கடந்த நாடாளுமன்றத்தேர்தல்(2014) நடக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே "மோடி அலை" என்னும் மாயத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல சித்தரித்தார். "குஜராத் ஒளிர்கிறது", "vibrant குஜராத்" என ஏதேதோ பேசினார்கள்.
சரி, இதெல்லாம் இந்தியா முழுக்க அனைத்து இடங்களிலும் எப்படி போய் சேர்ந்தது?
சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் மூலமாக பொய் செய்திகளைப் பரப்பினார்கள். போட்டோஷாப், மார்பிங் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.
நானும் ஆரம்பத்தில் இந்த கதைகளை நம்பினேன். நம்பவைக்கப்பட்டேன்.
கடந்த நாலு வருடத்தில் என்ன நடந்தது?
விலைவாசி குறைந்ததா? இல்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா? இல்லை.
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா? இல்லை.
விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டதா? இல்லை.
இங்கே எதுவும் நடக்கவில்லை.
ஆனால் என்ன நடந்தது?
முதலாளிகளுக்கு அதிக கடன் தள்ளுபடிகள் செய்யப்பட்டன.
மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பல உதாரணங்களை சொல்ல முடியும்.
என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் என்னும் ஒரு மதவாதக் கும்பல் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
மாட்டுக்கறி உண்டதற்காக கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இந்துத்துவமும், இந்தியும் திணிக்கப்படுகின்றன. பெரும் பாசிசத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பியோர் ஒடுக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். நீதிமன்றம், சிபிஐ, வருமானவரித்துறை அனைத்தையும் தன் நலனுக்காக பாஜக பயன்படுத்தியது.
எப்படி தடுத்து நிறுத்துவது?
அவர்கள் சென்ற அதே வழியில்தான் நாமும் அவர்களை வீழ்த்த முடியும்.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றை பாசிச எதிர்ப்புக்காக பயன்படுத்துவீர். சொந்தக்காரன் என்ன நினைப்பான்? கூட வேலை செய்றவன் என்ன நினைப்பான்? போன்ற தயக்கங்களை விட்டொழியுங்கள். ஏனெனில் பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் இப்படியெல்லாம் நினைப்பதே இல்லை. மோடி ஆதரவு நிலைப்பாடு எடுப்பவர்களிடம் ஆரோக்கியமான விவாதம் செய்யுங்கள். உண்மையான ஆதாரங்களோடு விளக்குங்கள். மோடி(பாசிச) எதிர்ப்பை வலுப்படுத்துங்கள்.
சரி, என்னதான் தீர்வு?
நிச்சயமாக காங்கிரஸ் தீர்வு கிடையாது. மாநில சுயாட்சியே தீர்வு.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளை வலுப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதே தீர்வு. அப்போதுதான் மாநில உரிமைகளைக் காக்க முடியும். மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்க முடியும்.
”ஆபரேஷன் நமோ"வில் தங்களை இணைத்துக் கொள்வீர்.
மோடி ஆட்சியின் அவலங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இப்போது நாம் விட்டால் நம் தலையில் நாமே மண் அள்ளிப்போட்டது போல ஆகிவிடும்.
2019 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. ஒருவேளை மீண்டும் பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதற்கு அடுத்த வருடங்களில் தேர்தலே இல்லாத நிலை ஏற்படும். சர்வாதிகாரத்தின் கீழ் வாழ நேரிடும்.
சிந்தித்து செயல்படுவீர்