கடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது.
பல பதிவுகள், பின்னூட்டங்களைப் படிக்கும்போது 'இவர்கள் சுய சிந்தனையுடன்தான் பதிவுகள் போடுகிறார்களா?' என்று வினா எழுகிறது.
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உலகில் எவர் இறப்பினும் அது துன்பச் சம்பவம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆனால் அந்தக் கொலையை துருப்புசீட்டாக பயன்படுத்தி சாதிய, மதவாத அரசியல் செய்வது இழிவான செயல்.
ஒரு கொலை நடந்தால் அதற்கு சொந்தப்பகை, தொழில் பகை, அரசியல் விரோதம் என பல காரணங்கள் இருக்கலாம்.
அதைவிடுத்து அந்த சாதிக்காரன் கொன்னுட்டான், அந்த மதக்காரன் கொன்னுட்டான்னு பேசி குழப்பம் உண்டாக்க கூடாது.
கொலை நடந்தால் காவல்துறை விசாரணை செய்யட்டும். குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.
தமிழகத்தில் ஒரு வருடத்தில் ஒன்பது இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒப்பாரி சத்தம் கேட்கிறது. அமைதி போதிக்க வேண்டிய தலைவர்கள் 'ஆயுதம் எடுங்கள்' என்கிறார்கள். (இந்த பதிவு எழுதுற நேரத்துல ஒரு கும்பல் கோவையில் மசூதி மீது குண்டு வீசியது)
எங்கள் குடும்பம் இந்துக் குடும்பம், பக்கத்தில் பலரும் இந்துக்களே! அனைத்து மதத்தினரும் பக்கத்தில் இருக்கிறார்கள்.
நீங்கள் வசிக்கும் இடத்திலும் அப்படிதான் இருக்கும்!
அங்கெல்லாம் என்ன பாதுகாப்பே இல்லையா?
உண்மை என்னவேன்றால் எல்லோரும் தான் உண்டு, தன் வேலையுண்டு இருக்கிறார்கள்.
மதவாதம் விதைக்கும் விஷமிகள், ஒட்டு பொறுக்கும் கும்பல்கள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.
வைக்கோல்போரில் நெருப்பு பொறியை போட்டுவிட்டு கமுக்கமாக சென்றுவிடுவார்கள்.
தீ பரவாமல் அணைக்க வேண்டுமே தவிர, ஊதி பெரிதாக்கி ஊரை எரிக்க கூடாது.
மதவாதம் எந்த ரூபத்தில் தலைதூக்கினாலும் எதிர்த்து அடக்க வேண்டும்.
#மனிதனாய் இருங்கல
பல பதிவுகள், பின்னூட்டங்களைப் படிக்கும்போது 'இவர்கள் சுய சிந்தனையுடன்தான் பதிவுகள் போடுகிறார்களா?' என்று வினா எழுகிறது.
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உலகில் எவர் இறப்பினும் அது துன்பச் சம்பவம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆனால் அந்தக் கொலையை துருப்புசீட்டாக பயன்படுத்தி சாதிய, மதவாத அரசியல் செய்வது இழிவான செயல்.
ஒரு கொலை நடந்தால் அதற்கு சொந்தப்பகை, தொழில் பகை, அரசியல் விரோதம் என பல காரணங்கள் இருக்கலாம்.
அதைவிடுத்து அந்த சாதிக்காரன் கொன்னுட்டான், அந்த மதக்காரன் கொன்னுட்டான்னு பேசி குழப்பம் உண்டாக்க கூடாது.
கொலை நடந்தால் காவல்துறை விசாரணை செய்யட்டும். குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.
தமிழகத்தில் ஒரு வருடத்தில் ஒன்பது இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒப்பாரி சத்தம் கேட்கிறது. அமைதி போதிக்க வேண்டிய தலைவர்கள் 'ஆயுதம் எடுங்கள்' என்கிறார்கள். (இந்த பதிவு எழுதுற நேரத்துல ஒரு கும்பல் கோவையில் மசூதி மீது குண்டு வீசியது)
எங்கள் குடும்பம் இந்துக் குடும்பம், பக்கத்தில் பலரும் இந்துக்களே! அனைத்து மதத்தினரும் பக்கத்தில் இருக்கிறார்கள்.
நீங்கள் வசிக்கும் இடத்திலும் அப்படிதான் இருக்கும்!
அங்கெல்லாம் என்ன பாதுகாப்பே இல்லையா?
உண்மை என்னவேன்றால் எல்லோரும் தான் உண்டு, தன் வேலையுண்டு இருக்கிறார்கள்.
மதவாதம் விதைக்கும் விஷமிகள், ஒட்டு பொறுக்கும் கும்பல்கள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.
வைக்கோல்போரில் நெருப்பு பொறியை போட்டுவிட்டு கமுக்கமாக சென்றுவிடுவார்கள்.
தீ பரவாமல் அணைக்க வேண்டுமே தவிர, ஊதி பெரிதாக்கி ஊரை எரிக்க கூடாது.
மதவாதம் எந்த ரூபத்தில் தலைதூக்கினாலும் எதிர்த்து அடக்க வேண்டும்.
#மனிதனாய் இருங்கல
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோ. குருநாதன்,
பதிலளிநீக்குமிகவும் வருத்தம் வரும் பதிவு. அதிலும் தமிழ்ஹிந்து தளம் பக்கம் போய் பாருங்க. ஒரு கொலை என்பதை தாண்டி மக்களுக்கு வெறியை ஊட்ட ரொம்பவே மெனக்கெடுகின்றார்கள். ரொம்ப வேதனையா இருக்கு.
இந்துத்துவ தலைவர்களின் கொலைகள் மிகவும் வருந்தக்தக்கது, கண்டனத்துக்குறியது. ஆனால் இந்த கொலைகளின் பின்னணியில் கள்ளத்தொடர்பு, கட்டப்பஞ்சாயத்து, கடன் பிரச்சனை, மது போதையில் தகராறு போன்றவை தான் காரணமாக இருந்திருக்கின்றன என்பது முன்னர் நடந்த சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியான சூழலில் தொடர்ந்து ஒரு சமூகத்தை குறிவைப்பது வேதனைக்குறியது.
இறைவன் இவர்களுக்கு மன அமைதியையும் புத்தியையும் தரட்டும்
நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நன்றி
நீக்குநல்ல சிந்தனை...நல்ல பதிவு
பதிலளிநீக்குமக்களின் இந்த கண்ணோட்டத்திற்கு தினமலரின் பங்கு மிக அதிகமாகவே உண்டு...! நேற்றைய அதன் இணையத்தில் அதை அதிகமாகவே காண முடிந்தது..!
நன்றி !
தினமலரின் பணியே அதுதான்!!
நீக்குஅனைத்தையும் கவனிக்கிறோம்
மதவாதம் விதைக்கும் விஷமிகள், ஒட்டு பொறுக்கும் கும்பல்கள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.
பதிலளிநீக்குவைக்கோல்போரில் நெருப்பு பொறியை போட்டுவிட்டு கமுக்கமாக சென்றுவிடுவார்கள்.
தீ பரவாமல் அணைக்க வேண்டுமே தவிர, ஊதி பெரிதாக்கி ஊரை எரிக்க கூடாது.
மதவாதம் எந்த ரூபத்தில் தலைதூக்கினாலும் எதிர்த்து அடக்க வேண்டும்.
#மனிதனாய் இருங்கல
Well Said!
மதங்களை ஒழித்தால் மனிதம் பிறக்கும்;
பதிலளிநீக்குமதங்களை வளர்த்தால் மனிதம் இறக்கும்.
ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
பதிலளிநீக்குமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டது வன்மையாக கண்டனத்திற்குரியது.
மனிதநேயமற்ற இந்த செயல் எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாதது.
தமிழகத்தில் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான காலதாமதமும் இதுபோன்ற கொடிய குற்றவாளி களுக்கு மேலும் துணிச்சலை உருவாக்கி விட்டதோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
சமீபகாலமாக நடக்கும் பல படுகொலைகளில் சங்பரிவார் பிரமுகர்கள் இலக்காகி வரும் நிலையில், அதனை வைத்து மதவாதப் பிரச்சனையாக்க விஷமிகள் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்கின்றனர்.
இதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர்களைத் துன்புறுத்துவதும், உண்மைக் குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதோர் என கண்டுபிடிக்கப் பட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாத காவல்துறையின் செயலும் உள்ளபடியே வேதனையை தருகிறது.
தமிழக அரசு இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, உண்மைக் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சொந்த, தனிப்பட்ட பிரச்சனைகளால் நடைபெறும் கொலைகளுக்கு மதச்சாயம் பூசுவது நேர்மையற்ற செயலாகும். இதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் களைக் குறிவைப்பதும் வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது.
எனவே இதுவரை நடந்த படுகொலைகளில் உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது; அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது.
தனக்கு எதிராகவே போராடிக் கொள்ளும் இந்து மதவாதிகள் !!!
பதிலளிநீக்குசமீப நாட்களாக மதவாதக் கட்சிகளில் கொலைகள் அதிகரிக்கின்றன. கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாமும் வருந்துகிறோம். அப்படி ஒரு உயிர் கூட இந்த மண்ணிலிருந்து கொல்லப்படக் கூடாது.
ஆனால் கொலைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது சரியானதுதானா??
சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் கொலை செய்யப்பட்ட ஒருவர் குறித்து தினமலர் இதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தியைப் படிப்போம்... (http://www.dinamalar.com/news_detail.asp?id=747125) இதில் போகிற போக்கில் “கடந்த ஆண்டு, பா. ஜ., மாநில மருத்துவ அணி செயலர், டாக்டர் அரவிந்த் ரெட்டி, வேலூரில் உள்ள, அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வந்த போது, ஓட, ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்“ என தெரிவித்துள்ளது அந்த ஏடு.
தற்போது நடந்த கொலைகளின் பின்னணி நமக்கு தெரியாது என்றாலும், அதோடு முன்பு நடைபெற்ற கொலை ஏன் தொடர்புபடுத்த வேண்டும்??
அடுக்கடுக்காக கொலைகள் நடப்பதாகச் சொல்லி, பதட்டத்தை கிளப்பும் நோக்கம்தானே அது??.
வேலூர் மருத்துவர் கொலை வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் குறித்த செய்தியைப் பார்ப்போம். (http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=31744) இந்தச் செய்தியில் “உதயகுமார், தங்கராஜ், சந்திரன் ஆகியோர் அரவிந்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 2-வது குழுவில் இருந்த ராஜா, பெருமாள், தரணிகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (மிகச் சிரிய அளவில் மட்டுமே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது)
ஏற்கனவே, குஜராத் முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு - பின் அவர் நீதிமன்றத்தால் பல ஆண்டுகளுக்கு பின்னர் கொலை செய்யவில்லை என்று உண்மை வெளிப்பட்டதையும் பார்த்தோம்.
(http://www.facebook.com/sindhan/posts/10201042157512015)
அரசியல் கொலை செய்யப்பட்ட அந்த பாஜக முன்னாள் அமைச்சரின் மனைவி “ உச்சநீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருகின்றது? என்று பார்த்த பிறகு அந்த உண்மையான குற்றவாளி ளின் பெயர்களை வெளியிடுவேன். என் கணவரை ஒழித்துக்கட்ட ஒரு அரசியல் சதி நடந்துள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் விசாரணைக் காலகட்டத்தில், அந்தக் கொலையை தங்கள் முஸ்லிம் விரோத மதவெறி அரசியலுக்கு முழுமையாக பயன்படுத்தியிருப்பார்கள்.
மதவெறியர்கள் ஏதோ திட்டத்துடன் தான் செயல்படுகிறார்கள். செய்தி ஊடகங்களும் பரபரப்புக்காக இத்தகையோரின் பொய்ப் பிரச்சாரங்களை ஆதரிப்பது வருந்தத் தக்கது.
SOURCE: http://sindhan.blogspot.sg/2013/07/blog-post_8978.html
நம் நாட்டில் மனிதம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றது இதுதான் உண்மை.சரித்திரம் அறிட்யாத த்ரித்திரங்கள், அரசியல பகடைகாயாய் பயன் படுத்துவோருக்கு துணைபோகின்றார்கள். நினைக்கவே கேவலம். எல்லோரும் என் சகோதரன் என்ற என்னம் யாரிடமும் இல்லை.
பதிலளிநீக்குசமீப காலமாக பல கட்சியினை சார்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு பின்னால் ரியல் எஸ்டேட் தொழில், சொந்தப் பகை, கொடுக்கல் வாங்கலில் மனகசப்பு என்று எத்தனையோ பிண்ணனி இருக்கிறதாக காவல் துறையின் விசாரணையில் தெரியவரும் வேளையில், பா.ஜ.க.வின் மாநில செயலாலர் படுகொலை நிகழ்ந்துள்ளது. மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று கட்சி, சாதி, மத பேதமில்லால் அனைவரும் சொல்லி வருகின்றனர்.
பதிலளிநீக்குஆனால் கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஒரு தேசிய கட்சியினர் இந்த படுகொலையில் மத ஆதாயம் தேட முயலுவது அருவருக்கதக்கது. யார் கொலை செய்தார்கள் என்று ஒரு துப்பும் கிடைக்கப்பெறாத நிலையில், குறிப்பிட்ட மதத்தினர் தான் செய்திருக்க வேண்டும் என்ற முன்முடிவோடு வகுப்பு வெறியை தூண்டி விட்டு வருவது எல்லா சமூகத்தினரையும் முக்ம் சுளிக்க வைக்கிறது.
இதற்கிடையில், சில ஊர்களில் முஸ்லிம்களால் தான் வெட்டப்பட்டார் என்று பிட் நோட்டிஸ் மூலம் மதவெறியை தூண்டும் கோட்சேத்தனமும் நடந்து வருகிறது. இவர்கள் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா?? அதன் மூலம் தமிழகத்தை குஜராத் போல மாற்றிவிட மாட்டோமா? என்று அலைகிறார்கள்.
தினமலரின் பணியே அதுதான்!.அனைத்தையும் கவனிக்கிறோம்.
பதிலளிநீக்குநல்லது நன்றி குருநாதன் அவர்களே
மத பித்து தலைக்கு ஏறினால், மனிதனும் மிருகமுமாகி விடுவார்கள்.. கூட்டம் சேர்ப்பது, மத/சாதிக் கட்சி என தொடங்கி இயல்பான சிக்கல்களையும் ஊதிப் பெரிதாக்கி அப்பாவிகளையும் வெறியர்களாக்கி ஒருவரோடு மோதவிட்டு அப்பப்பா, மதங்கள் உண்மையில் அபினைவிட மோசமான ஒன்று. குஜராத், சிரியா, இலங்கை, பாகிஸ்தான் என எங்கும் மதப் பிரச்சனைகள். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. சிறுபான்மையினராய் இருப்பவர் பெரும்பான்மையாகும் போது காட்சிகள் மாறிவிடும். இலங்கையில் இந்துக்கள் சிறுபான்மை நசுக்கப்படுகின்றனர் பவுத்தர்களால், பாகிஸ்தானில் இஸ்லாமியர் இந்துக்களை ஒடுக்குகின்றனர், குஜராத், கஸ்மீரில் இஸ்லாமியர் ஒதுக்கப்படுகின்றனர். எகிப்தில் கிறித்தவர்கள் இஸ்லாமியரால் ஒடுக்கப்படுகின்றனர். ஆக மாறி மாறி மதங்கள் குழப்பங்களையும், குளறுபடிகள் ஏற்படும்.
பதிலளிநீக்கு@ சகோ நிரஞ்சன் தம்பி,
நீக்குஉங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
//மாறி மாறி மதங்கள் குழப்பங்களையும், குளறுபடிகள் ஏற்படும்.//
தங்களின் கருத்து சற்றே நெருடலை தருகின்றது.
நாத்திகத்தை பின்பற்றிய ஸ்டாலினும், மாவோவும் கொத்துகொத்தாக கொன்று குவித்தவர்களே. இன்றைய சீனாவில், நாத்திக அரசால் சிறுபான்மையின உய்குர் மக்கள் நசுக்கப்பட்டே வருகின்றனர். இதற்காக நான் "நாத்திகம் குழப்பங்களையும், குளறுபடிகள் ஏற்படுத்தும்" என்று கூறினால் அதனை எத்தனை பேர் அறிவுக்கு பொருந்தி பார்ப்பார் என்று தெரியவில்லை.
மதங்கள் மனித குலத்தின் நன்மைக்கே தோன்றின. எந்த மதமும் கொலைகளை செய்யுமாறோ அல்லது சிறுபான்மையினரை நசுக்குமாறோ கூறவில்லை. மதவெறி இரும்புக்கரம் கொண்டு களையப்பட வேண்டியதே.
நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Avasiyamana Nalla Pathivu.................Good...........
பதிலளிநீக்குமிக அருமையான கருத்துக்கள். மதவாதம் குறித்த சரியான பதிவு
பதிலளிநீக்குமுகமில்லாமல் வருபவர்கள், அநாகரீகமான கமெண்டுகள் அனுமதிக்கப்படாது!!
பதிலளிநீக்குபாபு சிவா என்ற பெயர் இட்டிருந்தேன். எந்த வசை வார்த்தைகளும் போடபடவில்லை.
பதிலளிநீக்குநியாயமான கேள்விகள் மட்டுமே கேட்டிருந்தேன்.
அப்புறம் எப்படி அது "முகமில்லாமல் வருபவர்கள், அநாகரீகமான கமெண்டுகள் அனுமதிக்கப்படாது!!"
என்று கருதுவீர்கள்
அண்ணே,
நீக்குபாபு, சோமுன்னு பெயர் போட்டால் போதுமா?
போங்க, போயி அடையாளத்தோடு வாங்க.
தாங்கள் அறிந்து கொள்ள தருகின்றேன்.
பதிலளிநீக்குமறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்திரு .வைகோ அவர்கள் இன்று (23.07.2013) காலை 9 மணி அளவில், படுகொலைசெய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இருந்த வைகோ அவர்கள், ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் மனைவியிடம் நடந்த படுகொலை பற்றி கேட்டறிந்தார். பின்பு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு .பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன் மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தனர்.
ஏல, உனக்கு என்னல வேணும்?
நீக்குவைகோ அவர்கள் ஒரு துக்க வீட்டிற்கு சென்றதை ஏனப்பா இங்கே கமெண்ட் போடுற?
நான் என்னவோ கொலையை நியாயப்படுத்தியது போல பேசுறீங்க!!
மதவாதத்தை எதிர்க்கிறேன். மோடியோ, அக்பருதீன் ஒவைசியோ யாராக இருந்தாலும் எதிர்ப்பேன்.
அவ்வளவே!