எப்பவோ படித்திருக்க வேண்டிய நூல். இப்போதுதான் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சாதி இழிவுக்கு ஆளானவர்களும், ஆளாக்கியவர்களும் தங்கள் சுய அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பே இந்நூல்.
காற்றைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சாதி என்பதை நூல் கூறுகிறது.
'இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்?' என்பவர்கள் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டிய நூல்.
பார்ப்பனியத்தை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.
பார்ப்பனர் அல்லாத இடைநிலைச் சாதிகள்தான் அதிக சாதிக்கொடுமைகளை விளைவிக்கிறார்கள் என்பதை நூல் விளக்குகிறது.
"சாதியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் சாதி வேறு வடிவில்தான் வெளியாகும்.
சாதியை வெறுத்து ஒதுக்கினால்தான் சாதி ஒழியும்" என்பதே நூலின் மூலம் நான் கற்ற படிப்பினை.
உண்மையில் பெருமாள்முருகன் பெரிய அப்பாட்டக்கர்தான்.
'சாதியும் நானும்' நூலே துணிச்சலான முயற்சிதான்.

காலச்சுவடு
ஸ்டாலில் பில் போடுவதற்காக இந்நூலைக் கையில் வைத்திருந்தபோது ஒருவர் வந்து
'நூலின் ஆசிரியர் பெருமாள் முருகன் ஸ்டாலில் இருக்கிறார். வந்து
கையெழுத்து வாங்கிச் செல்லுங்கள்' என்றார். 'அவர் என்ன அவ்வளோ பெரிய
அப்பாட்டக்கரா?' என்று எண்ணிக் கொண்டேன். 'சரி, நான் வந்து கையெழுத்து
வாங்குகிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்து விட்டேன். இறுதிவரை
பெருமாள் முருகனை சந்திக்கவில்லை. மாதொருபாகன் பிரச்சினை அப்போதுதான்
தொடங்கியிருந்தது
.
.
'சாதியும் நானும்' நூலே துணிச்சலான முயற்சிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக