பேருந்தில் அல்லது வேறு பொது இடங்களில் ஆண்கள் பக்கம் அமர நம்ம ஊரு பொண்ணுங்க ரொம்பவே யோசிப்பாங்க.
சகோதரன் அல்லது ஆண் நண்பர்களுடன் பெண்கள் வந்தால் அந்த சகோதரன் அல்லது ஆண் நண்பர் நாம் அருகில் அமருவார். அடுத்த அந்தப் பெண் அமருவார்.
இதுதான் பல இடங்களிலும் நாம் காணும் காட்சி.
நேற்று வேளச்சேரி - கிண்டி செல்லும் மினி பேருந்தில் இறுதி இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன்.
ஒரு வடகிழக்கு மாநில ஆணும் பெண்ணும் ஏறினார்கள்.
பெண் என் அருகில் அமர்ந்தார், அடுத்து அந்த ஆண் அமர்ந்தார். எனக்கு சற்று வியப்பு அளித்தது.
சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.
தமிழகத்திலும் ஆங்காங்கே கண்டிப்பாக நடக்கும்.

நேபாளி நிக்கி, சங்கி மங்கி என சந்தானம் ஒரு படத்தில் கேலி செய்திருப்பார்.
(நானும் அந்த வசனத்தை சில முறை உபயோகித்திருக்கிறேன். இப்போது நினைத்தால் எனக்கே ரொம்ப வருத்தமாக உள்ளது.)
இதுமாதிரியான கேலிகள், இனவாத பேச்சுக்கள் நம்ம ஊரிலும் இருக்கிறதா என அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருந்தது.
அந்த சகோதரியிடம் பேசு கொடுக்க ஆரம்பித்தேன். (ஆங்கிலத்தில்தான்)

==
நான்: நீங்கே எங்கே இருந்து வரீங்க?
சகோதரி: மணிப்பூர்.
நான்: எத்தனை காலமாக இங்கே தமிழகத்தில் வசிக்கிறீர்கள்?
சகோதரி: ஒரு வருடம் ஆகுது.
நான்: உங்களை யாராவது கேலி செய்திருக்கிறார்களா?
சகோதரி: இல்லையே!
நான்: சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள் தொடர்கிறதே! நீங்கள் தமிழகத்தில் ஒரு முறை கூட சந்தித்தது இல்லையா?
சகோதரி: அப்படியெல்லாம் இங்கே இல்லை.
நான்: Really?

சகோதரி: Yes.
நான்: Ok fine. thanks
==
அவர்கள் சொன்னது எவ்வளவு உண்மையென்று தெரியாது. ஆனால் உண்மையாகவே இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
சில மாதங்கள் முன்பு டெல்லியில் நீடோ தானியா என்னும் அருணாச்சல பிரதேஷ் மாணவர் அடித்தே கொலை செய்யப்பட்டார். அவரது தலைமுடி அமைப்பை வைத்து கேலி செய்ததே பிரச்சினையின் ஆரம்பம்.
நேற்று பெங்களூரில் கன்னடம் பேச மறுத்ததால் மணிப்பூர் மாணவர்கள் மீது தாக்குதல்.
இன்று டெல்லியில் மிசோரம் மாணவி கொலை.
வடகிழக்கு மாநில மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இவ்வாறு செய்திகள் வந்துகொண்டே உள்ளன.
இனரீதியான கேலி, கிண்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ் சினிமாக்களிலும் அவர்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்
நண்பரே நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநான் மணிப்பூர் மக்களை ஓரளவுக்கு அறிவேன் என்பதால் உங்களின் இந்தப் பதிவை ஆமோதிக்கிறேன். மணிப்பூர் மக்கள் ஒரு விதத்தில் கொஞ்சம் இனசண்ட்- நம்மை விட. அதுவே அவர்களை கேலிசெய்ய மற்றவர்களுக்கு ஏதுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.