வழக்கமா பெரியார் குறித்து விமர்சனங்களில் ஒருவித வெறுப்பு அரசியல் இருக்கும், அவதூறுகள் இருக்கும், தவறான தகவல்கள் இருக்கும்.
ஆனால் இந்த நூல் பெரியாரின் முரண்பாடான நிலைப்பாடுகளை நேர்மையாக அலசுகிறது.
காங்கிரஸ் மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பால் உப்புசத்தியாகிரகம் மற்றும் சட்டமறுப்பு இயக்கங்களை புறக்கணித்தது,
"சமூக சீர்திருத்த இயக்கமா? அரசியல் இயக்கமா?" என்பதில் முரண் நிலைப்பாடுகள்,
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் அக்கறை காட்டாமை என பல தகவல்கள் நிரம்பியுள்ளன.
ஜஸ்டிஸ் கட்சி(நீதிக்கட்சி) என்பது பெரிய முற்போக்கு கட்சி அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரியாரின் நாத்திக & பொதுவுடைமை பிரச்சாரங்களுக்கு தடை போட்டது, பெரியாரைக் கைது செய்தது என பல அட்டூழியங்களை செய்துள்ளது நீதிக்கட்சி. ஆனாலும் அந்த மானங்கெட்ட கட்சியை ஆதரித்திருக்கிறார் பெரியார்.
"நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்கிற பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்த காரணத்திற்காக தோழர்.ஜீவானந்தம் மற்றும் வெளியிட்ட ஈ.வெ.கிருஷ்ணசாமி (பெரிய நாயக்கர் என்று அழைக்கப்பட்டாராம்) ஆகியோரை சிறையில் அடைத்தது நீதிக்கட்சி அரசு. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்குமாறு ஜீவானந்தம் அவர்களை வற்புறுத்தியிருக்கிறார் பெரியார்.
இவ்வாறு பல புதிய தகவல்கள் நிரம்பியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக