ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி லயோலா கல்லூரி மாணவர்கள் நான்கு
நாட்களாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்திற்கு
தமிழகமெங்கும் பெரும் ஆதரவு அலை வீசியது .
தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்ற செய்தி உளவு துறை அறிந்து அதை எப்படியாவது நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது . அதனால் காவல்துறை அதிகாலை 1.30 மணி அளவில் போராட்ட அரங்கின் கதவுகளை உடைத்து உள் நுழைந்தது . வெளியே நூறு அடி சாலையை போக்குவரத்து எதுவும் செல்ல முடியாமல் முடக்கியது . காவல் துறை வாகனங்களை கொண்டு வந்து குவித்தது . அரங்கத்தில் உள்ளே இருந்த உணர்வாளர்களை களைத்து மாணவர்களை நெருங்க முயன்றது
சுமார் 200 ஆதரவாளர்களை கைது செய்து அருகில் உள்ள சமூக கூடத்தில் அடைத்தது காவல்துறை . மாணவர்களை இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது . இவ்வாறு அராஜகமான முறையில் காவல்துறை ஒரு நியாயமான போராட்டத்தை நசுக்கியது .

அப்போது
அமைப்புகளை சேர்ந்த நபர்கள் காவல்துறையை கேள்வி கேட்டனர் . ஏன் எதற்காக
உள்ளே வந்தீர்கள் . இது தனியார் திடல் தானே , நீங்கள் இங்கு எப்படி அத்து
மீறி உள்ளே நுழைய முடியும் என்று கேள்வி எழுப்பினர் . அதற்கு காவல்துறை
நாங்கள் கைது செய்யத்தான் வந்திருக்கிறோம் என்றனர் .
உடனே தமிழ் அமைப்பினர்
, கைது செய்வதற்கு ஆணை (வாரன்ட்) இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர் .
இருப்பினும் காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை . மாணவர்களை நோக்கி
முன்னேறியது . மாணவர்களை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு சங்கிலி
அமைத்திருந்தனர் பிற மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் . காவல்துறை
ஒவ்வொரு அடுக்காக தடியடி நடத்தி மனித சங்கிலியை உடைத்து மாணவர்களை
நெருங்கினர் .மாணவர் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய்
வாகனத்தில் ஏற்றினர் . பின்பு போராட்டக் காரர்களை கைது செய்து வாகனத்தில்
ஏற்றினர் .
சுமார் 200 ஆதரவாளர்களை கைது செய்து அருகில் உள்ள சமூக கூடத்தில் அடைத்தது காவல்துறை . மாணவர்களை இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது . இவ்வாறு அராஜகமான முறையில் காவல்துறை ஒரு நியாயமான போராட்டத்தை நசுக்கியது .
செய்தி: newsalai.com
போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் தான் கருணாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல என்பதை ஏற்கனவே கூடங்குளத்தில் நிரூபித்த பாசிச ஜெயா தற்போது லயோலா கல்லூரி மாணவர்கள் மீது காட்டியுள்ளார்.
எந்தப் பலத்தையும் தட்டிப்பார்க்கும்
வல்லமை மாணவர் சக்திக்கு உள்ளது. சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள்
தொடங்கியிருக்கின்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் அனல், வீச்சுப்பெற்று
தமிழகம் எங்கும் பரவி இந்திய மத்திய அரசினை உலுப்பிப்பார்க்கவேண்டும்.
இடையறாது தொடரும் தாய்த் தமிழகத்தின் மன உணர்வுகளை இனியும் அசண்டை செய்ய
முடியாது என்கின்ற நிலையினை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
போராட்டங்களை நசுக்குவதற்காக
மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற
வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக