மக்களவையில் நேற்று ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியதன ஒரு பகுதி:
"இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும். "
'தனி நாடு ' என்பதுதான் தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்.
மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி திருச்சி சிவா அவர்களும் இதே கருத்தை மறைமுகமாக வைத்தார். 'இலங்கை வேண்டுமா? தமிழகம் வேண்டுமா? என்பதை இந்தியா தீர்மானிக்கட்டும்' என்றார்.
ஒட்டுமொத்த தமிழர்களும் இலங்கையைக் கண்டிக்கிறார்கள்.
இனப்படுகொலைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா இலங்கையை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
சிலர் தீக்குளித்து இன்னுயிரை மாய்க்கிறார்கள்.
ஆனாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
'இலங்கை நம் நட்பு நாடு. நாம் அவர்களை எதிர்க்க கூடாது'.
அதாவது இலங்கையை தனது மாநிலமாக பாவித்து பேசுகிறது இந்திய ஏகாதிபத்தியம்.
இடையில் பல இந்திய ஊடகங்கள், சு.சாமி போன்ற அரசியல் தரகர்கள் தமிழர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். (கேடுகெட்ட தினமலர் இன்று எப்படி கார்ட்டூன் போட்டுருக்கான்னு பாருங்க!!)
இந்தியாவின் இரு அவைகளிலும் தமிழர் பிரச்சினை என்றாலே வட மாநில உறுப்பினர்கள் வெளியே காற்று வாங்க சென்று விடுகிறார்கள்.
அப்படியானால் தமிழன் என்ன செய்வது?
எப்படி இந்தியாவை ஆட்டம் காணச் செய்வது?
அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
ஆம்! 'தனித் தமிழ்நாடு' கோஷம். இது வெற்றுக் கோஷம் அல்ல. நம் உரிமை.
அதை நாம் கையில் எடுக்கும் போது இந்திய வல்லாதிக்கம் நடுங்கும்.
கடிதம் எழுதி காலத்தைப் போக்குவது ஒட்டு வங்கி அரசியலுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.
திருமாவின் இந்த கோஷம் தமிழக மக்களை சென்றடையாது. ஒருவேளை செல்லும்பட்சத்தில் தமிழக மக்கள் விழிப்புணர்வு ஏறுவார்கள். விழிப்புணர்வு பெற்றுவிட்டால் ஏமாற்று அரசியல் பண்ண முடியாதே!!!
திருமாவின் பேச்சை ஊடகங்கள் மறைக்கும். 'காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என திருமா தமிழில் ஆவேசமாகப் பேசியதை ஒளிபரப்பிய சன் டி.வி 'தனி நாடு' முழக்கத்தை கட் செய்து விட்டது. இதுதான் போலித் திராவிடம்!!
தோழர் திருமா மட்டும் இந்த ஆயுதத்தை எடுத்தால் போதாது. ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரண்டு 'தனித் தமிழ்நாடு' கோஷத்தை வலுவாக உயர்த்த வேண்டும்.
“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”- தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக