ஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில முட்டாள்களின் தொல்லை தாங்க முடியல..
படம் ஆயிரம் கோடி கலெக்ஷன், செம ஹிட், மாஸ் என கதை விடுகிறார்கள். (
தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில முட்டாள்களின் தொல்லை தாங்க முடியல..
படம் ஆயிரம் கோடி கலெக்ஷன், செம ஹிட், மாஸ் என கதை விடுகிறார்கள். (
ஒருவேளை அவர்களுக்கு மட்டும் வேற படத்தைக் காட்டிவிட்டார்களோ!!)
அது எக்கேடும் கெட்டு போகட்டும்.
ஆனால் லிங்கா படத்தை விமர்சித்த சில பேஸ்புக் ஐடிகள், இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஜனநாயக விரோத செயல்.
படத்தை நூறு, இருநூறு கொடுத்து பார்க்கிறவன் விமர்சனம் பண்ணதான் செய்வான்.
விமர்சனம் வரக்கூடாது என்றால் படத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
லிங்கா பட தயாரிப்பாளர் அவர்களே,
இணையத்தில் படத்தை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தீங்களாமே!!
ஏன் ஆந்திரா, கேரள, கன்னட போலீசிடம் புகார் கொடுக்கவில்லை?
தமிழன் என்ன இளிச்சவாயனா??
தமிழனின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழன் நெகடிவ் விமர்சனம் வைக்க கூடாது. அப்படிதானே!!!
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ரஜினிக்கு மேக்-ஆப் போட செலவழிச்ச பணம் மற்றும் நேரத்தில் இன்னொரு படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.
லிங்குசாமியா இருந்தாலும், லிங்காவாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்..
இப்ப, இந்த பக்கத்தை முடக்குங்கள் பார்ப்போம்.
நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள்: அய்யா, உங்க வயதுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்து நல்ல படம் கொடுக்க முயற்சி செய்யுங்க. சுத்தியிருப்பவர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் பேச்சைக் கேட்டு மொக்கைப் படத்தை ஏற்றுக் கொள்ளாதீர்..