வியாழன், 9 அக்டோபர், 2014

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1

கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம்.
ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கினேன் ( https://www.nhm.in/shop/100-00-0000-238-3.html ) . விலை கொஞ்சம் அதிகம்தான்.

என் அந்தப் புத்தகம் வாங்கினேன்?
இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத கட்டுக்கதைகள், சாதியக் கட்டமைப்பு இவற்றை பற்றி விவாதிக்கும்போது 'கீதை படித்திருக்காயா?, ராமாயணம் படித்திருக்காயா? குறைந்தது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்காயா? என எதிர்கேள்விகள் வரும்.

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விருப்பம்.
அதுபோக கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.



புத்தகம் வாங்கி 40 பக்கங்கள் படித்திருப்பேன்.
'எதுக்குடா இந்தப் புத்தகத்தை வாங்கினோம்' என்பது போல ஆகிவிட்டது.

* 40 பக்கத்தில் 5 திருக்குறள் வந்துவிட்டன.
"அதாவது, திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...." என்பது போல ஆரம்பிக்கிறார். தமிழுக்கு இந்துச் சாயம் அடிக்கும் வேலையை கண்ணதாசன் செய்கிறார்.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விலையுமென்பது இந்துக்களின் பழமொழியாம்.
என்ன அழகாக மக்களை ஏமாற்றுகிறார்கள்!!

*  விதி-மதி, இன்பம்-துன்பம் என சிறுபிள்ளைத்தனமான, அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பல புத்தகத்தில் அதிகம் உள்ளன.

* பெண்கள் நிமிர்ந்து சென்றால் ஆண்களைக் கவர்ந்துவிடுவார்களாம். அதனால் குனிந்து போகச் சொல்கிறதாம் இந்துமதம்.
( பெண்கள் ஜீன்ஸ் அணிவது தொடர்பாக சமீபத்தில் பாடகர் ஜேசுதாஸ் சொன்னது கருத்து இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறது )

* அனுபவங்கள் மூலம் நாம் சில பாடங்களைக் கற்க முடியும்.
உதாரணம்: "பிறர்க்கு துன்பம் செய்தால் நாளை அந்த துன்பம் நமக்கும் வரக்கூடும்".
இதனை அனுபவம், வாழ்வியல் சிந்தனை, தத்துவம் என பல பெயர்களில் சொல்லலாம்.
ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி 'இந்து தர்மம்', 'விதி', 'முன்ஜென்ம பாவம்' என்கிற பெயர்களில் சொல்கிறார் கண்ணதாசன்.

* வள்ளுவர் ஓர் இந்து என்னும் மாபெரும் வரலாற்றுத் திரிப்பை பகுதி 8-இல் சொல்ல வருகிறார். அதனை நான் இன்னும் படிக்க வில்லை.
உலகின் மூத்த பொதுவுடைமையாளன் வள்ளுவனுக்கு இந்து அடையாளம் கொடுத்துதான் தன் இந்து (பிராமண) மதத்தை தூக்கி நிறுத்த வேண்டிய பரிதாப  நிலை கன்ணதாசனுக்கு!!

ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.

அதனால் வாசிப்பு தொடரும்,
அபத்தங்கள் தொடரும்.

8 கருத்துகள்:

  1. கண்ணதாசன் பாட்டு மட்டும் தான் நல்லா இருக்கும். கட்டுரைகள் படு அபத்தம். வனவாசம் படியுங்கள், மேலும் அவரை பற்றிய மதிப்பு குறையும்.

    பதிலளிநீக்கு
  2. துட்டுக்காக எழுதியவைதானே,அபத்தமாய் எழுதினாலும் அவரும் .
    பதிப்பாளர்களும் காசை அள்ளி விட்டார்களே !
    இயேசு காவியமும் எழுதி காசு பார்த்தவரும் அவர்தான் !
    மீதியையும் படியுங்கள் .அவரின் பிற்போக்கான மனம் அதில் தெரியும் !

    பதிலளிநீக்கு
  3. //ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.//

    அடடா.....என்ன ஒரு உன்னதமான நோக்கம்.
    வேற எதாச்சும்...???

    பதிலளிநீக்கு
  4. vaazhvin anubavangal abattham endraal vaazhvadhe abattham

    பதிலளிநீக்கு
  5. இன்னும் சற்று விரிவாக எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  6. கண்ணதாசனின் அஇ பற்றிக் கருத்துச் சொல்லும் முன் அவர் அஇ புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையையாவது முழுதாகப் படிக்கவும்.அதிலேயே அவர் ஏன் அப்படி ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்தார்; எதற்கு இந்துமதம் என்ற வார்த்தை உள்படும் ஒரு தலைப்பை வைத்தார் என்பது கொஞ்சமாவது விளங்கும்.
    பின்னர் அஇ 14 பாகங்கள் முழுதையும் படிக்கவும்.
    பின்னர் தென்றல் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் எழுதிய தமிழிலக்கியக் கட்டுரைகளில் ஒன்றையாவது தேடிப் படிக்கவும்;
    பின்னர் அந்தக் கட்டுரைகளின் தரத்தில் பத்தில் ஒரு பங்கிலாவது இருக்கும் படி ஒரே ஒரு பக்கமாவது சொந்தமாக கூகிளில் தேடாமல் எழுத முக்கி முக்கியாவது முயற்சிக்கவும்.
    பின்னர் அவரது எழுத்துக்களைப் பற்றி அபத்த விமர்சனம் எழுதும் கருத்து கந்தசாமியாகலாம்.

    வாசகன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இதற்குத் தக்க பதில் அளிக்க ஏற்பட்ட குறுகுறுப்பை வாசகன் தீர்த்து விட்டார்.

      இன்றைய தமிழ் இந்துவில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் இந்தப் பதிவர் கட்டாயம் படிக்க வேண்டும்.

      நீக்கு
    2. கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

      ஆனால் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பலவும் அபத்தமாக உள்ளன.

      நீக்கு