வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஹைதராபாத் - ஒரு பார்வை

நேற்று சன் டிவி செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது, விளம்பரவேளையில் தற்செயலாக CNN பக்கம் திருப்பினேன். 'Bomb Blasts in Hyderabad ' என்று ப்ளாஷ் நியுஸ் போய்க்கொண்டிருந்தது.

உடனே எனது பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரிசையாக தொலைப்பேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. 'குண்டு வெடித்தது எந்த ஏரியா? உங்க ஏரியாவா? பத்திரமா இரு. வெளியே எங்கும் போகாதே. யாரிடமும் ரொம்ப பழகாதே!' என்று ஏகப்பட்ட அன்புக்கட்டளைகள்.

சம்பவம் நடந்த தில்ஷுக் நகர் ( Dilsukhnagar), ஹைதராபாத் பற்றி எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்கிறேன்.

தில்ஷுக் நகர் கிட்டத்தட்ட சென்னை கோயம்பேடு மாதிரியான பகுதி. ஆந்திராவின் கோட்டி(Koti) என்னும் பகுதியில் வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் புறப்படும். அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் அடுத்து மலாக்பெட்(Malakpet) வழியாக தில்ஷுக் நகரை வந்தடையும். ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பயணம் செய்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.


 ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் வட மாநில நண்பர்கள் அதிகம். பானிபூரி, குட்கா,  பாஸ்ட்புட் உணவுக்கடைகள், டீ கடைகள்  மற்றும் பல சிறுகடைகள் சாலைகளை ஆக்கிரமித்து எங்கும் நிறைந்திருக்கும். பெரும் வணிக வளாகங்களில் பல  துணிக்கடைகள், செருப்புக்கடைகள் அமைந்திருக்கும். இதனால் சாலைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் சொல்லவே தேவையில்லை. மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

 அமீர்பேட், பேகம்பேட், தில்ஷுக் நகர்  ஆகிய பகுதிகளில் மென்பொருள் படிப்பு, ப்ராஜெக்ட்  சொல்லித்தரும் சிறுசிறு நிறுவனங்கள் பல உள்ளன. மாணவர்கள் கூட்டம் இந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.

இதுபோக சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள் நகர் முழுவதும் நிறைந்திருக்கின்றன. 


 நகரின் இன்னொரு புறத்தில் (மாதாபூர், ஹைடெக் சிட்டி) நம்ம ஆட்கள் (அதாங்க சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்) ஆக்கிரமிப்பு அதிகம்.

இதுபோக மெட்ரோ ரயில் கட்டமைப்பு வேலைகள் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
 

இவ்வாறாக ஹைதராபாத், செகந்திராபாத் நகர் முழுவதும் மக்கள் அடர்த்தி அதிகம். சென்னையை விட அதிகம் என்றுதான் தெரிகிறது.

 இப்படிப்பட்ட மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள  ஹைதராபாத்தின் தில்ஷுக் நகர் பகுதியை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் ஏற்கனவே பல தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

சம்பவ இடத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, காவல்துறை, உளவுப்பிரிவு, மீட்பு பணியில் ஈடுபடுவோர், மீடியாக்கள் என கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

இவ்வாறு பதட்டமான இடத்திற்கு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஏன் வருகின்றனர்? முதல்வர், அந்தப்பகுதி எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர்  வருகையில் தவறில்லை. ஆனால்  மற்ற  ஓட்டுப்பொறுக்கிகள் ஏன் வருகிறார்கள்? அங்கும்  ஓட்டுப்பொறுக்கவா?

மக்கள் அதற்கும் ஒருபடி மேல். வேடிக்கை பார்க்க கூட்டம் கூட்டமாக  வந்துகொண்டு இருந்தனர். போலிஸ் தடியடி நடத்தும் அளவிற்கு கூட்டம் அதிகமானது 

குண்டுவெடிப்பு நடந்த இடத்திலும் வேடிக்கையா??



5 கருத்துகள்:

  1. //பெயரில்லா Any idea who did this?

    guru nathan22

    some anti-social elements. //

    WELL SAID MR.GURUNATHAN

    குண்டு வெடித்த பாவிகளுக்கு மத சாயம் பூசாதீர்கள்.

    எந்த மதமும் அப்பாவி மக்களை கொன்று குவிக்க போதிக்கவில்லை.

    குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

    குற்றவாளிகளை வெடிகுண்டை கட்டி வைத்து சிதறி வெடிக்க செய்து கொல்லவேண்டும்


    ==================

    மெக்கா மஜ்ஸித் போல ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பா?

    Posted by: Mathi Published: Friday, February 22, 2013, 16:35 [IST]

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் தற்போதைய இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
    இதில் 9 பேர் பலியாகினர்.

    பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர்.

    தற்போது போலவே முதலில் ஹூஜி தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    பின்னர் தேசியப் புலனாய்வு முகாமையகம் இந்து தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது.

    தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள் என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது.

    இருப்பினும் இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.-
    THATSTAMIL

    SOURCE: http://tamil.oneindia.in/news/2013/02/22/india-hindu-groups-mystery-surrounds-hyderabad-blasts-170293.html

    =============
    ஹைதராபாத் குண்டுவெடிப்பு- ஒருவேளை தெலுங்கானா செம்புலிகள் வேலையாக இருக்குமோ?

    Posted by: Mathi Published: Friday, February 22, 2013, 11:37 [IST]

    ஹைதராபாத்: நாட்டை உலுக்கியிருக்கும் ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்திய முஜாஹிதீன்கள் அல்லது ஹூஜி தீவிரவாத அமைப்புகளில் ஒன்று காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் ஏன் 'தெலுங்கானா செம்புலிகள்' இயக்கம் காரணமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

    தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பல்லாண்டுகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசும் அவ்வப்போது உறுதிமொழிகளை கொடுப்பதும் பின்னர் பின்வாங்குவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 'தெலுங்கானா யுவசேனா' மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரால் தெலுங்கானா பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

    அதில் இனியும் மத்திய அரசை நம்பி பயனில்லை.. ஆயுத வழிப் போராட்டம் மூலமே தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வென்றெடுப்போம் என்று எச்சரித்திருந்தனர்.

    மேலும் ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராகத்தான் இருக்க வேண்டும். என்று தெலுங்கானா வலியுறுத்துவோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் வாழும் இதர ஆந்திர பகுதியினரை அச்சுறுத்தக் கூடும் வகையில் அல்லது வெளியேற்ற வைக்கும் வகையில் தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தினர் இப்படி ஒரு நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஆந்திர மாநில உளவுத்துறையிடம் இருக்கிறது. THATSTAMIL

    SOURCE: http://tamil.oneindia.in/news/2013/02/22/india-telangana-red-tigers-hand-hyd-blasts-170267.html

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு