ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பெரியார் என்னத்த கிழித்தார்?

நேற்று 'ஜீ தமிழ்'(ZEE Tamil) தொலைக்காட்சியில் 'நம்பிக்கை - மூட நம்பிக்கை' என்னும் தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

மூட நம்பிக்கைகளை சாடிய பலர் மிக அருமையாக தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். அதிலும் குறிப்பாக   'மூடர் கூடம்' திரைப்படத்தின் இயக்குனர் நவீன் மிக அருமையாக பேசினார்.

நம்பிக்கை தரப்பில் பேசிய பலரும் சொதப்பினர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
ஒரு கட்டத்தில்  நம்பிக்கையின் பெயரால் தாங்கள் செய்வது தவறு என்று ஒப்பு கொண்டனர்.


அப்போது பேசிய சோதிடக்காரர் ஒருவர் 'பெரியார் செய்த போராட்டங்களுக்குப் பின்னர்தான் நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று சொல்லும் கூட்டம் பெருகி விட்டதாக' தான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சரி, இந்த சோதிடக்காரர் உள்ளிட்டோர் சொல்லும் நம்பிக்கையான விசயங்கள் என்ன?
கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும்,
கணவனை இழந்த பெண் முகத்தில் முழித்தால் அபசகுணம்,
செவ்வாய் தோஷம், சனி தோஷம் என்று பொய் புரட்டுக்களை சொல்லும் சோதிடம்,
தீக்குழியில் இறங்கினால் தன்னம்பிக்கை கூடுமாம்..

மனிதனை சிந்திக்க விடாமல் 'முன்னோர் சொன்னார்கள்', 'பழைய பண்பாடு' என்று காட்டுமிராண்டியாகவே வைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை பார்க்க்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். 
(முன்னோர்கள் மரம் வைக்க சொன்னார்கள், ஏரி வெட்ட சொன்னார்கள். அதையெல்லாம் செய்யுங்கப்பா..)

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை தான் பெரியார் கிழி கிழின்னு கிழித்தார்.

குறிப்பு:
பெரியார் கருத்துக்களை நாத்திகர்கள் மட்டுமே செவிகோடுத்து கேட்க வேண்டும் என்கிற கட்டாயம் அல்ல.
நாத்திகம் என்பது மட்டுமே பெரியார் கொள்கையும் அல்ல.

3 கருத்துகள்:

  1. நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன். வாசகர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன். தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    http://vivadhakalai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. பெரியார் தமிழ் மொழியைப காட்டுமிராண்டி மொழினு சொன்னார் அதையும் சேர்த்துக்குங்க

    பதிலளிநீக்கு