சனி, 5 ஜனவரி, 2013

தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல!

அமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை.
துப்பாக்கி படத்தை கண்டித்து  இஸ்லாமியர்கள் போராட்டம்.
தற்போது விஸ்வரூபம் பட விவகாரம்.
இப்படி பல செய்திகள் வரும்போது இணையதளங்களில் பலரும் இஸ்லாமியர்களைக் கடுமையாக சாடுகிறார்கள்.
 (நீங்களும் இந்த பக்கங்களில் பாருங்கள்
http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-federation-demand-see-viswaroopam-167428.html

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=619386 )


பலரது பின்னூட்டங்களை பார்க்கும்போது  மனம் மிக வேதனைப் படுகிறது.
இஸ்லாமியர்கள் போராடவே கூடாது என்பது போல  இருக்கிறது பலரது கருத்து.

சில இஸ்லாமிய நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்தேன்.
சில நாட்கள் குரான் இணையதளத்தில்(quran.com, islamkalvi.com) படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த வரிகள்

"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32

இன்னும் இதுபோன்ற பல நல்ல கருத்துக்களை இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க  மாட்டான்.
தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை ஏன் மத அடிப்படையில் அடையாளப் படுத்த வேண்டும்?

ஆப்கனில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் கிறிஸ்துவத் தீவிரவாதிகளா?
குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் இந்துத் தீவிரவாதிகளா?
பர்மாவில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?
தமிழீழத்தில் தமிழர்களைக்  கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?

இல்லையே! அப்படி இருக்கும்போது பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதியை மட்டும் ஏன் 'முஸ்லிம் தீவிரவாதிகள்" என அடையாளப் படுத்த வேண்டும்?

தீவிரவாதச் செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவன் தீவிரவாதி. அவ்வளவுதான்.

சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!

கலெக்டர் அலுவலத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சென்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகள்.


உதயக்குமார் அவர்களையும் அணு உலை எதிர்ப்பவர்களையும் சுட்டுக் கொல்ல  வேண்டும் எனக் கூறும் காங்கிரஸ்காரர்கள் தீவிரவாதிகள்.

மாவோயிஸ்ட் வேட்டை என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொள்பவர்கள் தீவிரவாதிகள்.


ராஜீவ் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் மூன்று தமிழர்களை தூக்கில் இட துடிப்பவர்கள் தீவிரவாதிகள்.


குஜராத்தில் சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் தீக்கிரையாக்கியவர்கள் தீவிரவாதிகள்.

கரசேவை என்னும் பெயரில் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தீவிரவாதிகள்.


இப்படி அனைத்து தீவிரவாதிகளையும் இங்கே வளர்த்து விட்டு, எங்கோ பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என பட்டம் கொடுத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக பார்த்தால்  நீங்களும் தீவிரவாதியே!

பிற மனதை நோகடிக்காமல் இருப்போம்! மனித நேயம் வளர்ப்போம்!


--தொடரும் 

79 கருத்துகள்:

 1. தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காம்ப்ளெக்ஸ் எனப்படும் வணிக வளாகத்தின் பின்புறம் போயிருக்கிறீர்களா? அங்கு ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் என்னை பயம் கொள்ள வைக்கின்றன. இஸ்லாமியர்களை இப்படி தரக்குறைவாக விமர்சித்து இந்துக்களால் எங்காவது சுவரொட்டி ஒட்ட முடியுமா? பெரும்பான்மை மக்களிடம் இருந்து தனித்து வாழும் மனப்பான்மையே அவர்களுக்கு எதிரிகளை உருவாக்குகின்றது. இஸ்லாமியர்களுக்கு வாடகை வீடு தர மறுக்கும் இந்துக்களை பற்றி பேசும்போது இந்துக்களுக்கு வாடகை வீடு தர மறுக்கும் இஸ்லாமியர் பற்றி பேச மறுக்கிறோம். இஸ்லாமிய நாடு அல்லாத மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் என்ன தெரியுமா? அங்கு எத்தனை கோவில்கள் இடிக்கப்படுகின்றன தெரியுமா? போலி மத சார்பின்மையே இந்தியாவின் சாபம். இந்த நாட்டில் இந்துக்களை விட இஸ்லாமியர்களுக்கே அதிக உரிமைகள் தரப்படுகின்றன. பட்டியல் வேண்டுமா? ஆனாலும் அவர்கள் திருப்தியாகத்தான் இருக்கிறார்களா? சவுதி மட்டுமே அவர்களுக்கு உயர்ந்த நாடு. இந்தியா மட்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இஸ்லாமியர்களை இப்படி தரக்குறைவாக விமர்சித்து இந்துக்களால் எங்காவது சுவரொட்டி ஒட்ட முடியுமா?//
   ஏன்யா சுவரொட்டி ஒட்டுகிறீர்கள்? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது

   //சவுதி மட்டுமே அவர்களுக்கு உயர்ந்த நாடு. இந்தியா மட்டம். // அப்படி அவர்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது

   நீக்கு
  2. இந்த நாட்டில் இந்துக்களை விட இஸ்லாமியர்களுக்கே அதிக உரிமைகள் தரப்படுகின்றன. பட்டியல் வேண்டுமா?///

   இதெல்லாம் எழுதும் போதே சிரிச்சிடுவீங்களா? இல்ல தனியா டைம் ஒதுக்கி சிரிப்பீங்களா?

   நீக்கு
  3. //ஏன்யா சுவரொட்டி ஒட்டுகிறீர்கள்? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது //

   இஸ்லாமியர்கள்தான் ஒட்டுகிறார்கள். உங்கள் ஊரிலேயே இடம் சொல்லி இருக்கிறேன். நீங்களே போய் பாருங்கள். ஆம். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அவர்களிடம் சொல்லுங்கள்.

   //அப்படி அவர்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது//
   அப்போ நீங்க இன்னும் ப்ளாக்ஸ் நிறைய வாசிக்கணும். என்னாது, ப்ளாக்ல சொல்றது எல்லாம் உண்மை இல்லையா? அப்போ நீங்க சொல்றது?

   சரி. நான் சொன்ன மற்ற புள்ளிகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. அப்போ அது எல்லாம் ஒத்துக்கொள்கிறீர்களா?

   நீக்கு
  4. நான் உணர்ந்த உண்மையை சொன்னேன்.
   இங்கு வந்து குழாயடி சண்டை போட எனக்கு தெரியாது.


   நீக்கு
 2. காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.

  தீவிரவாதத்தின் காரணகாரியங்கள் என்னென்ன?. பயங்கரவாதத்தின் பொருள் என்ன?

  CLICK >>>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில். <<<< TO SEE

  .

  பதிலளிநீக்கு
 3. "இஸ்லாமியர்கள் போராடவே கூடாது என்பது போல இருக்கிறது பலரது கருத்து." போராடலாம். ஒரு சாதாரண விடயத்தை பெரிதுபடுத்தி போராட்டம் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்.

  கமல் படத்தை பார்த்து அனுமதி வழங்க வேண்டிய உரிமை தணிக்கை குழுவுக்கு மட்டுமே உள்ளதே தவிர போறவன் வாரவனுக்கெல்லாம் போட்டு காட்ட வேண்டிய தேவை இல்லை. அதை புரிந்து கொள்ளுங்கள் முதலில்.

  "தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை ஏன் மத அடிப்படையில் அடையாளப் படுத்த வேண்டும்" மதத்தின் பேரால் நடத்தப்படும் செயல்களுக்கு அப்படித்தானே அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.

  பாகிஸ்தானில் சுடப்பட்ட மலாலா என்ற சிறுமிக்கு எந்த இஸ்லாமிய பதிவர் ஆதரவு கரம் நீட்டினார். அவர் சுடப்பட்டதை நேரடியாகவும்/ மறைமுகமாகவும் அனைத்து இஸ்லாமிய பதிவர்களும் நியாயப்ப்ட்டுத்தினர்.

  இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களை கொல்வது யார் என்று உங்களுக்கு தெரியுமா?
  மலேசியாவில் தமிழர்களை ஒடுக்குவது யார் என்று தெரியுமா?
  இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை கொன்றும் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த இஸ்லாமிய வெறியர்கள் யார் என்று சொல்வது? (புலிகளும் கொலை செய்தார்கள் ஆனால் அவர்கள் இந்த வெறியர்கள் போல் பாலியல் வல்லுறவு செய்யவில்லை)

  "குஜராத்தில் சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் தீக்கிரையாக்கியவர்கள் தீவிரவாதிகள்." கோத்ரா ரயில் எரிப்பு எந்த கணக்கு?

  பம்பாய் கலவரத்தில் கொல்லப்பட்ட இந்துகள் எந்த கணக்கு?
  இந்திய/பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் கொல்லப்பட்ட இந்துகள்/சீக்கிய பொதுமக்கள், பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்கள் எந்த கணக்கில் சேர்த்துள்ளீர்கள்?

  மேலும் தொடரும் நேரம் கிடைக்கையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீவிரவாதச் செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவன் தீவிரவாதி. அவ்வளவுதான். தெளிவா சொல்லியாச்சு.அது யாராக இருந்தாலும் சரி.

   //ஒரு சாதாரண விடயத்தை பெரிதுபடுத்தி போராட்டம் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும். //அப்படின்னா எது சாதாரண விஷயம், எது பெரிய விஷயம்-னு ஒரு பட்டியல் கொடுங்க.

   நீக்கு
  2. பாகிஸ்தானில் சுடப்பட்ட மலாலா என்ற சிறுமிக்கு எந்த இஸ்லாமிய பதிவர் ஆதரவு கரம் நீட்டினார்.

   http://suvanappiriyan.blogspot.in/2012/10/blog-post_11.html

   ///அவர் சுடப்பட்டதை நேரடியாகவும்/ மறைமுகமாகவும் அனைத்து இஸ்லாமிய பதிவர்களும் நியாயப்ப்ட்டுத்தினர்.

   நியாப்படுத்திய இஸ்லாமியர்களின் பதிவு லிங்க் பிளீஸ்

   நீக்கு
  3. //ஒரு சாதாரண விடயத்தை பெரிதுபடுத்தி போராட்டம் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்//
   மது ஒழிப்பு, அணு உலை எதிர்ப்பு மற்றும் பல சமூக பிரச்சினைகளுக்காக இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, SDPI மற்றும் பல இஸ்லாமிய சகோதரர்கள் களத்தில் நின்று போராடுகிறார்கள். தெரிந்துவிட்டு பேசுங்கள்.

   நீக்கு
  4. நீங்கள் குறிப்பிட்ட சுவனபிரியனின் லிங்கில் ஒரு இஸ்லாமிய பதிவர் சிராஜ் போட்ட பின்னூட்டம்.
   "தாலிபன்களின் போராட்டத்தை எதிர்த்து பேசி இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம்..." தலிபான்களை செய்வது எல்லாம் சரி அவர்களை எதிர்த்தால் சுடுவது நியாயமானது என்பதுதான் அவர்கள் கருத்து.

   சுவனபிரியன் மலாலாவுக்கு அளித்த ஆலோசனையை பாருங்கள்.
   "மலாலா யூசுஃப் போன்ற இளம் பெண்களுக்கு எனது சிறிய அறிவுரை. இந்த உலகம் போலியானது. பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக பார்க்கவே ஆண் வர்க்கம் விரும்புகிறது. பெண்கள் வெளியில் ஆபாசமாக உடை அணிந்து வருவதும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே கூடிக் குலாவுவதும் தான் பெண் உரிமை என்று உலகம் முழுக்க பொது நியதியாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்ற உண்மையை அறியாமல் தங்களுக்கு தாங்களே சில பெண்கள் குழி பறித்துக் கொள்கின்றனர்."

   மலாலா எதற்க்காக போராடினார் என்பது கூட சுவனத்துக்கு தெரியவில்லை. அவர் போராடியது பெண்களின் கல்விக்காக போராடினார். அதற்க்கும் ஆபாச உடைக்கும் என்ன தொடர்பு. மலாலா ஆபாச உடை அணிந்து வந்தாரா? அணிய அனுமதி கேட்டு போராடினாரா?

   நீக்கு
  5. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி . நீங்கள் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் படித்து தெரிந்து கொள்ளலாம். சிலர் இஸ்லாத்தை சரியாக புரிந்து பின்பற்றவில்லை என்பதால் நீங்கள் இஸ்லாத்தை குறை கூறுவது சரியன்று! இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் ஆன மார்க்கம். யார் தவறு செய்தாலும் நாளை தண்டனை உண்டு. இவ்வுலகை படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு அஞ்சி கொள் என்று மனிதனை எச்சரித்து அவனை நல்லதை கொண்டு தீமையை தடுக்கும் மார்க்கம். நீங்கள் இஸ்லாமிய அரசை தெரிந்து கொள்ள வேண்டுமா? உமர்,அபூபக்ர் அவர்களின் ஆட்சியை படியுங்கள். எதையும் ஆராய்ந்து பின்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும். நீங்கள் குர்ஆணை ஆராய்ந்து பாருங்கள், அது அருளப்பட்ட காலம் சொல்லும் போதனைகள் உங்கள் எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்.

   நினைவு கொள்ளுங்கள் "தவறு" யார் செய்தாலும் "தவறு" தான்

   2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா

   3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

   நீக்கு
 4. இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

  இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

  >>>> 1.திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். <<<<

  >>>> 2. இந்தியாவின் உண்மையான தீவிரவாதிகள் ஒரு பார்வை.ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்: <<<<


  >>>> 3. அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே".ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. <<<<


  >>>>> 4.ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. பகுதி 1 <<<<<<


  >>>>> 5. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. <<<<<

  >>>>> 6. புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3. <<<<<<  அவசியம் படியுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
   அவர்கள் சிங்களர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல.
   தமிழர்களை அழித்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே எதிரானவர்கள்.
   வேறு பல விடுதலை இயக்கங்கள் நடத்திய கொடூரங்களுக்கு புலிகள் பொறுப்பு கிடையாது.
   இதை பற்றி தலைவர் பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.
   அடுத்து அதை பற்றி ஒரு கட்டுரை இடுகிறேன்.
   வீணாக புலிகள் மீது சேறு வாரி இறைக்க வேண்டாம்

   நீக்கு
  2. "இதை பற்றி தலைவர் பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.
   அடுத்து அதை பற்றி ஒரு கட்டுரை இடுகிறேன்.
   வீணாக புலிகள் மீது சேறு வாரி இறைக்க வேண்டாம்"

   நல்ல கருத்து.
   இது பற்றி உண்மைகள் என்ற பெயரில் உலாவித்திரியும் மார்க்க/மத வெறியர் வாஞ்சூர் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

   நீக்கு
 5. முஸ்லிம்களை கொன்று குவித்த மகாராஷ்டிர போலீஸ் :

  5 பேர் பலி; ஊசலாடும் உயிர்கள் "100"


  Monday, 07 January 2013 02:56 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்

  Jan7, மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள "துலியா" நகரத்தில், நேற்று மாலை (06/01) முஸ்லிம்களை நோக்கி போலீஸ் கண்மூடித்தனமாக "துப்பாக்கிச்சூடு" நடத்தியதில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

  நூற்றுகணக்கான முஸ்லிம்கள் "குண்டடி" பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.

  இறந்தவர்களில் இம்ரான் அலி கமர் அலி (20) ஹாஷிம் ஷேக் நசீர் (25) சவூத் அஹ்மத் (20) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

  முஹம்மத் இம்ரான், முஹம்மத் ஹசன், ஷாஹித் அப்துர்ரஷீத், ஃபஹீம், சலீம் அஹ்மத், ஜமீல் அஹ்மத், கலீல் அஹ்மத், முஹ்ஸின் முஷ்தாக், முஹம்மத் தில்ஷாத், முஹம்மத் ஷஃபான், முஹம்மத் ஹாரூன், அய்யூப், முஹம்மத் ரிஸ்வான், அப்துல் பாஸித், முஹம்மத் தாவூத், சயீத் அஹ்மத், ஷம்சுல்லுஹா உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

  போலீசின் துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பு "காவி பயங்கரவாதிகள்" முஸ்லிம் முஹல்லாக்களில் புகுந்து வீடுகளை சூறையாடினர்.

  இக்ரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையடித்தனர்.

  வீடுகளுக்கு தீவைத்தனர்.

  தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க முயன்றபோதும், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தடுத்து நிறுத்தினர்.

  கலவரத்துக்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றது:

  1.மதியம் 2.30 மணியளவில் பாகிஸ்தானுக்கு எதிராக "இந்திய கிரிக்கெட் அணி" 167 ரன்னுக்கு "ஆல்-அவுட்" ஆனதைத்தொடர்ந்து, முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

  (விடுமுறை நாளான நேற்று, உள்ளூர் இளைஞர்கள் "கிரிக்கெட் ஆட்டத்தில் மோதல்" என்றும் சொல்லப்படுகிறது)

  2.முஸ்லிம் ஆட்டோ டிரைவரை தாக்கியது தொடர்பாக கேள்வி கேட்டபோது, கலவரக்கும்பல் முஸ்லிம்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

  3.முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் "சங்க பரிவாரங்கள்" வைத்திருந்த "மத-துவேஷ பேனரை கிழித்தது" தொடர்பில் கலவரம் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  வேதனை என்னவென்றால், 2.45 முதல் தொடர்ச்சியாக 3மணி நேரம் நடத்தப்பட்ட கல்வீச்சில் காயங்கள் ஏற்பட்டதே தவிர உயிரழப்புக்கள் இல்லை.

  கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய காவி சிந்தனை கொண்ட போலீஸ், முஸ்லிம்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது.

  இதனால், துலியா நகரத்தின் மச்லி பஜார், வலிபுரா, தாஷாபுரா, மவ்லவி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், உறைந்துபோய் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.

  வழக்கம் போல் போலீஸ், முஸ்லிம் வீடுகளின் கதவுகளை உடைத்து "நல்லிரவுக்கைது" கச்சேரிகளையும் அரங்கேற்றியது.

  http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/729--5-q100q

  பதிலளிநீக்கு
 6. நன்றி சகோ.குரு நாதன்.
  அத்தனையும் பொன்னான வரிகள்.
  ஒத்தடம் தரும் அருமருந்துகள் ஓய்.
  இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுக்கணும்போல இருக்கு மக்கா..!
  நாங்களும் தூத்துக்குடிலே எட்டு வருஷம் இருந்திருக்கோம்லா..!

  பதிலளிநீக்கு
 7. பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதியை மட்டும் ஏன் 'முஸ்லிம் தீவிரவாதிகள்" என அடையாளப் படுத்த வேண்டும்?

  தீவிரவாதச் செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவன் தீவிரவாதி. அவ்வளவுதான்.

  சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!//// உண்மையான வரிகர் சகோ.இதை அனைவரும் புரிந்து கொண்டால் பிரச்சனையே வராது.


  இணையதளங்களில் பலரும் இஸ்லாமியர்களைக் கடுமையாக சாடுகிறார்கள்.//// ஆம் சகோ,எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இஸ்லாமியர்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற சிலரின் கண்ணூட்டத்தால் நாங்கள் மனதளவில் மிகவும் வருத்தத்தில் உள்ளோம்.உங்கள் பதிவு எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.நன்றி சகோ...

  நபி (ஸல்) அவர்களிடம்,

  தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறியை சார்ந்ததா? என கேட்டதற்கு
  அது இனவெறியல்ல
  மாறாக தன் சமூகத்தார் பிற சமூகத்தார் மீது அநியாயமான முறையில் செயல்படுகிறார்கள் என்று தெரிந்த பின்பும் அவர்களுக்கு உதவுவதே இனவெறியாகும் என பதிலளித்தார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. என்னால் முடிந்தவரையில் பிறருக்கும் உணர வைப்பேன்.///

   மிக்க மகிழ்ச்சி சகோ

   இந்துக்கள்+இஸ்லாமியர்கள் ஒற்றுமையில்தான் இந்த தேசத்தின் வெற்றியே உள்ளது.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்துகிறேன்.

   நீக்கு
 8. ஒரு காபிரிடமிருந்து இப்படி அருமையான கருத்து வந்திருப்பது, எங்களது தொடர்ந்த பிரச்சாரம் வெற்றியடைந்திருக்கிறது என்று தெரிகிறது.

  தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல என்பதுதான் எங்கள்பிரச்சாரமும், ஆனால், பின்லாடனுக்கும், அஜ்மல் கசாபுக்கும் மசூதியில் ஜனஸா தொழுகை நடத்தி அவர்களை கௌவுரவப்படுத்துவோம். அப்போ அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. சும்மா முஸ்லீம்கள் அவ்வளவுதான்.
  இதற்காகத்தான் தலித் போராளி அஜ்மல் கசாபின் மறைவு.
  என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மந்தையில் ஒன்று கருப்(பாய்)
   கருப்பு ஆடு மே..மே ஹ்ஹ் மே

   நீக்கு
  2. சகோ.ஹைதர் அலி ஒரு சின்ன மாற்றம் ....கருப்புதான் ஆனால் இது ஆடு அல்ல..!!! *** அதே தான்.. :-))

   நீக்கு
  3. முஸ்லிம் பெயரில் எழுதி குழப்பாமல் சொந்த பெயரில் எழுதலாமே இப்னு ஷாகிர்.

   நீக்கு
  4. @shakiribnu
   என்ன சொல்ல வருகிறீர்கள்?

   நீக்கு
  5. //நான் இந்து தான். என் தந்தை பாரதிய ஜனதா உறுப்பினர்.
   எனக்கு பல இஸ்லாம் நண்பர்கள் உண்டு.
   ஆனால் நானும் சில வருடங்களுக்கு முன்பு வரை 'இஸ்லாமியர்கள் என்றாலே மோசமானவர்கள்' என்ற எண்ணத்தில்தான் இருந்தேன்.
   பின்னர்தான் உண்மையை உணர்ந்தேன்.
   என்னால் முடிந்தவரையில் பிறருக்கும் உணர வைப்பேன்.//
   I am really proud of you brother.. Many thanks to you..

   நீக்கு
 9. //இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க மாட்டான்.// நீங்கள் முறையாக அறிந்திருக்கிறீர்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்துகளை படித்த பின்னர்தான் இந்த பதிவே! அதையும் குறிப்பிட்டு உள்ளேன்!
   இன்னும் படிக்கிறேன்!நன்றி

   நீக்கு
  2. இஸ்லாத்தை முறையாகப் படிப்பது என்றால் நல்லக் கருத்துக்களை மட்டும் படிப்பது அல்ல. எல்லாப் புத்தகங்களிலும் நல்லக் கருத்துகள் உண்டு. முறைப்படி தெரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்.

   நீக்கு
  3. எல்லாப் புத்தகங்களிலும் நல்லக் கருத்துகள் உண்டு என்பதை அறிவேன்.
   சத்தியமா சொல்லுறேன். நேற்று இரவு கூட பைபிள் படித்தேன்.
   //முறைப்படி தெரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்.//
   அப்படி என்ன தவறான தகவல் பரப்பினேன்??

   நீக்கு
  4. //இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க மாட்டான்// இதுதான் அந்தத் தவறான தகவல்.

   நீக்கு
  5. What are you talking?
   Does Islam say to attack others?
   If so, prove it. Else just go away.

   நீக்கு
  6. பொது இடத்தில் ஒரு கருத்தை வைக்கும்போது அதற்கு மாற்றுக் கருத்துகளும் வரும். எரிச்சல்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இஸ்லாம் மற்றவர்களை தாக்க சொல்கிறது என்பதற்கு ஆதாரங்கள் கீழே கொடுத்துள்ளார்கள். விருப்பம் இருந்தால் படிக்கலாம். இஸ்லாத்தை ஆரம்பித்தவரே கொடுங்குற்றங்கள் செய்தவர்தான்.

   Read
   http://www.faithfreedom.org/

   நீக்கு
  7. @Robin
   //ஆதாரங்கள் கீழே கொடுத்துள்ளார்கள்.//
   ஆங்கில கோடங்கி தளம் போல் உள்ளது.

   நீக்கு
 10. //கரசேவை என்னும் பெயரில் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தீவிரவாதிகள்.// கரசேவைக்கான அர்த்தம் தெரிந்துகொண்டு வந்து பிளாக் எழுதுங்க? கரசேவை செய்பவர்களை பற்றி அவதூறு பேசினால் நாக்கு அழுகிவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் நான் சொன்னதன் அர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள்,
   கரசேவை பற்றியும் விளக்குங்கள்

   நீக்கு
 11. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் சிலர் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவர்களும், கெட்டவர்களும் எல்லா இடத்திலும் உண்டு

   நீக்கு
 12. //// நானும் சில வருடங்களுக்கு முன்பு வரை 'இஸ்லாமியர்கள் என்றாலே மோசமானவர்கள்' என்ற எண்ணத்தில்தான் இருந்தேன்.
  பின்னர்தான் உண்மையை உணர்ந்தேன்.///// அல்ஹம்துல்லாஹ் ....குரு நாதன் அவர்களுக்கு நன்றிகள் பல ...நேர்மையான கண்ணோட்டத்தின் மூலம் ..இந்த பதிப்பை பதிந்திருகீர்கள் ..தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 13. நன்றி தோழர் guru nathan

  சூடான ஐஸ்கீரிம் கிடைக்கும் என்று போர்டு போட்டால் எப்படி கேலிக்குரியதாக இருக்குமோ

  அப்படித்தான் இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்வதும்

  பதிலளிநீக்கு
 14. இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் மென்மேலும் உண்மையை அம்பலப்படுத்த ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு உள்ளனர்..எல்லா புகழும் இறைவனுக்கே !!!

  இதைப்போன்ற கருத்துக்களை சகோ. குரு நாதன் போன்றவர்களின் வாயிலாக வெளிவருவது உண்மைக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது...மென்மேலும் இது போன்று உண்மையை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

  நன்றி !!!

  பதிலளிநீக்கு
 15. நக்கூர் நாகப்பன் அண்ணாச்சியாக வந்தால் என்னவாம்?

  எல்லாப் புகழும் இந்த உலகின் ஒரே இறைவன் எங்கள் முனியாண்டிசாமிக்கே!

  பதிலளிநீக்கு
 16. I share the feelings of the friend... all killers are terrorists.. i accept . But cleverly he missed one incident... A gang who killed 68 people who were returned from ayothiya by fire by locked both the ways of train compartment... weather they are terrorists or not?

  பதிலளிநீக்கு
 17. உலக சரித்திரம் படிப்போம் ,சங்க இலக்கியம் படிப்போம் ஆனால் உடன் வாழும் மக்களின் உண்மை நிலை அறியோம்.
  முஸ்லிம் என்றால் உருது பேசுவோர் அல்லது அரபி பேசுவோர் இதுதான் இவர்கள் தாய்மொழி என்று நினைக்கும் மானிடரே சிறிது சிந்தியுங்கள் ,இஸலாம் உலகில் இரண்டாவது மார்க்கமாக உள்ளது .எந்த நாட்டில் உள்ளானோ அதுவே அவனுக்கு அது தாய் மொழியாக உள்ளது ,அதுபோல் தமிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் முஸ்லிமாக இருப்பினும் அவனுக்கு தமிழ் தாய் மொழி .முஸ்லிம் என்றால் மாமிசம் மட்டும்தான் சாப்பிடுவான் இப்படி சிலர் நினைக்கின்றனர் .அதுபோல் தீவிரவாதி என்றால் முஸ்லிம்தான் என்று கதை கட்டுகின்றனர் .ஒற்றுமை வேண்டா மக்கள் இதனை மிகைப் படுத்துகின்றனர்.முதலில் நல்ல நோக்கோடு உடன் வாழ்போரின் உள்ளம் அறிந்து நடங்கள் அனைவரும் சிறப்பாக வாழ்வோம். இந்து மத மக்கள் அனைவரும் தமிழரல்ல அதையும் நீங்கள் தெரிந்திருக்கலாம் .
  மதம் வேறு மொழி வேறு . அதுபோல் மனிதனுக்கு மனிதன் குணத்திலும் மாறுபடுவான் ஒருவன் செய்த குற்றம் அனைவருக்கும் தண்டனை வாங்கித் தராது .

  பதிலளிநீக்கு
 18. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை, அப்படி 150 கோடி பேரும் தீவிரவாதியாய இருந்தால் உலகம் அழிந்திருக்கும், ஆனால் மத தீவிரவாதத்தை மதங்கள் ஊடாக பல்வேறு இஸ்லாமிய பிரிவுகள், நாடுகள், மத தலைவர்கள் செய்து வருவதே வேதனையான உண்மை. மிதவாத முற்போக்கு இஸ்லாமியர்களின் கை கட்டப்பட்டுள்ளன ..

  பதிலளிநீக்கு
 19. உங்கள் நடுநிலையான கருத்தை வரவேற்கிறோம். மிக்க நன்றி.
  'முஸ்லிம்கள் செய்யும் தவறிற்கு இஸ்லாம் பொறுப்பல்ல' எனும் அடிப்படை விடயத்தை நீங்கள் புரிந்து கொண்டது போல் அநேகர் புரிய மறுப்பது தான் வேதனையான விடயம்

  பதிலளிநீக்கு
 20. குரான் மற்ற மதங்களில் (யூத மற்றும் கிருத்துவ) இருந்த கருத்துக்களை காப்பி செய்து தன்னுடையது போல பீற்றிக்கொண்டது.

  //"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32 //

  இப்பொழுது நீங்கள் மேற்கோள் காட்டி இருக்கும் இந்த வசனம் உட்பட.

  நீங்கள் முதலில் முழுமையாக குரானை கற்ற பின்பு கருத்துக்களை கூறலாமே.

  ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரன், பெண்களை வன்புணர்ந்தவன், போரில் தோற்றவர் வீட்டு பெண்மக்களை அடிமையாக பாலியல் வன்புணர்வு செய்தவன், அடிமைகளை கொடுமை செய்தவன், 6 வயது சிறுமியையும் விட்டுவைக்காத காமுகன், தன் மகனின் மனைவியை (மருமகளை) மனைவியாக்கி கொண்டவன், போர் குற்றவாளி, மனப்பிரழ்வு உடையவன் .....உலகிற்கு அறிவுரை கூறுவாராம். அவரை அனைவரும் மதிக்க வேண்டுமாம். புத்தியுள்ள எவனாவது ஏற்றுகொள்வானா? இதை தான் "சாத்தான் வேதம் ஓதுகிறது" என்பதா? உங்களைப்போல் நிறைய பேர் 'அவர்களிடம்' நல்ல பெயர் வாங்க அரைகுறை அறிவுடன், குரானை முழுதும் நீங்கள் படிக்காமல், எங்களை படித்துவிட்டு வா என்பது வேடிக்கையாக உள்ளது. அவன் ஒரு பலம் பொருந்திய பேட்டை ரௌடி, தாதா, பொருக்கி, கொள்ளை கூட்ட தலைவன் என்பதை தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை. என் உறவுகள் அவனை வழிபடுவதை கண்டு மனம் வெம்முகிறது. வெட்க படவேண்டிய விஷயம். மிதவாதிகள் என்போர் சற்றேனும் சிந்தித்து பார்க்கலாமே...தனிமையில்...இத்துனை பேர் இடித்து கூறுகிறார்களே, ஏன்? காரணம் என்ன என்று?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்களைப்போல் நிறைய பேர் 'அவர்களிடம்' நல்ல பெயர் வாங்க //நல்ல பெயர் வாங்கவா?
   வாங்கி என்ன பண்ணுறது?
   வீட்டுல போர்டு மாட்டி வைக்கவா?
   போங்க சார். நான் புரிந்துகொண்ட உண்மையை எழுதினேன்.
   இன்னும் எழுதுவேன்.

   நீக்கு
 21. "அப்படி அவர்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது"

  இல்லை. சாதாரண பொதுமக்கள் எப்படி நினைக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
  மதத்தை அரசியல் சார்ந்து சிந்திப்பவர்கள் சவுதியை பூவுலக சொர்க்கமாக உருவகப்படுத்துகிறார்கள்.
  உதாரணமாக பதிவர் சுவனபிரியன்
  http://suvanappiriyan.blogspot.com இந்த தளத்தில் போய் பார்த்தால் தெரியும். அவரை இல்லை இவனை (இந்த தேச துரோகிக்கு எதற்க்கு மரியாதை) பொறுத்தவரை சவூதி பூவுலக சொர்க்கம் இந்தியா பூவுலக நரகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "6 வயது சிறுமியையும் விட்டுவைக்காத காமுகன்," முக்கிய விடயம்.
   இன்று பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு இஸ்லாம் தான் தீர்வு என்று சொல்லும் இவரகள் முதாலவது பாலியல் வல்லுறவு வல்லுனரே முகம்மதுதான் என்பதை மறந்து விடுகின்றார்கள்.

   நீக்கு
  2. அண்ணே! வணக்கம்!
   இந்தியா என்பது பல தேசிய இனங்களை அடக்கி ஆளும் சிறைச்சாலை.
   நான் இந்தியன் கிடையாது.
   நான் தமிழன்.உங்கள் பாஷையில் சொல்லப் போனால் நானும் தேசத் துரோகியே!

   என் தமிழ்த்தேசியத்துக்கு என்றும் உண்மையானவன்

   நீக்கு
 22. "முஸ்லிம் என்றால் உருது பேசுவோர் அல்லது அரபி பேசுவோர் இதுதான் இவர்கள் தாய்மொழி என்று நினைக்கும் மானிடரே சிறிது சிந்தியுங்கள் "
  இஸ்லாமிய மானிடரே இலங்கையில் இஸ்லாமியர் தமிழரே அல்ல அவர்கள் தனியினம் என்று நிரந்தரமாக பிரிந்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

  புலிகள் முஸ்லிமாக மோதல் நடக்க முன்பே (100 ஆண்டுகளுக்கு முன்பே) இந்த கருத்துருவாக்கம் நடைபெற்று விட்டது.

  இந்து தமிழ் பெற்றோருக்கு பிறந்தவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அதன் பின் அவன் இஸ்லாமிய இனத்தவன் தமிழ் இனத்தவன் இல்லை என்று சொன்னால் எவ்வாறு நியாயப்படுத்த முடியும் ?

  பதிலளிநீக்கு
 23. தூங்கிட்டு வருவதற்குள் பல கருத்துக்கள் (மோதல்கள்).
  என்னை குரான் படிக்க சொல்லி பெயரில்லா நண்பர்கள் அறிவுரை சொல்லியுள்ளனர்.
  நல்ல கருத்துகளை படித்த பின்னர்தான் இந்த பதிவே! அதையும் குறிப்பிட்டு உள்ளேன்!
  இன்னும் படிக்கிறேன்!நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை குரான் படிக்க சொல்லி பெயரில்லா நண்பர்கள் அறிவுரை சொல்லியுள்ளனர்.///

   ஆம் சகோ அதான் சரி மாற்றுக்கருத்து உடையவர்களாயினும் அவர்களின் கருத்தை மதிக்கும் வண்ணம் (உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில்) இறை நாடினால் குரானை முழுவதுமாக படித்து விடுங்கள். :)

   http://www.tamilquran.in/

   நீக்கு
 24. // என்னைப் பொறுத்தவரையில் 'அல்லா ஹூ அக்பர்" என்பது அடிமைத்தனத்துக்கு எதிரான முழக்கம்.//
  மனிதனை கைகளை பின்னால் கட்டி வைத்து கொண்டு 'அல்லாஹு அக்பர்' என்று முழங்கி கொண்டே அவனது கழுதை கத்தியால் அறுக்கிறார்களே, அந்த முழக்கத்திற்கு என்ன பொருள் என்று சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். நீங்கள் கூட தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவனோ ஒருவன் எங்கோ தவறு செய்வதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறைகூற வேண்டாம் என்பதே எனது கருத்து.

   எந்த வீடியோ காட்டினாலும் நம்பிக்கொண்டே இருங்கள். நல்லா வருவீங்க

   நீக்கு
 25. 9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

  இந்த ஒரு வசனம் போதுமே,,,,, நீங்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று நிருபிக்க..

  பதிலளிநீக்கு
 26. பெண்களை அடிமையாக , உடற்சுகத்துக்கு மட்டும் என்று இஸ்லாம்(முகமது) கருதியதால் தான் இந்த மாதிரி ஹதிஸ் இருக்கிறது.

  //5193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
  ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்//

  //"எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்." (4: 34)//

  //குரான் “2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129//

  அதாவது சிறுவயதிலேயே இந்த மாதிரி சொல்லி வளர்ப்பதினால் தான் அவர்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் பர்தா போட்டுக்கொண்டு - ஆண்கள் சொல்வதை கேட்கிறார்கள் .. இது தான் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம்.

  பதிலளிநீக்கு
 27. முஸ்லீம்கள் முஸ்லீம்களோடு மட்டுந்தான் பழக வேண்டும். காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது.

  3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்

  4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?

  5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

  5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

  உங்களது நெருங்கிய உறவினர்கள் காபிர்களாக இருந்தால் அவர்களையும் உதற வேண்டும்.

  9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

  58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

  பதிலளிநீக்கு
 28. குரான் 2:178 இப்படிக் குறிப்பிடுகிறது

  ' ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். ..'

  ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் - குரான் 4:34

  குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். - குரான் 2:233

  தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள்-- குரான் 3:14

  பதிலளிநீக்கு
 29. அனைவரின்மீதும் அமைதி உண்டாகட்டும் !

  இங்கு ரெங்கா என்பவர் சில வசனங்களை எங்கிருந்தோ காப்பி பேஸ்ட் செய்துள்ளார் ..இவைகளை பார்க்கும் போது ஏற்கனவே நாம் பலமுறை பதிலளித்த புளித்து போன குற்றசாட்டாகவே இருக்கிறது..மறுபடி மறுபடி பதிலளிப்பது நமக்கு தேவை இல்லாத வேலை என்றாலும் ஒரு குற்ற சாட்டையவது இவர்கள் நேர்மையாக வைக்க மாட்டார்கள் என்பதற்கு ஒரே ஒரு வசனத்தை மட்டும் இங்கு எடுத்துக்காட்டுகிறேன்...

  அவர் கடைசியில் தந்த வசனம் ...

  //தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள்-- குரான் 3:14//

  இதில் இவர் என்ன சொல்கிறார் என்றால் உலகில் உள்ள எல்லா செல்வங்களும் மனிதர்களுக்கு சுகம் தருவது போல் பெண்களும் சுகம் தரும் பொருட்கள்..அப்படி அல்லாஹ் சொல்கிறான்..இதுதான் ஆணாதிக்கமதம் என்கிறார்..

  இங்கு இதனுடைய ஒரிஜினல் தமிழாக்கம் தருகிறேன் பாருங்கள் ....இரண்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று ..

  " 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு."

  (http://www.tamililquran.com)

  இங்கு உலகில் எல்லாமே நிலையற்ற சுகங்கள்..இவைகள் மனித கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது ...ஆனால் இறைவனிடத்தில்தான் உண்மையான் அழகானது உண்டு..இதற்க்கு அடுத்த வசனத்தை பாருங்கள்

  " 3:15. (நபியே!) நீர் கூறும்; ''அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். "

  இப்படி எல்லாமே இங்கு உனக்கு அழகாக்கப்பட்டிருப்பதால் அதனை நோக்கி நீ செல்லாதே..அந்நிய பெண்களை கண்டால் உன் பார்வைகளை தாழ்த்திக்கொள் ...உனக்கு வழங்கப்பட்ட செல்வத்தில் ஏழைகளுக்கு தருமம் கொடு..! இந்த உலகம் ஒரு சோதனைதான் ...இன்னும் அல்லாஹ் சொல்படி கேட்டால் உனக்கு தரும் பரிசு இந்த உலகைவிட சிறந்தது..

  எப்படி உள்ள ஒரு வசனத்தை எப்படி மாற்றி தருகிறார்கள் பாருங்கள்..இவர்களை என்னத்த சொல்ல.. :-))

  பதிலளிநீக்கு
 30. அய்யா குருநாதன் முதலில் உங்களுக்கு என் நன்றிகள்.

  எப்போதுமே தமிழக வலைப்பதிவு வரலாற்றில் "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்" இணைத்து எந்த விதமான பதிவு எழுதினாலும் "ஹிட்ஸ்" அல்லும். அதற்காகவே பலரும் ஒருமுறையாவது முயன்று பார்ப்பார்கள். ஆனால் உங்களை அந்த வட்டத்திற்குள் அடைக்க நான் விரும்பவில்லை. உங்கள் உள்ளத்தில் கிடக்கும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.

  இஸ்லாத்தின் மீது நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் தீவிரவாத பிம்பத்தை எங்கே குருநாதன் அசைத்து விடுவாரோ என்று அஞ்சி கூக்குரலிடுகிறார்கள். அதிலும் "பெயரில்லா" வாக வந்து வேற வீரம் காட்டுகிறார்கள். இதில் முஸ்லிம் பெயரில் வந்தும் வேறு, காமெடி கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். இவர்களின் அச்சம் எப்படியெல்லம் வெளிப்படுகிறது பாருங்கள்.

  இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 31. @உதயம்

  எல்லாவற்றையும் விடுவோம்.
  பதிவர் குரு நாதன் கூறிய பதிலான
  "புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் சிங்களர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழர்களை அழித்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே எதிரானவர்கள். வேறு பல விடுதலை இயக்கங்கள் நடத்திய கொடூரங்களுக்கு புலிகள் பொறுப்பு கிடையாது.
  இதை பற்றி தலைவர் பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.அடுத்து அதை பற்றி ஒரு கட்டுரை இடுகிறேன். வீணாக புலிகள் மீது சேறு வாரி இறைக்க வேண்டாம்"

  என்பதற்க்கு மதவெறியர் வாஞ்சூர் (உண்மைகள் என்ற பெயரில் பதிவுலகில் வாந்தி எடுக்கும் பொய் காரன்) ன் பதில் என்ன ?

  முதலில் அதற்க்கு பதில் கூறுங்கள்? இது உதயத்துக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 32. சில விசயங்களை பார்ப்போம்.
  90களின் ஆரம்பத்தில்தான் இந்த தீவிரவாதம் என்ற வார்த்தை மிகவும் பிரபலம் ஆனது(அதற்கு முன்ன்பே இருந்திருக்கு). அந்த தீவிரவாத இயக்கங்கள் பெயர்கலெல்லாம் உச்சரிக்க கொஞ்சம் கஷ்டமான அரபு வார்த்தைகள். உதா: லஷ்கர்-இ-தொய்பா, ஹமாஸ், ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி, ஹிஸ்புல்லா, அல் கொயிதா. and etc.

  இப்பொது சரளமாக சொல்லும் வார்த்தை அப்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த இயக்கங்களுக்கு எல்லாம் ஒரு ஒற்றுமை அது இஸ்லாம் மதம் சார்ந்தது. அதனால் உச்சரிக்க தெரியாதவர்கள் அதை இஸ்லாம் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று சொல்லுவார்கள். அதுவே பின்னாளில் பழகி விட்டது . ("நக்சலைட்டு இயக்கம்" என்ற வார்த்தை ஈசிய இருந்ததால, யாரும் மேற்கு வங்கஇயக்கம் சொல்லல)
  பள்ளிபருவத்தில் நாங்கள் புதுவகுப்புக்கு சென்றபோது, அந்த ஆசிரியருக்கு நண்பனின் அரபி பெயர் அடிக்கடி மறந்து விடுவதால் அவனை "வாப்பா வாப்பா" என்று அழைக்க ஆரம்பித்தார். "என்னடே வாப்பா! ஏன்டே ஸ்கூல்லுக்கு வரல நேத்து" என்பார். பின்னாளில் ஆசிரியருக்கு அவன் பெயர் பழகிவிட்டது என்றாலும், அவன் பெயர் வாப்பா என்பது நிலைத்து விட்டது. இப்போதும் ஊருக்கு போனால் அவனை வாப்பானுதான் கூப்புடுவொம்.

  விசயத்திக்கு வருவோம். இங்கே பிரச்சனை என்னனா இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சொல்லல(சில படிக்காத அறிவாளிகள் தவிர). இது பண்புள்ள படித்த இஸ்லாமியர்களுக்கும் நல்ல தெரியும். ஆனால் அவர்களுக்கு உள்ளேயே சிலர் "நம் அனைவரையும் தான் திவிரவதினு சொல்லுகிறார்கள்" என மூட்டி விடுவார்கள். அதனால்தான் இந்த கலவரங்கள். இப்போது இவர்களின் சிறுபிள்ளைதனமான போராட்டம், நாளை படித்து வளரும் இஸ்லாமிய சமுதாயம் சிரிக்காமல் இருந்தால் சரி. நம் முன்னோர்கள் இதற்க்கெல்லமா போராடினார்கன் என்று?
  .
  சுவனபிரியன் & கோ மாதிரி ஆட்கள் எல்லாம் மேலே சொன்ன இயக்கங்கள் எல்லாம் கொலையே பண்ணவில்லை. அது இஸ்லாமிய குழந்தைகளுக்கு பெபெர்மின்ட் மிட்டாய் வாங்கி கொடுக்கும் இயக்கம். அமெரிக்காதான் சதி செய்து தீவிரவாத இயக்கமாக அறிவித்துவிட்டது என்பார். தப்பு செய்தவன் தன்னோட இனம் என்ற ஒரே காரணத்துக்காக அவனை ஆதரிக்கலாமா?. மனிதன் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்கு அபுறம் பிறந்த கடவுளுக்கு (நாம் கடவுள்னு நினைக்க்கும் கடவுளுக்கு) கொடுக்கும் மரியாதையை, சீனியாரிட்டி படி மனிதனுக்கே கொடுத்தால் நல்லது.

  PS:-
  விஜயகாந்த், அர்ஜுன், விஜய், கமல் இவர்களின் படங்களை திவிரவாதியைதான் எதிர்பதாக இருக்கும். எந்த முஸ்லிம்களையும் எதிர்பதாக இருக்காது (இவர்களே இஸ்லாமியர்களாக நடித்தும் இருக்கிறார்கள் சில படங்களில்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன அருமையான(??) விளக்கம்!!
   ரூம் போட்டு யோசிப்பீங்களா?
   உங்கள மாதிரி ஆட்களுக்குதான் இந்த பதிவே!!!

   கமல் இஸ்லாமியர்களை மிக கொச்சையாக பல படங்களில் சாடியிருக்கிறார்.
   சொல்ல விருப்பமில்லை

   நீக்கு
  2. /*கமல் இஸ்லாமியர்களை மிக கொச்சையாக பல படங்களில் சாடியிருக்கிறார்.*/

   இருக்கலாம். என்னோட கேள்வி எல்லா இஸ்லாமியர்களையுமா சொன்னார்?. குருதிபுனல் படத்தில் ஒரு இயக்கத்தையே சாடி இருப்பார். அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. நான் ரூம் போட்டு யோசிகுறது இருக்கட்டும். நீங்கள் யோசிக்கவே மாடிங்குகிரின்களே. அவர்கள் சொல்ல்வது போலவே அந்த பழம்தான் அண்ணே இதுனு சொல்லுரிங்க. இதுக்கு அப்புறம் யோசிக்கத தெரியாத உங்களிடம் என்ன விளக்கம் சொன்னாலும் அதே பழ கதையைத்தான் சொல்லுவிர்கள்.

   நீக்கு
  3. ஹேராம் படத்தில் "நீங்க உங்க நாட்டுக்கு போங்க டா" என்று கமல் சொன்னாரே!!

   விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
   ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
   "பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "


   அது எல்லோரையும் பார்த்து சொன்னதுதானே!

   நீக்கு
  4. ஹேராம் படத்தின் வசனம்:
   கமல்: கைபர் கணவாய் வழியாக வந்த விதேசிகள் தானே நீங்கள் எல்லாம்.
   ஷாருக்: நாங்க கைபர் கணவாய் வழியாக வந்தோம் என்றடல் உங்க ராமரும் அதே வழியாக வந்தவர் தானே.

   அந்த படத்தை நன்றாக பாருங்கள். அரைகுறையாய் பார்த்து இதைதான் சொன்னார், அதைதான் சொன்னார்னு முடிவு பண்ண கூடாது. அது வன்முறைக்கு, மதவெறிக்கு எதிரான படம். கேன்சர் வழிப்புணர்வு பற்றி படம் எடுக்கணும்னா சிகரட் குடிக்கும் காட்சி வைக்கத்தான் வேண்டும். கேன்சர்க்கு எதிரான படம்னு சொல்லிட்டு ஹீரோ இப்படி சிகரட் குடிச்சுடு இருக்கானே கேட்குறமாதிரி இருக்கு உங்க கேள்வி.

   /*விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா. ஹைதராபாத் சார்மினார்..... */

   அதான் அப்போதே சொன்னேனே, கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை, அதற்க்கு முன் உருவான மனித இனத்துக்கு கொடுத்தால், இவன் சொன்னதும், 100 கோடி இந்துக்களை கொல்லணும்னு அதே இன்னொரு ஹைதராபாத்காரன் சொன்னதும் தான அடகிவிடும். இவர்கள் எல்லாம் மதவியாபாரிகள், மதம் இல்லனா இவர்கள் பிழைக்க முடியாதுனு எல்லாரும் உணர்ந்தாலே போதும்.

   நீக்கு
 33. // shakiribnu7 ஜனவரி, 2013 4:58 am
  பின்லாடனுக்கும், அஜ்மல் கசாபுக்கும் மசூதியில் ஜனஸா தொழுகை நடத்தி அவர்களை கௌவுரவப்படுத்துவோம்.//

  இந்த பின்னூட்டத்தை படிக்கும் போதே தெரிகிறது இது முஸ்லிம் பெயரில் ஒளிந்திருக்கும் குள்ளநரிகளில் ஒன்று.

  பதிலளிநீக்கு
 34. // பெயரில்லா7 ஜனவரி, 2013 7:48 pm
  "6 வயது சிறுமியையும் விட்டுவைக்காத காமுகன்," //

  அணாமதேயரே!
  அந்த சிறுமி உங்களிடம் வந்து சொன்னாரா..???

  பதிலளிநீக்கு
 35. @குருநாதன்
  நல்ல பதிவு.
  எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பவன் ஒருவிதத்தில் தீவிரவாதி.எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்பதே உண்மை.
  எல்லா மதங்களிலும், மத நூல்களிலும் நல்ல விடயங்களும் உண்டு கெட்ட விடயங்களும் உண்டு.
  இந்து மதத்தில்,மத புத்தகத்தில் உள்ள கெட்ட விடயங்களை கேட்டால் நீங்கள் பட்டியலிடுவீர்கள்,பெரும்பாலான் இந்துக்களும் செய்வார்கள்.
  இதே நீங்கள் இசுலாமிய மதத்ததில்,குர்ஆனில் நல்ல விடயங்களும் உண்டு கெட்ட விடயங்களும் உண்டு என்று கூறினால் அதை எத்தனை முஸ்லிம்கள் ஏற்பார்கள் என நினைக்கிறீர்கள்? அரிதினும் அரிதாக ஓரிருவர். அப்படி குரல் கொடுத்தவர்களையும் பிறர் ஒத்துக்கி வைத்துவிட்டனர். இதுதான் இசுலாமில் உள்ள பிரச்சனை.
  மற்றபடி இசுலாமிலும் பல நல்ல கருத்த்துக்கள் உண்டு,ஆன்மிகம் உண்டு, முகமது நபியும் இறைதரிசனம் பெற்றவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

  எந்தவொரு புத்தகமும் சட்டமும் அது உருவாக்கப்படும் காலத்திற்கு ஏற்றாற்போலத்தான் உருவாக்கப்பட்டுள்ளது,காலத்திற்கு தகுந்தாற்போல அதில் மாற்றங்கள் வேண்டும் என்பதை உணர்ந்தால் உலகில் எந்த பிரச்சனையும் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு வந்து மத ஆராய்ச்சி பண்ணுவது என் பணியல்ல.

   'முஸ்லிம் தீவிரவாதி' என்ற வார்த்தை தவறானது.
   அதை சொல்லவே இந்த பதிவு!

   நீக்கு
  2. மத ஆராய்ச்சி பண்ணாமல் உங்களால் உண்மையை என்றுமே உணரமுடியாது :)

   நீக்கு
 36. @உதயம்

  எல்லாவற்றையும் விடுவோம்.
  பதிவர் குரு நாதன் கூறிய பதிலான
  "புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் சிங்களர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழர்களை அழித்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே எதிரானவர்கள். வேறு பல விடுதலை இயக்கங்கள் நடத்திய கொடூரங்களுக்கு புலிகள் பொறுப்பு கிடையாது.
  இதை பற்றி தலைவர் பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.அடுத்து அதை பற்றி ஒரு கட்டுரை இடுகிறேன். வீணாக புலிகள் மீது சேறு வாரி இறைக்க வேண்டாம்"

  என்பதற்க்கு மதவெறியர் வாஞ்சூர் (உண்மைகள் என்ற பெயரில் பதிவுலகில் வாந்தி எடுக்கும் பொய் காரன்) ன் பதில் என்ன ?

  முதலில் அதற்க்கு பதில் கூறுங்கள்? இது உதயத்துக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 37. ப்ரோஸ், எந்த மத வெறியரும் தீவிரவாத செயலில் ஈடுபடமாட்டார்கள் என்பதே என் கருத்து. ஏன்னா எந்த மதமும், மார்க்கமும் அடுத்தவர்களை துன்புறத்த சொல்லவில்லை. ஆகவே தீவிரமா மதத்தை, மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இச்செயலில் ஈடுபடமாட்டார்கள். அரைகுறைகள் மட்டும் செய்வார்கள். ரைட்டோ?

  பதிலளிநீக்கு