ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

பிறமாநிலத்தவரின் தாய்மொழிப்பற்றும் தமிழனின் அடிமைப்புத்தியும்

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சென்னை - கர்நாடக அணிகள் மோதிய அரையிறுதியில் டாஸ் போட்ட பின்னர் கன்னட நடிகர் சுதீப் அவர்கள் பேசினார். தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிக் கொண்டே இருந்தார்.
குறுக்கிட்ட கேள்வியாளர் 'சார், ஆங்கிலத்தில் பேசலாமே! என்றார்.
"என் ஊரு, என் மக்கள், கன்னடத்தில் பேசினால்தான் நல்லா இருக்கும்" என்றார்.
பின்னர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசி முடித்துக் கொண்டார்.

ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பத்திரிகை நிருபர்களிடம் வாசிக்க வந்த வழக்கறிஞர் 'முதலில் கன்னடம், பின்னர் ஆங்கிலம்' என்று கூறி கன்னட பத்திரிகைகளுக்கு முதலில் பேட்டிக் கொடுத்தார்.

சென்னையில் உள்ள ஆந்திரா உணவகங்களில் போர்டு, பில், புகைப்படங்கள், வாசகங்கள் என அனைத்தும் அவர்களின் தாய்மொழியான தெலுங்கில் இருக்கிறது.

மலையாளிகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
ஹைதராபாத்தில் உள்ள மலையாள உணவகங்களுக்கு சென்றால் ஏதோ கேரள வரலாற்றுக் கண்காட்சிக்கு சென்றது போல இருக்கும். மெனு கார்டு, புகைப்படங்கள் என அனைத்திலும் மலையாளப் பண்பாடு தூக்கலாக இருக்கும்.

மேலே உள்ளவர்களின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டுகிறோம்.

தமிழனின் நிலை என்ன?
காதல் தொடர்பான நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பரிசு வென்ற சகோதரி என்ன மொழியில் பேசினார்? என்ன பேசினார்? என்றே தெரியவில்லை.
தமிழர்களின் பெரும்பாலும் பார்க்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசினால்தானே நம் கருத்துக்கள் பல மக்களையும் சென்றடையும் என்கிற பொது அறிவு கூட அந்த சகோதரிக்கு தெரியாமல் போனது.
தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் தற்செயலாக குறுக்கே வருவது வேறு.
ஆனால் வேணுமென்றே ஆங்கிலத்தை இழுத்து திணிப்பது வேறு.

"கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
தமிழ் கத்துக்க ட்ரை பண்ணுறேன்" என வெளிமாநில சகோதர, சகோதரிகள் தமிழ் நோக்கி நகருகிறார்கள்.
ஆனால் தமிழனோ ஆங்கிலம் நோக்கி நகருகிறான்.

தமிழ் சோறு போடுமா? தமிழ் தமிழ்னு என் சாகுறீங்க? என்று சோற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கும் பாரத மாதாவின் பக்தர்கள் கேட்கிறார்கள். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை வரவேற்கும் மூடர்கள் இவர்கள். அடுத்தவன் மொழிக்கு பல்லக்கு தூக்கும் அடிமைகள் இவர்கள்.

தமிழில் சாதி இருக்குது (உப்பு இருக்கு, காரம் இல்லை என்றும் சொல்லுவாங்க), தமிழை மட்டும் வைத்து என்ன செய்ய? என தமிழகத்திலும் சில வெங்காயங்கள் கிளம்பியிருக்குது.

இந்த மூடர்களின் பேச்சுக்களை புறந்தள்ளுவீர்.
மொழி அழிந்தால் இனம் அழியும்.
தமிழை வாழ வைப்போம்!
தமிழனிடத்தில் தமிழில் பேசுவோம்.

Provisional store என்பதை 'ப்ரொவிஷனல் ஸ்டோர்' என எழுதி போர்டு வைத்தால் தமிழ் வாழாது.
மளிகைக் கடை என்று எழுதினால்தான் தமிழ் வாழும்.

10 கருத்துகள்:

  1. அனைவரும் படிக்க வேண்டிய, உணரவேண்டிய பதிவு. தங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் எல்லா தமிழனுக்கும் புரியாது.

    பதிலளிநீக்கு
  2. //மொழி அழிந்தால் இனம் அழியும்//

    இந்தக் குரல் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழன் வாழும் அனைத்து ஊர்களிலும் ஒலிக்க வேண்டும்.

    “சோறு...சோறு” என்று அலைபவர்கள் இதை உணர வேண்டும்; உடனடியாய்த் திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. சும்மா தமிழ் தமிழ்னு கூச்சல் போட்டால் மட்டும் பத்தாது சகோதரர்களே. தமிழ் மூலம் எப்படி சோறு கிடைக்கும்? அதற்கு வழி காண்பித்தால் தமிழன் மட்டுமல்ல மத்தவனும் தமிழ் கத்துக்குவான். அதற்குபிறகு தமிழை வாழ வைக்க எந்த மயிரானும் தேவையில்லை. தமிழ் தன்னையே பாத்துக்கும் வளர்த்துக்கும். அதாவது இப்ப நாம் சோத்துக்காக ஆங்கிலம், இந்தி போன்ற மற்ற மொழிகளை கற்பது மாதிரி. சேட்ஜியை பாருங்க, வட நாட்லேருந்து வந்து தமிழ் பேசரான். ஏன்? எல்லாம் சோறு மேன் சோறு. ரைட்டோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா,

      ஆங்கிலம், இந்தி ஆகியவற்றை மொழிகளாக பார்க்காமல் அவற்றை அறிவாகப் பார்க்கும் மோசமான மனநிலை இங்கு உள்ளது. அதனைப் பயன்படுத்தி கல்விக் கொள்ளையும் நடக்கிறது.

      மற்றபடி, சோறு போடும் மொழி என்று எந்த மொழியும் கிடையாது.
      அவனவன் திறமையும் உழைப்பும்தான் சோறு போதும்.

      நீக்கு
    2. அவனவன் திறமையும் உழைப்பும்தான் சோறு போடும்

      நீக்கு
  4. உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கையாலாகாத்தனத்துக்குப் பெருந்தன்மை, விட்டுக்கொடுப்பு, மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, நட்பு , கம்யூனிசம், சோசலிசம், திராவிடம், பெரியாரிசம் என்றெல்லாம் பெயரிட்டுக் கொண்டு, தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழரல்லாதவர்கள் தமது மாநிலங்களில் தமது மொழிக்கும் இனத்துக்கும் முன்னுரிமை கொடுப்பது மட்டுமன்றி, எழுத்தாளர், முற்போக்கு, சாதியொழிப்பு போன்ற முகமூடிகளைப் போட்டுக் கொண்டு, இளிச்சவாய்த் தமிழர்களின் செலவில் தமிழ்நாட்டிலும் தமது மொழிக்கும், இனத்துக்கும் உரிய இடத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இதை யாராவது தமிழர்கள் வெளிப்படையாகக் கூறினால், அப்படிக் கூறுகிறவர்களுக்கு இனவாதியென்று பெயர் சூட்டி விடுவார்கள் தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதோர் என்ற பயத்தில், தமிழர்கள் அதைப்பற்றி வாய்திறப்பதில்லை. இது என்னுடைய நேரடி அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

    பதிலளிநீக்கு
  5. Provisional store என்பதை 'ப்ரொவிஷனல் ஸ்டோர்' என எழுதி போர்டு வைத்தால் தமிழ் வாழாது. "

    நெற்றியடி பதிவு.. தமிழனாய் பார்த்து திருந்தாவிட்டால் தமிழை வளர்க்க முடியாது எனப் பாடுவதே இந்தக் காலத்துக்கு பொருந்தும்.

    தமிழை வளர்க்க- முதலில் தமிழர்கள் தமிழில் பேச வேண்டும், அதற்காக செந்தமிழில் பேச வேண்டும் என்பதல்லா..

    லெஃப்பிட்டில திரும்பி ரைட்டிலோ கட் பண்ணி ஸ்ட்ரைட்டா போனா, ஒரு பிரிட்ஜு வரும், அதை கிராஸ் பண்ணி ஒரு யூடேர்ன் எடுத்தா ஒரு மெயின் ரோடு வரும், அந்த மெயின் ரோட்டு ஓரமா ! இருக்க டீக்கடைக் காரர்கிட்டா கேட்டா பஸ் ஸ்டாண்டுக்கு எந்த டைமில பஸ் வருமுனு ரைட்டான் டைம் சொல்வாரு,

    இவ்வாறான நிலையில் தான் இன்று தமிழ் சாகின்றது. இதனை வளர்த்துவிட தனியார் பள்ளிகள், தனியார் தொலைக்காட்சிகள், தனியார் வானொலிகள், தனியார் நிறுவனங்கள் - இந்த தனியார் என செயல்படும் அனைத்தும் தமிழை தனியாக கொன்று வீசும் வேலையில் செயல்பட்டு வருகின்றது.

    அடுத்த 50- 100 ஆண்டுகளில் தமிழ் செத்த மொழிகளில் ஒன்றாகிடும் போலிருக்கு..

    நாம கேரளக் காரன் கலப்பு மொழி பேசுறான் என சொல்லிக் கொள்கின்றோம், ஆனால் மலையாளத்தில் யாரும் LEFT, RIGHT, STRAIGHT, TIME, BRIDGE, என ஏற்கனவே இருக்கின்ற இட, வல, நேர், சமயம், பாலம் போன்ற சொற்களை மறந்து விட்டு ஆங்கிலத்தை நிரப்புவதில்லை.

    நாம் Jill Water, Rice, என சொல்வதை அவர்கள் இன்னமும் தணுத்த வெள்ளம், சோறு, ஊணு என பச்சை மலையாளத்திலேயே பேசுவது தான் வியப்பாகவும், நம் தமிழர் நிலையை எண்ணி வேதனையாகவும் இருக்கின்றது.

    கலைச்சொற்களை கண்டுபிடித்து பாடபுத்தகத்தில் மட்டும் போட்டுவிட்டு பீற்றிக் கொள்வதை விட, ஏற்கனவே இருக்கின்ற தமிழ்ச் சொற்களை உருப்படியாக பேசினாலே இன்னும் ஆயிரம் ஆண்டுக்கு தமிழ் வாழும்..

    பதிலளிநீக்கு
  6. தமிழில் புதிதாக வார்த்தைகள் கண்டுபிடிப்பதற்கு பதில் ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை அப்படியே தமிழில் போட்டால் நம்ம ஆள் புதிதாக மனப்பாடம் பண்ண வேண்டியதில்லை. அதோட குப்பனும் சுப்பனும் சாதாரணமாக அந்த வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் இப்ப ஸ்டைலுக்காக ஆங்கிலம் கலந்து பேசறவனுங்களுக்கு பேஜாராப் போய்டும். எப்புடி? :)

    பதிலளிநீக்கு