதிலும் வரப்போவதில்லை

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ஆராய்ச்சிக்குள் போக விரும்பவில்லை.
மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சமூகத்தில் மூடப் பழக்க வழக்கங்களும், சீர்கேடுகளும், பூசல்களும் உள்ளதா இல்லையா?
கண்டிப்பாக இருக்கிறது.,

அதனை எதிர்த்து எந்த ஆன்மீகவாதியும் பிரச்சாரம் செய்வதில்லை.
அதை முதல்ல செய்யுங்க பாஸ்.

அதை விடுத்து பெரியார் முழித்தாரா? பசும்பொன் தேவர் கேள்வி கேட்டாரா? என்ற தேவையற்ற விவாதத்தை நிறுத்துங்க பாஸ்...

நீங்களே அறிவுப்பூர்வமாக அணுகுங்க பாஸ்.
அறிவுப்பூர்வமாக அணுக தேவரும் பெரியாரும் தேவையில்லை. சிந்தித்தால் போதும்

3 கருத்துகள்:

  1. சகோதரா!
    "சக மனிதனை மனிதனாக மதிக்க எது தடையோ அதை மறுத்தார் பெரியார்"
    இந்த மதம் பிடித்த தடித் தோல் எருமைகளுக்கு "பெரியார் என்ன சொன்னார்" எனப் புரியாமல் இதை எழுதவில்லை.
    இதுகள் "நித்திரை போல் நடிப்போர்" என்றும் விழிக்க மாட்டார்.

    இதுகளைப் புறந்தள்ளிவிடவேண்டும். சந்திரனைப் பார்த்துக் குரைத்ததன் கதியே இதுகளுக்கு!

    பதிலளிநீக்கு
  2. தன் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை வைத்துக் கொண்டுள்ள அற்பர்கள் சொன்னதை எல்லாம் நாம் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஜாதியில்லாத சமூகம் படைப்போம். ஜாதிப் பெயர்களுடன் அலையும் மிருகங்களை வெறுப்போம்.

    பதிலளிநீக்கு