இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"
போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.
உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.
சில உதாரணங்கள்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்?
ராஜீவ் கொலை வழக்கில் மூன்று நிருபராதிகளின் விடுதலைக்காக ஏன் இத்தனை நாள் போராடவில்லை?
இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை. தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள். ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)
இப்போது விசயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்? இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.
அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.
பாமக, மதிமுக கட்சிகள் மது ஒழிப்பை தீவிரமாக ஆரமிக்கும் முன்னரே தமுமுக, போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழகமெங்கும் தீவிர மது ஒழிப்பு பிரச்சாரங்கள், மாநாடுகள் நடத்தினார்கள். வழக்கம் போல அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய
அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23,
24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர
விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட்டது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை செய்யப்பட்டன.
நவம்பர் 7 அன்று ஆதிக்க சக்திகளால் தர்மபுரி அருகே நத்தம் உள்ளிட்ட 3 கிராமங்களில் வாழும் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ராஜபக்சே வருகையை கண்டித்து, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன
இரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள், கல்வி உதவிகள் என பல சமூக நலத்திட்டங்களை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் செய்து வருகிறார்கள்.
நன்றி: http://www.tmmk.in/
போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.
உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.
சில உதாரணங்கள்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்?
ராஜீவ் கொலை வழக்கில் மூன்று நிருபராதிகளின் விடுதலைக்காக ஏன் இத்தனை நாள் போராடவில்லை?
இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை. தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள். ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)
இப்போது விசயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்? இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.
அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.
பாமக, மதிமுக கட்சிகள் மது ஒழிப்பை தீவிரமாக ஆரமிக்கும் முன்னரே தமுமுக, போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழகமெங்கும் தீவிர மது ஒழிப்பு பிரச்சாரங்கள், மாநாடுகள் நடத்தினார்கள். வழக்கம் போல அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழக
காவல்துறை நடத்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், அணுஉலை
எதிர்ப்பாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக்
கோரியும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் - ஆபத்தான ஆறு அரசியல்
கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான 40 இயக்கங்கள் அக்டோபர் 29ல் சட்டமன்ற
முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
சட்டமன்ற முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியான உடன் வழக்கம்போல மமகவினர்
களத்தில் மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். வீதியெங்கும் மமகவினர் மக்கள்
உரிமையில் வெளியான அணுஉலை குறித்த செய்தியினை மறுபிரசுரம் செய்து பொதுமக்
களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டக் களத்தில் குவிந்தனர்.
காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக
அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி
நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத
கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை
வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின்
சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வேலி அனல்மின்
நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.
காவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை செய்யப்பட்டன.
நவம்பர் 7 அன்று ஆதிக்க சக்திகளால் தர்மபுரி அருகே நத்தம் உள்ளிட்ட 3 கிராமங்களில் வாழும் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ராஜபக்சே வருகையை கண்டித்து, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன
விலைவாசி உயர்வு, ரயில்வே கட்டண உயர்வை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராடுகிறார்கள்.
இரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள், கல்வி உதவிகள் என பல சமூக நலத்திட்டங்களை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு தமிழக களத்தில் மக்களுக்காக மும்முரமாக போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளை பார்த்து 'இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?' என்று கேட்டால் நியாயமா?
நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.
வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.
தனது படங்களில் திரும்ப திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.