திங்கள், 20 அக்டோபர், 2014

ஆண்டப் பரம்பரையெல்லாம் அவாளின் காலடியில் சமத்தா அடங்கிடுவாள்...

நாடார் சாதி தாழ்த்தப்பட்ட சாதி, பல இன்னல்களை அனுபவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் சொல்லியிருந்தார்கள்.

"அய்யகோ! அது எப்படி நாடாரை தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லலாம்.
நாங்கள் அப்படி கிடையாது. நாங்கள் உயர்சாதி" என்று கொந்தளித்தவர்களில் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர்.


இப்போ இந்த படம் சொல்லும் செய்தி என்ன, மிஸ்டர்.பொன்னார் அவர்களே!

எந்தப் பதவியிலும் இல்லாத அயோக்கிய பார்ப்பான் மற்றொரு பார்ப்பானுக்கு (ஜெயேந்திரன்) இணையாக அமர்ந்து பேசலாம்.

மத்திய அமைச்சராக உள்ள பார்ப்பான் அல்லாதவர்(பொன்.ராதாகிருஷ்ணன்) பார்ப்பானுக்கு கீழே அமர்ந்துதான் பேச வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் உள்ள கோவிலுக்குள் பீகார் முதல்வர் (தலித்) வந்து சென்ற பின்னர், கோவிலைக் கழுவி விட்டதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சாதியைக் கட்டமைத்த பார்ப்பனியத்தையும்,
பார்ப்பனியத்துக்கு முட்டுக்கொடுக்கும் இந்துமத புராணங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.


ஆண்ட பரம்பரைக் கனவில் இன்பம் காணும் இடைநிலைச் சாதிகள் பற்றி இந்தக் கட்டுரையை படித்து புரிந்து கொள்ளுங்கள்

 

==
*நாடார் சாதிப் பெண்கள் மாராப்பை கூட மறைக்க விடாமல் சிறுமையையும் ,இழிவையும் தந்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*திருச்செந்தூர் முருகன் கோவில் பள்ளு ,பறையர்,சாணார் ,சக்கிலியர் நுழைய கூடாது என போர்டு வைத்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*சாணார்கள் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*விருதுநகர் மாவட்ட நாடார்கள் தங்களை சத்திரிய குலம் என அழைத்து கொண்டு,பூணூலும் அணிந்து கொண்டனர். அவர்கள் 'பூணூல்'அணிவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் சங்கராச்சாரியாரின் வர்க்கம் தானே .!

@Thymiah NA
==

7 கருத்துகள்:

  1. நண்பரே, பார்ப்பனிய இந்து மதம் மற்ற பிற மதங்களை தாழ்வு படுத்தியது என்பதை நான் வழி மொழிகிறேன். ஆனாலும்,

    *இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

    *சாணார்கள் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

    போன்ற கருத்துகளுக்கு தரவு தரவும்.

    நாடார்கள், தலித்துகள் போல இன்று இழிவு படுத்தப் படவில்லை என்ற என் கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்பதை அறியவே இந்த கேள்வி. தவறாக கருத வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. pls read this

      http://kumarikantam.blogspot.in/2011/01/blog-post_17.html

      நீக்கு
    2. நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
      ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
      ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
      பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
      பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
      திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
      குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
      தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
      செருப்பு அணியக்கூடாது.
      படிக்கக்கூடாது.
      பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
      இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.

      இன்னும் பல...

      http://vizhithezhuiyakkam.blogspot.in/2014/02/blog-post_27.html

      நீக்கு
  2. ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் பார்ப்பனீயம் செருப்பாலடிக்கும் படம் இது. . உண்மையில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஆத்திரம், அருவருப்பு போன்ற உணர்வுகள் எனக்கு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீதும் தான் கோபம் வருகிறது.

    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கமும், பார்ப்பனத் திமிரும் எந்தளவுக்குண்டு என்பதையும் இந்துமதம் என்ற பெயரில் தமிழ்நாட்டுத் தமிழர்கள், பார்ப்பன ஆதிக்கத்தையும், பார்ப்பன சாதிவெறியையும், பார்ப்பனத் திமிரையும் அப்படியே பணிவுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது இந்தப்படம்.

    உண்மையில் இது இந்துமதத்தின் தவறல்ல, பார்ப்பனர்களிடம் தமது முன்னோர்கள் கட்டிய கோயிலகளையும், தமது முன்னோர்கள் காட்டிக் காத்த சைவ, மாலிய நெறிகளையும் ஒப்படைத்து விட்டு, அவர்களின் முன்னால் கை கட்டி வாய் புதைத்து நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தவறு. இப்படி ஒரு அவமானத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவர் ஒருவருக்குச் செய்ய, இலங்கைப் பார்ப்பனர்கள் ஒருபோதும் துணிய மாட்டார்கள், இப்படி இலங்கையில் நடக்கவும் முடியாது, ஏனென்றால் எங்களின் முன்னோர்கள் எப்பொழுதுமே சைவத்தை மட்டுமல்ல, பார்ப்பனர்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அந்த நிலையை புலம்பெயர்ந்த நாடுகளில் மாற்றுவதற்கு சில இந்தியப் பார்ப்பனர்கள் முனைந்தாலும், நிலைமை இந்தளவுக்கு மோசமாகப் போக நாங்கள் ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளாள சாதி வெறி பிடித்து அலையும் கிறுக்கனே. பார்பானியம் என்றால் பார்பானை மட்டும் குறிபப்து இல்லை. உன்னை போல சாதி வெறி பிடித்து அலையும் இலங்கை வெள்ளாளனையும் தான் குறிக்கும்.
      இலங்கையில் இந்த வெள்ளாளர்கள் மற்ற சாதிகளை அடக்கி ஆடுவது என்ன மற்றவருக்கு தெரியாதா? நீயும் ஆண்ட பரம்பரை கேஸ் தான், சாதி வெறியை விடு. மனிதனாக நடந்து கொள்.

      நீக்கு
  3. நண்பரே, முன்னர் தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே நாடார்களும் கோயிலில் அனுமதி மறுக்கப் பட்டார்கள், நாடார் பெண்கள், ரவிக்கையோ, மாராப்போ போட முடியாமல் பார்ப்பனர்களால் வைத்திருக்கப் பட்டார்கள் என்பதை முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன்.
    எனது கேள்வியே,

    *இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!"

    என்று நீங்கள் எழுதி உள்ளதற்கு

    " நாடார்கள், தலித்துகள் போல இன்று இழிவு படுத்தப் படவில்லை என்ற என் கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்பதை அறியவே இந்த கேள்வி. "

    என்று கேட்டேன். அதாவது இன்றைக்கும் உள்ளதா என்பதே நான் அறிய விரும்பியது. சரி , விடுங்கள் நாந்தான் உன்கள் பதிவை சரியாக உள் வாங்கவில்லை போலிருக்கிறது்>
    நன்றி,

    பதிலளிநீக்கு