செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மதம் மனிதனை மிருகமாக்கும்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பற்றியும், வேடமணியும் பக்தர்கள் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார்கள் மோகன் சி லாசரஸ் தலைமையிலான அல்லேலூயா கோஷ்டியினர்.

அந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு தசரா திருவிழாவில் தன் விஷம அரசியலை விதைக்க  இந்துத்வ கும்பல் கிளம்பியிருக்கிறது.

மதம் மனிதனை மிருகமாக்கும்.குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து கடவுளாக வழிபட்டனர். முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள்.  அவ்வாறான அம்மனுக்கு இந்து அடையாளம் கொடுத்து அயோக்கியத்தனம் செய்கிறது இந்துத்துவ கும்பல்.

தன் முதுகில் உள்ள அழுக்கை துடைக்காமல் அடுத்தவனை குறை கூறுகிறது மோகன் சி லாசரஸ் கும்பல்.

source: http://tutyonline.in/node/9430

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக