டெல்லியில் 57-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் இன்று காலை
தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப்
பேசினார். பின்னர் மாநில முதல்வர்கள் பேசினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா
பேசிக் கொண்டிருந்த போது 10-வது நிமிடத்தில் மணி அடித்து அவரை நிறுத்துமாறு
கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஜெயலலிதா தமது
எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/27/india-jayalalitha-walks-of-ndc-meet-166958.html
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/27/india-jayalalitha-walks-of-ndc-meet-166958.html
இந்திய அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்திய அரசே!
காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை, குறிப்பாக தமிழகத்தை பல வழிகளில் வஞ்சிக்கும் தான்தோன்றித்தனத்தை நிறுத்திக் கொள்!
அனைத்து மாநிலத் தலைமையும் தங்களுக்கு பணிவார்கள் என நினைக்காதே! தலைமை பணிந்தாலும் மக்கள் பணியமாட்டார்கள்.
காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை, குறிப்பாக தமிழகத்தை பல வழிகளில் வஞ்சிக்கும் தான்தோன்றித்தனத்தை நிறுத்திக் கொள்!
அனைத்து மாநிலத் தலைமையும் தங்களுக்கு பணிவார்கள் என நினைக்காதே! தலைமை பணிந்தாலும் மக்கள் பணியமாட்டார்கள்.
தமிழர்களின் பிரதிநிதியை அவமதித்தது மூலம் ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதித்துள்ளது இந்திய அரசு.
தமிழர்கள் அனுபவிக்கும் இன்னல்களை விவரிப்பதற்கு ஒரு நாள் போதாது. இந்த லட்சணத்தில் பத்து நிமிடம் எப்படி முடியும்??
இந்த பத்து நிமிடத்தில் எதைப் பற்றி பேசுவது?
இந்த பத்து நிமிடத்தில் எதைப் பற்றி பேசுவது?
காவிரியில் எங்கள் உரிமையைத் தராமல் உள்ளாயே! அதைப் பற்றி பேசுவதா??
பயிர்கள் வாடுகிறதே! அதைப் பற்றி பேசுவதா??
அதனால் எம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே! அதைப் பற்றி பேசுவதா??
அதனால் எம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே! அதைப் பற்றி பேசுவதா??
இலங்கையால் துன்புறுத்தப்படும் மீனவர்கள் பற்றி பேசுவதா?
தமிழகத்திற்கு மின்சாரம் தராமல் பிற மாநிலங்களுக்கு கொடுக்கிறாயே! அதைப் பற்றி பேசுவதா??
அந்நிய முதலீடு அனுமதித்து வணிகர்களை நசுக்குகிறாயே! அதைப் பற்றி பேசுவதா??
எம் இனத்தை அழித்த கொடுங்கோலன் ராஜபக்சேவை வரவேற்று விருந்து கொடுக்கிறாயே! அதைப் பற்றி பேசுவதா??
இலங்கை ஓநாய்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என்கிறாயே! அதைப் பற்றி பேசுவதா??
தமிழர்களுக்கான நீதியை/உரிமையை இந்திய அரசிடம் எதிர்பார்க்க முடியாது. அது நமக்கானது அல்ல. ஐந்து வருசத்துக்கு ஒருமுறை வாக்குகளை பொறுக்க மட்டுமே நம்மைப் பற்றி யோசிப்பார்கள். அதனால் இந்திய அரசை ஓரங்கட்டுவோம்.
நம்ம விசயத்துக்கு வருவோம்.
முதல்வர் அவர்களே!
அதே நேரத்தில் உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களையாவது அழைத்து, உபசரித்து பத்து நிமிடம் கொடுத்தார்கள். நீங்கள் எங்களுக்கு அதை கூட தரவில்லையே!!
"கூடன்குளம் மக்களில் ஒருத்தியாக இருப்பேன்" என்று உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு அதே மக்களை அடித்து, வீடுகளை நொறுக்கி அவர்களை அகதிகளாக மாற்றினீர்களே!
லூர்துசாமி என்னும் முதியவரை குண்டர் சட்டத்தில் அடைத்தீர்களே!
உங்களின் காட்டாட்சிக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே அவதிப்படுவது தமிழக மக்கள்.
என்றைக்காவது ஒருநாள் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம்..............................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக