வியாழன், 18 டிசம்பர், 2014

லிங்காவும், ஜனநாயக விரோதமும்

ஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில முட்டாள்களின் தொல்லை தாங்க முடியல..
படம் ஆயிரம் கோடி கலெக்ஷன், செம ஹிட், மாஸ் என கதை விடுகிறார்கள். (
ஒருவேளை அவர்களுக்கு  மட்டும் வேற படத்தைக் காட்டிவிட்டார்களோ!!)

அது எக்கேடும் கெட்டு போகட்டும்.
ஆனால் லிங்கா படத்தை விமர்சித்த சில பேஸ்புக் ஐடிகள், இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஜனநாயக விரோத செயல்.
படத்தை நூறு, இருநூறு கொடுத்து பார்க்கிறவன் விமர்சனம் பண்ணதான் செய்வான்.
விமர்சனம் வரக்கூடாது என்றால் படத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

லிங்கா பட தயாரிப்பாளர் அவர்களே,
இணையத்தில் படத்தை விமர்சிப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தீங்களாமே!!
ஏன் ஆந்திரா, கேரள, கன்னட போலீசிடம் புகார் கொடுக்கவில்லை?
தமிழன் என்ன இளிச்சவாயனா??
தமிழனின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழன் நெகடிவ் விமர்சனம் வைக்க கூடாது. அப்படிதானே!!!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ரஜினிக்கு மேக்-ஆப் போட செலவழிச்ச பணம் மற்றும் நேரத்தில் இன்னொரு படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.

லிங்குசாமியா இருந்தாலும், லிங்காவாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்..
இப்ப, இந்த  பக்கத்தை முடக்குங்கள் பார்ப்போம்.

நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள்: அய்யா, உங்க வயதுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்து நல்ல படம் கொடுக்க முயற்சி செய்யுங்க. சுத்தியிருப்பவர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் பேச்சைக் கேட்டு மொக்கைப் படத்தை ஏற்றுக் கொள்ளாதீர்..

செவ்வாய், 16 டிசம்பர், 2014

எல்லா குழந்தைகளும் குழந்தைகளே.. - சின்ன ஆதங்கம்

பள்ளி நிர்வாக சீர்கேட்டால் கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

முறையான மருத்துவ சிகிச்சையின்மையால் தர்மபுரியில் இறந்த குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்தினோம்.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான பாலஸ்தீன குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

தாலிபான் தாக்குதலால் பலியான பாகிஸ்தான் குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்துகிறோம். 

உலகின் எந்த மூலையில் யார் இறந்தாலும் வருந்துகிறானே தமிழன்..

ஆனால் சிங்கள இனவெறி தாக்குதலால் பலியான ஈழத்துக் குழந்தைகளுக்காக நீங்கள் என் கண்ணீர் சிந்தவில்லை??
மனிதாபிமானிகளே! ஏன் கள்ள மௌனம் காத்‌தீர்கள்?

#ஆதங்கம்.



================

ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகளின் தலை துண்டிப்பு பயங்கரவாதம், ஆஸ்திரேலியா உணவகத்தில் பயங்கரவாதம், பாகிஸ்தான் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என சமீபகாலமாக பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் போகிறது.

தீவிரவாதத்தின் ஆணிவேரை அறிந்து முழுமையாக ஒழிக்க வேண்டும்.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழினவாதம் தொடர்பான கட்டுரைக்கு இந்தியவாத மகஇகவுக்கு பதில்

வினவு இணையதளம் தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள் என்னும் தலைப்பில் ஒரு நேர்காணல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற தமிழினவாதிகள் சொல்வதாக கட்டுரை உள்ளது. (யார் அந்த தமிழினவாதிகள் என்று இறுதிவரைக்கும் கட்டுரையில் சொல்லவில்லை.)

இந்திய ரயில்வேயில் தமிழர்க்கு சம உரிமை இல்லை.
இந்திய பணி தேர்வுகளில் தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்தி ஆதிக்கம் அதிகம்  உள்ளது. இந்தி அல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அதைப் பெற்றி நாம் பேசினால் 'தமிழினவாதமாம்'.
வெளிமாநில தொழிலாளிடம் சென்று சிண்டு முடியும் வேலை செய்யும் இவர்கள் செய்வது புரட்சியாம்.

அவர்களின் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:

வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.
வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
அதில் என்ன தவறு?
பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!

குறைந்த கூலிக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
அவர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக்கொடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

திங்கள், 8 டிசம்பர், 2014

சமத்துவமாக வாழு, சமத்துவத்தோடு வாழ விடு

 'The angst of the Tamil brahmin: Live and let live' என்னும் தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.
தமிழ்நாட்டுல பார்ப்பனர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று பத்ரி சேசாத்ரி என்பவர் அழுது புலம்பியுள்ளார்.
(நடிகன் டா!)

தமிழக கிரிக்கெட்டில் பார்ப்பான் ஆதிக்கம் இருக்குதுன்னு உண்மையை சொன்னால் இவருக்கு ஏன் கோவம் வருது?

சென்னையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள ப்ளாட் ஒன்றில் பல வீடுகளை பார்ப்பனர்கள் வாங்கியுள்ளார்கள்.
அது நமக்கு பிரச்சினை இல்லை. வாங்குவதும் விற்பதும் சொந்த விசயம்.
ஆனால் அங்கே கோடிக் கணக்கில் கொட்டி கொடுத்தாலும் பார்ப்பான் இல்லாதவருக்கு வீடு கிடையாதாம்!!
இங்கே ஒதுக்கப்படுவது யார்?

கோயம்பேடுல கருவாடு விற்க கூட தடை போடும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவது யார்?

சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமியை கோவிலுக்கு வெளியே தூக்கிப்போட்டு ரவுடித்தனம் செய்தது யார்?
தமிழையும் தமிழர்களையும் கோவிலை விட்டு வெளியேற்றியது யார்?

தமிழக அரசியலில் பார்ப்பனர்களே இல்லையாம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க உள்ள பார்ப்பன அமைப்புகள் ஒன்றுக்கூடி தங்களின் அடியாளான மோடிக்கு ஆதரவு கொடுத்தீர்களே! பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தீர்களே! இதெல்லாம் அரசியலில் வராதா?

ஊடகத்துறையில் உங்க ஆதிக்கம்தானடே இருக்குது!! அதையெல்லாம் வசதியா மறந்துட்டீங்களே!

தனக்கு உள்ள சக்தியை வைத்து மோடியை பிராமணன் ஆக்குகிறேன் என்று பொறுக்கிசாமி சொன்னானே!
(அது என்ன சக்தி!)
தமிழர்களை ஒடுக்க பிராமணப் படை அமைப்பேன் என்றும் சொன்னானே!
அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? எத்தனை பார்ப்பனர்கள் அந்த திமிர்ப் பேச்சைக் கண்டித்தீர்கள்?


சிம்பதி(Sympathy) உருவாக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் போடுகிறார் பத்ரி சேசாத்ரி!!

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பார்ப்பான் சொன்னது:
"கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய பிராமணரைத் தவிர வேறு எவனுக்கு அருகதை இல்லை"

இதுதான் ஆதிக்கம், கொழுப்பு.
அதை முதல்ல நிறுத்துங்கடே!
அதற்குப் பின்னர் 'வாழு, வாழ விடு'ன்னு சமத்துவம் பேசலாம்.

குறிப்பு: பார்ப்பானையே குறை சொல்வதால் பிற சாதி வெறியர்கள் இன்பம் கொள்ள வேண்டாம்.
பார்ப்பானைப் போன்றே இன்ன பிற சாதி வெறியர்களும் ஆபத்தானவர்களே! புறக்கணிக்கப்பட வேண்டியவர்களே!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

பனையோலைக் கொழுக்கட்டை செய்யும் முறை

பனையோலைக் கொழுக்கட்டை சாப்பிட்டு நாலு வருடங்களுக்கும் மேலாகிறது.
சென்னையில் பனையோலையும் இல்லை, பனை மரமும் இல்லை.
இந்தக் கார்த்திகைக்கு (இன்று) எப்படியாவது சாப்பிட வேண்டும்,
ஊருல இருந்து பனையோலை வருகிறது.  :)


கொழுக்கட்டையை ஓலைக்குள் வைப்பது, ஓலையைக் கட்டுவது மட்டுமே எனக்குத் தெரியும்.
ஆனாலும் சமையல் குறிப்பை(?) தோராயமாக எழுதுகிறேன்.

தேவையானவை: பச்சரிசி, பொடியாக்கப்பட்ட கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது பொடியாக்கப்பட்ட மண்டை வெல்லம், வறுத்த சிறுபருப்பு.
இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
(அதிக தண்ணீர் சேர்த்தால் ஓலைக்குள் சரியாக வைக்க முடியாது. வைத்தாலும் வெப்பத்தில் இளகிவிடும்.அப்புறம் கொழுக்கட்டை கிடைக்காது. கூழ்தான் கிடைக்கும்
)
பின்னர் படத்தில் உள்ளபடி பனை ஓலைகளை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஓலைகளுக்கு நடுவில் மாவை வைத்து மற்றொரு ஓலைத்துண்டால் மூடிக் கொள்ளவேண்டும்.
இரண்டையும் ஒரு ஓலை நாற்றால் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மண்பானைக்குள் சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
(அளவு சரியாக தெரியவில்லை.)
நாம் கட்டிய பனை ஓலைத் துண்டுகளை வரிசையாக பானைக்குள் அடுக்கிக் கொள்ள வேண்டும்.
கீழ்ப்பகுதியில் மாவு இல்லாத பனை ஓலை துண்டுகளையும் போடுவார்கள் (அதிக வெப்பத்தால் கொழுக்கட்டை கருகிவிடக் கூடாதுல்ல.. ).
பானையை நன்கு மூடி விட வேண்டும்.

அடுப்பைப் பற்ற வைத்து தண்ணீரைக் கொதிக்க செய்ய வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அடுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உடனே திறந்து விடாமல் அடுப்பிலேயே பானையை வைத்துக் கொள்ள வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்து பானையைத் திறந்து, பனை ஓலையை அகற்றி கொழுக்கட்டையை உண்ணலாம்.
வாசமும் சுவையும் அருமையாக இருக்கும்.

புதன், 3 டிசம்பர், 2014

பாபர் மசூதி விவகாரம்: என்னதான் தீர்வு?

"டிசம்பர் 6"

இந்துத்துவ மத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.
மத நல்லிணக்கத்திற்கு பெரும் களங்கம் விளைவிக்கப்பட்ட நாள்.
காவிகளின் கடப்பாரையால் தகர்க்கப்பட்டது செங்கல் சிமெண்டால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளும்தான்.



ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முழுக்க ஒருவிதமான பதட்டமான சூழ்நிலை உருவாகிறது.
பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், திரையரங்குகள் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் காவல்துறை மற்றும் துணை ராணுவம் குவிக்கப்படுகிறது.
பெருமளவில் சோதனை நடத்தப்படுகிறது.
தேவையற்ற பீதிக்கு மக்கள் ஆளாகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த துயர சம்பவத்தை கொண்டாடும் காவி கும்பல்களும் சமூகத்தில் ஊடுருவி குழப்பம் விளைவிக்கிறார்கள்.

இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்காமல் இன்னும் எத்தனை வருடங்களுக்கு காலம் தாழ்த்துவது?
தீர்வு நோக்கி இந்திய ஒன்றியத்திலுள்ள மக்கள் அனைவரும் எப்போது சிந்திக்கப் போகிறார்கள்?

"மசூதியை இடிப்பிற்கு மூலகாரணமாய் இருந்தவர்களை சிறைக்கு அனுப்புவதும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டி எழுப்புவதும் தவிர வேறு எதுவும் தீர்வாகாது."
இஸ்லாமியர் அல்லாத மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் பணியை செய்ய முன்வர வேண்டும்.
அதுவே இந்திய மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.


இன்னொரு விசயம்.
பாபர் வெளிநாட்டுக்காரன், பாபர் மசூதி இந்திய அவமானச் சின்னம் என்று காவிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தியாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அணைகள், கோட்டைகள் என பலவும் வெளிநாட்டுக்காரன் கட்டியதுதான்.
அதையும் அவமானச் சின்னம் என்று சொல்வீர்களா?
காவிகளே! எப்போது சிந்திக்கப் போகிறீர்கள்?
உங்கள் மதவாத்திற்கு இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குவீர்கள்??

காவிகளின் கூச்சல் ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் வாளேந்திய வம்சம், யாருக்கும் அஞ்சமாட்டோம்  என்று பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
வசனம் பேசினால் தீர்வு/நியாயம் கிடைத்து விடும் என்று யார் சொல்லி கொடுத்தார் என்று தெரியல.
அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள்.
ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முன்வாருங்கள்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி

திறமைக்கு மதிப்பில்லை.
SC/ST பிரிவினர் குறைந்த் மார்க் எடுத்தாலும் தேர்வாகி விடுகிறார்கள்.
சாதி இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது.

சாதி இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது முன்வைக்கப்படும் பொய்யான வாதங்கள் இவைதான்.
வெளிப்படையாக சொல்வதென்றால், நானும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருந்தேன்.
ஆனால் அது பொய் என்று பின்னால் அறிந்து கொண்டேன்.

சாதி இட ஒதுக்கீடு என்பது SC/ST பிரிவுக்கு மட்டுமே உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
BC, MBC, SC என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.

தமிழகத் தேர்வாணையத்தில் பல தேர்வுகள் எழுதி அதில் உள்ள கட்-ஆப் மதிப்பெண் பற்றி அறிந்ததால் சொல்கிறேன்.
அங்கு திறமை இருந்தால்தான் எவராக இருந்தாலும் தேர்வாக முடியும்.

உதாரணத்திற்கு குரூப்- 2 தேர்வை எடுத்துக் கொள்வோம்.
முதல்நிலைத் தெருவில் கட்-ஆப் மதிப்பெண்
BC - 152, MBC - 150, SC - 148, ST - 146 என்றுதான் இருக்கும்.

மதிப்பெண் அடிப்படையில்தான் திறமையை கணக்கிட்டால், தேர்வில் 130-க்கு மேல் பெறுகிற அனைவரும் திறமையானவர்களே!
அந்த அளவுக்கு தேர்வு கடினமாக இருக்கும். கணிதம் , இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொது அறிவு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய வரலாறு, தமிழ் வரலாறு, வணிகம் என பாடத் திட்டத்தை புரிந்து கொள்ளவே ஒரு வருடம் ஆகும்(முடிந்தால் கடந்த தேர்வு வினாத்தாளை வாங்கிப் பாருங்கள்)

அப்புறம் மெயின் தேர்வு. அதுக்கு பயந்துதான் நான் தேர்வு எழுதுவதையே நிறுத்திட்டேன்.
அதில் 1000 பெருக்கு 20 பேரை மட்டுமே அடுத்த சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.
அப்படியானால் மெயின் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்கும் என நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

அப்புறம் நேர்முகத் தேர்வு. அதில் நாலு பேரு  ரவுண்டு கட்டி  கேள்விகளைத் தொடுப்பார்கள்.

அவ்வளவையும் கடந்து வருகிறவன் எப்படி திறமை இல்லாதவனாக இருப்பான்?
தமிழகத் தேர்வாணையம் மட்டுமல்ல, மத்திய தேர்வாணையத்திலும் இதுதான் தேர்வுமுறை.

அனைவரும் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.
உங்க ஊரில் சாதி பார்த்துதானே சுடுகாடு கூட இருக்குது.
உங்க ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் அப்படிதான் இருக்குது.
அதை முதலில் ஒழித்து ஒரு முன்னுதாரணத்தைக் காட்டினால் அடுத்த நிமிடமே 'சாதி இட ஒதுக்கீடு ஒழிப்பை' நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

குரூப்-2 தெருவில் பணியாணை பெற்ற, முதுநிலை பட்டத்தில் தங்க மெடல் வாங்கிய ஒருவரை போனவாரம் திண்டுக்கல்லில் சாதிவெறியர்கள் கொன்று கிணற்றில் வீசி விட்டார்கள். வேறுசாதிப் பெண்ணைக் காதலித்ததுதான் காரணம்.
'திறமையானவரை எதுக்குடா கொன்றீங்க?' என்று பலரும் கொதித்து எழுந்திருக்க வேண்டுமே!
இல்லையே! சாதி குறுக்கே நிற்குதே!
பாதி பேருக்கு இந்த செய்தியே தெரியாது. http://news.vikatan.com/article.php?module=news&aid=34947

இந்த லட்சணத்துல சாதி இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம்!

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான்.


செவ்வாய், 25 நவம்பர், 2014

பிரபாகரன்60 - தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்

தமிழீழ தேசியத் தலைவருக்கு வயது 60.


தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்:

* "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."

* "சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை."

* "சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை."

* "போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை."

* “இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”

* “நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.”

* ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்."

* "மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது

* "மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.”

* “நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம்
பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். ”

* "பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்."

* "ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்."


#Prabhakaran60

திங்கள், 24 நவம்பர், 2014

பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கருங்குளம் கோவிலில் சிறப்பு பூஜை.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

news: http://www.tutyonline.net/view/31_80239/20141123184920.html




எனக்கு ஒரு டவுட்டு.
இந்த யாக பூஜை-ல அப்படி என்ன மந்திரம் சொல்லுவாங்க?
இதுக்குன்னு தனியா மந்திரம் இருக்குதா?
இல்லை ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்துள்ள வழக்கமான சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்களா??
அறிந்தவர்கள் தெளிவுப்படுத்தலாம்.

எது எப்படியோ, பார்ப்பான் காட்டுல நல்ல மழை!!

இந்த மந்திரம் மண்ணாங்கட்டியெல்லாம் பொய் என்று நாம் சொன்னால் பார்ப்பானுக்குத்தான் முதலில் கோபம் வரவேண்டும்.
ஆனால் பார்ப்பான் அல்லாதவர்களுக்குத்தான் அதிக கோபம் வரும்.

"பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்" என நாம் கண்டிஷன் போட்டால் யாகம் செய்யுற தொழிலை(?) பார்ப்பான் விட்டுவிடுவான். :)

திங்கள், 17 நவம்பர், 2014

ரஜினிகாந்த் - ஒரு நல்ல தகப்பன்

லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசியதான் ஒரு பகுதி:
"கோச்சடையான்  மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்."

இதனை தமிழக மக்கள், குறிப்பாக ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

தான் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மகள்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதில் எந்த தவறுமில்லை. அனைத்து தகப்பன்களும் சொல்லக் கூடிய ஒன்றே!
100% உண்மையான கருத்து.

ஆனால் தன் படத்தை முதல் நாளில் ஆயிரக் கணக்கில் டிக்கெட் விலை கொடுத்து பார்க்கும் ரசிகனுக்காக ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?
ரசிகர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் தியேட்டர் கட்டண கொள்ளைக்கு எதிராக பேசியிருக்க வேண்டுமே!

அதை விட்டுத் தொலையுங்க.
"கட்-அவுட், பேனர், போஸ்டர் என ஏம்ப்பா காசை வீணாக்குகிறீர்கள்?
போயி புள்ளை குட்டிகளைக் கவனியுங்கப்பா" என அறிவுரை சொல்லியிருக்கலாமே!

இதுவரை அறிவுரை சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போவதில்லை.
(சொன்னாலும் அடிமைகள் காதில் அது விழப் போவதில்லை.
புகைப் பழக்கத்தை நிறுத்துமாறு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். அது வரவேற்புக்குரியது)

ரஜினிக்கு படம் தயாரிக்கத் துடிப்பவர்கள் ரஜினி என்னும் நடிகரின் திறமைக்காக அல்ல.
ரஜினி என்னும் பிம்பத்திற்க்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
முதல்நாள் டிக்கெட்டிற்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
அந்த ரசிகர்களை விரட்டி விட்டால் ஒரு தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தாயாரிக்க வர மாட்டார்கள்.

ஆக ரஜினியின் மகள்களுக்காக ரசிகர்களும், சினிமா அடிமைகளும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்.
பல தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள்.

பணத்தை பாதுகாக்க மகளுக்கு அறிவுரை.
பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அரசியல், அது இதுன்னு ஆசை வார்த்தைகள்.

உண்மையில் ரஜினிகாந்த் நல்ல தகப்பன் மற்றும் மகா நடிகன்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் தடை கேட்பார்கள்..

நவம்பர் 2, 2014 அன்று கேரளாவில் பெருமளவில் இளைஞர்கள் ஒன்றுகூடி Kiss Of LOve என்னும் பெயரில் முத்தப் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா முழுக்க பரவலாக பேசப்பட்டு உள்ளது.



அது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.

பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/kissoflovekochi
 
அதற்கு எதிராக கலாச்சாரக் காவலர்கள் போராட்டம் செய்துள்ளார்கள்.
யார் இந்தக் கலாச்சாரக் காவலர்கள்?
வேறு யாருமில்லை.. மதத்தைக் கட்டி அழும் மத அடிப்படைவாதிகள்தான்.

கலாச்சாரம், கலாச்சாரம் என்று சொல்லுறாங்களே!
அது என்ன?
அது யாருக்கெல்லாம் உரியது?
எந்த விசயத்தில் எல்லாம் உள்ளது?
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக உள்ளதா?
இன்னும் பல கேள்விகள் உள்ளன. கலாச்சாரக் காவலர்கள் பதில் சொல்வதாகத் தெரியவில்லை.

இந்த மண்ணின் கலாச்சாரம் முக்கியம் என்கிறார்கள்.
பாரம்பரியத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்கிறார்கள்.

அப்படி இங்கு என்ன பாரம்பரியாக இருந்தது?
  • கீழ்சாதிப் பெண்கள் மார்பை மறைக்க தடை செய்தது,
  • கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்புக்குள் தள்ளிவிடுவது,
  • மனைவி மீது சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்னது,
  • வேறு சாதி பையனை காதலித்த பெண்ணை பஞ்சாயத்து கூடி பாலியல் பலாத்காரம் செய்தது,
இன்னும் இதுபோன்ற அசிங்கங்கள்தான் இந்த மண்ணில் காலம்காலமாக இருந்தது.
அனைத்திற்கும் மேலாக தாழ்ந்த சாதிப் பெண்களின் மார்புக்கு வரி போட்ட கொடுமையும் இதே சமூகத்தில் நிகழ்ந்து உள்ளது.

இன்னும் இந்த மண்ணில் குடும்ப கவுரவத்தை காக்கிறோம், சாதிக்  கவுரவத்தை காக்கிறோம் என்னும் பெயரில் கொலைகள் நடக்கிறதே!!

இந்த கலாச்சாரத்திற்கு ‪#‎KissOfLove‬ கலாச்சாரம் எவ்வளவோ பரவாயில்லை.

முத்தப்புரட்சி என்பது திட்டமிட்டு நடத்த்தப்பட்ட ஒன்று அல்ல. அது புரட்சியாக நடத்தக்கூடிய ஒரு செயலும் அல்ல.
ஆனால் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற வேகத்தில் செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க பேசப்படும் செய்தியாக மாற்றியதே பெரும் வெற்றி.

மாட்டு இறைச்சிக்கு எதிராக, ஜீன்ஸ் ஆடைக்கு எதிராக இந்த  கலாச்சாரக் காவலர்களின் கூச்சல் சற்று அதிகமா கேட்கிறது.

ஆடை, உணவு என தனிநபர் விசயங்களில் மூக்கை நுழைக்கும் சாதிய, மதவாத அடிப்படைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் கண்டிக்கப்பட வேண்டும்.

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் இவர்கள் தடை கேட்பார்கள்..

திங்கள், 3 நவம்பர், 2014

தமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்

நிகழ்வு 1: (ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஊறிய) பாஜக எம்பி தருண் விஜய் தமிழைப் பாராட்டியதால் அவருக்கு சென்னையில் பாராட்டு விழா.
(சமஸ்கிருத, இந்தி திணிப்பு நடக்கும்போது/நடந்தபோது இவர் காணாமல் போய்விடுவார்)

இது இந்துத்துவத்திற்கு தமிழ் முலாம் பூசும் செயல்.


தமிழை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக்க அவர் இருக்கும் பாஜகவோ, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ தயாரா? என்று தருண் விஜயிடம் கேட்டு சொல்லுங்கப்பா...


நிகழ்வு 2: ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு.

இது தமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்.

இரண்டிலும் அரசியல் லாபம் அடைவதும் ஆர்.எஸ்.எஸ்.
இரண்டாலும் பாதிக்கப்படப் போவது தமிழினம்.




கொல்லைப்புற வாசல் வழியாக கூட இந்துத்துவ இயக்கங்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
அதனால் தமிழைக்கொண்டு தமிழர்களை ஆரியமயப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

தமிழா! விழித்துக் கொள்!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...", "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." என்பது தமிழனின் பண்பட்ட நாகரீகம்.

பிறப்பால் பிராமணன், சூத்திரன் என மனிதர்களைக் கூறு போடுவதும், பிற மதத்தினரை எதிரிகளாக சித்தரிக்கும் பிற்போக்கு சிந்தனையே இந்துத்துவம்.

எது சிறந்தது என்று உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

திங்கள், 27 அக்டோபர், 2014

சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்கள்??

நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் 'தந்தை-மகள்' தலைப்பில் நவீன பெண்களும் தந்தைகளும் விவாதித்தார்கள்.
ஆரம்பத்தில் விவாதம் சற்று மந்தமாக போய்க் கொண்டிருந்தது.
வேறு வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இறுதிக் கட்டத்தில் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.

* பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் தங்கள் கருத்துக்களை அருமையாக முன்வைத்தனர்.

* ஆடைக் கலாச்சாரம் பற்றி விளாசினர்.
"என் ஆடை, என் உரிமை, நீ மூடிட்டு போ" என்பது போலத்தான் பலர் கருத்துக்கள் இருந்தன.
ஜேசுதாஸ் போன்றவர்களுக்கு செருப்படி போல விழுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

* 'நன்கு படித்த, சம்பாதிக்கிற, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பையனைத் திருமணம் செய்வீர்களா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
சற்றும் யோசிக்காமல் பல பெண்களும் 'ஆமாம்' என்று கையை உயர்த்தினர்.

பின்னர் அதே கேள்வி தந்தைகளிடம் வைக்கப்பட்டது.
தந்தைகளும் ஆமோதித்தனர்.

இந்தக் கேள்வியை முன்வைக்கும் முன்னரே ' என் அப்ப சாதியைப் பிடித்து தொங்குவார். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது' என்றார் ஒரு நவீனத் தமிழச்சி.
சபாஷ்!!

'அவ்வளவுதான்டா. தமிழகத்தில் சாதி ஒழிந்தது' என்று அறையில் உள்ள நண்பரிடம் மகிழ்ச்சியாக சொன்னேன்.

கடந்த வருடம் "சாதியை ஆதரிக்கும் பெண்கள் - சாதியை எதிர்க்கும் பெண்கள்" விவாதம் நடந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் சாதியை ஆதரிக்கும் பெண்கள்கூட சாதி எதிர்ப்பு நிலையில் வந்து பேசியது ஞாபகம் இருக்கிறது.



சாதிக் கட்டமைப்பு என்பது வேண்டாத ஒன்றாக இன்னும் இந்த சமூகத்தில் கிடைக்கிறது.
சாதியைப் பயன்படுத்தி வயிறு வளர்க்கும் கூட்டமும், போலிக் கவுரவம் (சாதி கவுரவம் அல்ல, இழுக்கு) பார்க்கும் நபர்களும்தான் அதனைப் பிடித்து தொங்குகிறார்கள்.

உழைக்கும் மக்கள் தங்களை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்கிறார்கள். சாதியை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதுதான் நேற்றைய நிகழ்ச்சியில் கற்றுக் கொண்டது.

முற்போக்கு கொள்கைகளை எவ்வளவுதான் ஆண்கள் பேசினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் அவசியம்.
சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்களுக்கு வாழ்த்துககள்.

சாதி சங்கங்கள் பெருகி சாதியைக் காக்க முயன்று கொண்டிற்க்கும் இந்தக் காலக்கட்டத்தில், இம்மாதிரியான நவீனப் பெண்கள் மறுபுறத்தில் சாதிக் கட்டமைப்பில் பிளவை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.

"டெல்லி வேற நாகரிகம் (Modernism). அது உடையை மையப்படுத்தியது.
ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல, அது கருத்து சிந்தனையை மையப்படுத்திய நாகரிகம்(Modernism).
பெரியார் ஒரு Modernist, பாரதி ஒரு  Modernist" என்று முடிவுரை வழங்கினார் கோபிநாத்.

நேற்றைய நிகழ்ச்சி குறித்து மேலும் எழுதியுள்ளார் ஒரு நண்பர்.


யூடியூப் தளத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. பார்க்காதவர்கள் பார்க்கவும்.

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆண்டப் பரம்பரையெல்லாம் அவாளின் காலடியில் சமத்தா அடங்கிடுவாள்...

நாடார் சாதி தாழ்த்தப்பட்ட சாதி, பல இன்னல்களை அனுபவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் சொல்லியிருந்தார்கள்.

"அய்யகோ! அது எப்படி நாடாரை தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லலாம்.
நாங்கள் அப்படி கிடையாது. நாங்கள் உயர்சாதி" என்று கொந்தளித்தவர்களில் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர்.


இப்போ இந்த படம் சொல்லும் செய்தி என்ன, மிஸ்டர்.பொன்னார் அவர்களே!

எந்தப் பதவியிலும் இல்லாத அயோக்கிய பார்ப்பான் மற்றொரு பார்ப்பானுக்கு (ஜெயேந்திரன்) இணையாக அமர்ந்து பேசலாம்.

மத்திய அமைச்சராக உள்ள பார்ப்பான் அல்லாதவர்(பொன்.ராதாகிருஷ்ணன்) பார்ப்பானுக்கு கீழே அமர்ந்துதான் பேச வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் உள்ள கோவிலுக்குள் பீகார் முதல்வர் (தலித்) வந்து சென்ற பின்னர், கோவிலைக் கழுவி விட்டதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சாதியைக் கட்டமைத்த பார்ப்பனியத்தையும்,
பார்ப்பனியத்துக்கு முட்டுக்கொடுக்கும் இந்துமத புராணங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.


ஆண்ட பரம்பரைக் கனவில் இன்பம் காணும் இடைநிலைச் சாதிகள் பற்றி இந்தக் கட்டுரையை படித்து புரிந்து கொள்ளுங்கள்

 

==
*நாடார் சாதிப் பெண்கள் மாராப்பை கூட மறைக்க விடாமல் சிறுமையையும் ,இழிவையும் தந்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*திருச்செந்தூர் முருகன் கோவில் பள்ளு ,பறையர்,சாணார் ,சக்கிலியர் நுழைய கூடாது என போர்டு வைத்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*சாணார்கள் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*விருதுநகர் மாவட்ட நாடார்கள் தங்களை சத்திரிய குலம் என அழைத்து கொண்டு,பூணூலும் அணிந்து கொண்டனர். அவர்கள் 'பூணூல்'அணிவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் சங்கராச்சாரியாரின் வர்க்கம் தானே .!

@Thymiah NA
==

மஹாராஷ்டிர தேர்தல் முடிவுகள்: தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

மராட்டிய தேசிய இன அரசியலை முன்னெடுக்காமல் பாஜகவுடன் இணைந்து இந்துத்வ அரசியலை முன்னெடுத்தனர் பால்தாக்கரேவும் அவரது வாரிசுகளும்.

வெளிமாநிலத்தவரையும் (குறிப்பாக பீகார் மக்களை), சிறுபான்மையினரையும் தன் எதிரிகளாக சித்தரித்து 'மண்ணின் மைந்தர்கள்' கோஷத்தை முன் வைத்தனர்.

ஆனால் மராட்டிய தேசத்தை இரண்டு மூன்று மாநிலங்களாக துண்டாட நினைத்த பாஜகவின் அயோக்கிய அரசியலை புரிந்துகொள்ள தவறினர்.
மராட்டிய தேசிய இனத்தை படுகுழியில் தள்ளிவிட்டனர் மராட்டிய மாநிலக் கட்சிகள்(குறிப்பாக சிவசேனா).
அடுத்த சில ஆண்டுகளில் மராட்டிய தேசம் உடைவதைக் காண முடியும். 


விதர்பா தனி மாநிலக் கோரிக்கையை பாஜக ஆத்திரிப்பதும், அதற்கு ஆதரவாக பாஜக தலைவர் நிதின் கட்காரி உண்ணாவிரதம் இருந்ததும் பலருக்கும் நினைவு இருக்கலாம்.
தேசிய இனங்களை துண்டாடுவது இந்துத்வ இயக்கங்களின் அறிவிக்கப்படாத அஜெண்டா.

தற்போது பாஜகவுடன் சிவசேனா இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜகவின் திட்டங்கள் சற்று தாமதமாகும்.

# தமிழகத்தில் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குபவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

மணிப்பூர் சகோதரியுடன் சிறு உரையாடல்

பேருந்தில் அல்லது வேறு பொது இடங்களில் ஆண்கள் பக்கம் அமர நம்ம ஊரு பொண்ணுங்க ரொம்பவே யோசிப்பாங்க.

சகோதரன் அல்லது ஆண் நண்பர்களுடன் பெண்கள் வந்தால் அந்த சகோதரன் அல்லது ஆண் நண்பர் நாம் அருகில் அமருவார். அடுத்த அந்தப் பெண் அமருவார்.
இதுதான் பல இடங்களிலும் நாம் காணும் காட்சி.

நேற்று வேளச்சேரி - கிண்டி செல்லும் மினி பேருந்தில் இறுதி இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன்.

ஒரு வடகிழக்கு மாநில ஆணும் பெண்ணும் ஏறினார்கள்.

பெண் என் அருகில் அமர்ந்தார், அடுத்து அந்த ஆண் அமர்ந்தார். எனக்கு சற்று வியப்பு அளித்தது.

சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.

தமிழகத்திலும் ஆங்காங்கே கண்டிப்பாக நடக்கும்.
நேபாளி நிக்கி, சங்கி மங்கி என சந்தானம் ஒரு படத்தில் கேலி செய்திருப்பார்.
(நானும் அந்த வசனத்தை சில முறை உபயோகித்திருக்கிறேன். இப்போது நினைத்தால் எனக்கே ரொம்ப வருத்தமாக உள்ளது.)

இதுமாதிரியான கேலிகள், இனவாத பேச்சுக்கள் நம்ம ஊரிலும் இருக்கிறதா என அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருந்தது.

அந்த சகோதரியிடம் பேசு கொடுக்க ஆரம்பித்தேன். (ஆங்கிலத்தில்தான்)

==
நான்: நீங்கே எங்கே இருந்து வரீங்க?

சகோதரி: மணிப்பூர்.

நான்: எத்தனை காலமாக இங்கே தமிழகத்தில் வசிக்கிறீர்கள்?

சகோதரி: ஒரு வருடம் ஆகுது.

நான்: உங்களை யாராவது கேலி செய்திருக்கிறார்களா?

சகோதரி: இல்லையே!

நான்: சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள் தொடர்கிறதே! நீங்கள் தமிழகத்தில் ஒரு முறை கூட சந்தித்தது இல்லையா?

சகோதரி: அப்படியெல்லாம் இங்கே இல்லை.

நான்: Really?

சகோதரி: Yes.

நான்: Ok fine. thanks
==

அவர்கள் சொன்னது எவ்வளவு உண்மையென்று தெரியாது. ஆனால் உண்மையாகவே இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

சில மாதங்கள் முன்பு டெல்லியில் நீடோ தானியா என்னும் அருணாச்சல பிரதேஷ் மாணவர் அடித்தே கொலை செய்யப்பட்டார். அவரது தலைமுடி அமைப்பை வைத்து கேலி செய்ததே பிரச்சினையின் ஆரம்பம்.

நேற்று பெங்களூரில் கன்னடம் பேச மறுத்ததால் மணிப்பூர் மாணவர்கள் மீது தாக்குதல்.

இன்று டெல்லியில் மிசோரம் மாணவி கொலை.



வடகிழக்கு மாநில மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இவ்வாறு செய்திகள் வந்துகொண்டே உள்ளன.

இனரீதியான கேலி, கிண்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ் சினிமாக்களிலும் அவர்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

ரஜினியை பாஜக அரசியலுக்கு இழுக்க என்ன காரணம்?

'ரஜினி சிறந்த தேசியவாதி. அதனால் அவர் தமிழக பாஜகவில் இணைய வேண்டும்' என பாஜகவினர் கூறுகிறார்கள்.

சிறந்த தேசியவாதி என்றால் ஏன் தமிழகத்தோடு நிறுத்த வேண்டும்?

அவருக்கு பிரதமர் அல்லது துணைப் பிரதமர் பதவி தருவதாகக் கூறி அழைக்கலாமே!

அன்னபோஸ்ட் எம்பி பதவி தருவதாகக் கூறி அழைக்கலாமே!

அல்லது அமித்ஷாவுக்கு பதிலாக ரஜினியை நியமிப்பதாகக் கூறி அழைக்கலாமே!

இதெல்லாம் செய்யாதவர்கள் ரஜினியைத் தற்போது தமிழக அரசியலில் இழுக்க ஒரே காரணம்தான்:

"இத்துப்போன இந்துத்வ கொள்கைகளை எப்படியாவது தமிழகத்தில் வேரூன்ற செய்ய ரஜினியை ஸ்டார் அம்பாசிடராக்கும் முயற்சி"


வியாழன், 9 அக்டோபர், 2014

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1

கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம்.
ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கினேன் ( https://www.nhm.in/shop/100-00-0000-238-3.html ) . விலை கொஞ்சம் அதிகம்தான்.

என் அந்தப் புத்தகம் வாங்கினேன்?
இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத கட்டுக்கதைகள், சாதியக் கட்டமைப்பு இவற்றை பற்றி விவாதிக்கும்போது 'கீதை படித்திருக்காயா?, ராமாயணம் படித்திருக்காயா? குறைந்தது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்காயா? என எதிர்கேள்விகள் வரும்.

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விருப்பம்.
அதுபோக கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.



புத்தகம் வாங்கி 40 பக்கங்கள் படித்திருப்பேன்.
'எதுக்குடா இந்தப் புத்தகத்தை வாங்கினோம்' என்பது போல ஆகிவிட்டது.

* 40 பக்கத்தில் 5 திருக்குறள் வந்துவிட்டன.
"அதாவது, திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...." என்பது போல ஆரம்பிக்கிறார். தமிழுக்கு இந்துச் சாயம் அடிக்கும் வேலையை கண்ணதாசன் செய்கிறார்.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விலையுமென்பது இந்துக்களின் பழமொழியாம்.
என்ன அழகாக மக்களை ஏமாற்றுகிறார்கள்!!

*  விதி-மதி, இன்பம்-துன்பம் என சிறுபிள்ளைத்தனமான, அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பல புத்தகத்தில் அதிகம் உள்ளன.

* பெண்கள் நிமிர்ந்து சென்றால் ஆண்களைக் கவர்ந்துவிடுவார்களாம். அதனால் குனிந்து போகச் சொல்கிறதாம் இந்துமதம்.
( பெண்கள் ஜீன்ஸ் அணிவது தொடர்பாக சமீபத்தில் பாடகர் ஜேசுதாஸ் சொன்னது கருத்து இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறது )

* அனுபவங்கள் மூலம் நாம் சில பாடங்களைக் கற்க முடியும்.
உதாரணம்: "பிறர்க்கு துன்பம் செய்தால் நாளை அந்த துன்பம் நமக்கும் வரக்கூடும்".
இதனை அனுபவம், வாழ்வியல் சிந்தனை, தத்துவம் என பல பெயர்களில் சொல்லலாம்.
ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி 'இந்து தர்மம்', 'விதி', 'முன்ஜென்ம பாவம்' என்கிற பெயர்களில் சொல்கிறார் கண்ணதாசன்.

* வள்ளுவர் ஓர் இந்து என்னும் மாபெரும் வரலாற்றுத் திரிப்பை பகுதி 8-இல் சொல்ல வருகிறார். அதனை நான் இன்னும் படிக்க வில்லை.
உலகின் மூத்த பொதுவுடைமையாளன் வள்ளுவனுக்கு இந்து அடையாளம் கொடுத்துதான் தன் இந்து (பிராமண) மதத்தை தூக்கி நிறுத்த வேண்டிய பரிதாப  நிலை கன்ணதாசனுக்கு!!

ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.

அதனால் வாசிப்பு தொடரும்,
அபத்தங்கள் தொடரும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

வியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்ர்கள் சிறை சென்ற செய்தியே பல ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

சிறையில் யாரையும் ஜெயா சந்திக்கவில்லை என்பது பல ஊடகங்களின் செய்தி. கர்நாடக காவல்துறையும் அதனையே சொல்கிறது.
இந்நிலையில் நக்கீரன் தன் இதழ் தலைப்பு செய்தியாக எழுதியுள்ளது:
'அப்பாவையும் மகனையும் உடனே கைது செய்ய ஜெயா உத்தரவு'.
அதாவது கருணாவையும் அவரது மகன் ஸ்டாலினையும் கைது செய்ய ஜெயா உத்தரவாம்.

யாருக்கு உத்தரவு கொடுத்தார்?
எப்போது கொடுத்தார்?
எங்கே வைத்து கொடுத்தார்?
என எந்த தகவலும் நக்கீரன் சொல்லவில்லை.

அப்புறம் எதுக்கு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும்?
திமுகவினரை ஆத்திரமடைய செய்வது தவிர இந்த செய்தியின் நோக்கம் வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை.
நக்கீரனுக்கு இது போன்ற செய்திகள் புதிதல்ல.

அடுத்து சன் செய்திகள் சேனலுக்கு வருவோம்.

நேற்று சன் செய்திகள் சேனங்லில் ஃப்ளாஷ் ந்யூஸ் மற்றும் அதை ஒட்டிய விவாதத்தின் தலைப்பு:
"பெங்களூரில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா?
தமிழகத்தில் கன்னடர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா? "

எவனோ ஒரு அதிமுக அடிமை கன்னடர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளான்.
இருமாநில காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து, அது போன்ற போஸ்டர்களை அகற்றிவிட்டனர்.

இங்கு வாழும் கன்னடன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.
அங்கு வாழும் தமிழன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.

ஆனால் நடுவே சில அரசியல் பொறுக்கிகள் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்குகிறார்கள்.

பொறுப்புடன் செயல்பட மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யாராக்சும் சன் செய்திகளிடம் வந்து முறையிட்டானா?
சன் செய்திகள் ஃப்ளாஷ் செய்தியின் நோக்கம் என்ன?
அதிமுகவினரை வன்முறையாளர்களாக காட்டி தான் அரசியல் லாபத்தைப் பார்ப்பது.

ஊடகங்களே,
தங்களின் வியாபார லாப வெறிக்கு, அரசியல் வெறிக்கு தயவுசெய்து சமூகத்தில் குழப்பம் விளைவிக்காதீர்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தூத்துக்குடி வட்டார மொழியை நான் இழந்த கதை

தூத்துக்குடியில் மேற்படிப்பு படிக்கும்வரையில் நான் பேசும் தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருக்காது.
ஏல, வால, போல, என்று சரளமாக தூத்துக்குடி தமிழ் பேசுவேன். தமிழின் சிறப்பான 'ழ' என்பதைக் கூட 'ல' என்று பேசியே பழக்கமாகி விட்டது.

'அவங்க சொல்லுவாங்க' என்பதை 'அவிய சொல்லுவாவ' என்றுதான் சொல்லுவேன்.

என்று கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேனோ, அப்புறம் தூத்துக்குடி தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.
பல மாவட்ட மாணவர்களும் படிக்கும் சென்னை கல்லூரிகளில் ஆங்கிலம் கலந்து பேசுவதையே ஒரு பெருமையாகக் கருதுகிறார்கள்.
வட்டார வழக்கில் பேசினால் அதிகம் கேலி செய்வார்கள்.

பசித்தால் 'வயிறு பசிக்கு' என்றுதான் எங்க ஊருல சொல்லுவாவ.
ஆனால் கல்லூரி விடுதியில் நான் 'வயிறு பசிக்கு' என்று சொல்லும்போதெல்லாம் கேலி செய்ய ஒரு கூட்டமே உண்டு.

கல்லூரியில் ஆசிரியரிடம் பேசும்போது சார், மிஸ், மேம் என கண்டதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
எங்க ஊர்ல அந்தப் பழக்கமே கிடையாது.
இங்கேயும் நான் அதையே தொடர்ந்ததால் நான் மரியாதைக் குறைவாக பேசுவதாகவும், திமிராக பேசுவதாகவும் சொன்ன ஆசிரியர்கள் உண்டு.

தூத்துக்குடி பாஷையில் பேசும்போது மிகவும் வேகமாக பேசுவேன். அது இங்கே பல நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புரிவதில்லை. அதனால் வேகத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

கல்லூரியில் ஆங்கில வழியில் படித்ததால் சில ஆங்கில சொற்கள் நாவில் அடிக்கடி குடி கொண்டன.
அப்புறம் வேலை நிமித்தமாக ஆங்கிலத்தில் பேசுவதாலும், வேறு மாநிலங்களுக்கு சென்றதாலும் ஆங்கிலம் நிரந்தரக் குடி கொண்டது.

அதனால் தூத்துக்குடி வட்டார பாஷை முன்னர் போல வருவதில்லை. கால ஓட்டத்தில் காணாமல் போனது.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல அவ்வப்போது தூத்துக்குடி தமிழ் வாயில் வருவதுண்டு.

தற்போது ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கையில் என் மீது எனக்கே சற்று வருத்தம்.
தூத்துக்குடி வட்டார பாஷையை இழந்தது கூட எனக்கு பெரும் வருத்தம் அல்ல. ஆனால் என் தமிழில் அதிக ஆங்கிலம் கலப்பு இருப்பது பெரும் வருத்தமாக உள்ளது.

படிப்படியா ஆங்கிலக் கலப்பை தவிர்க்க வேண்டுமென்பதே இந்த வருட புது ஆண்டு சபதம்.
இப்போது சற்று முன்னேற்றம் இருக்கிறது. பேஸ்புக், ப்ளாக்கர் ஆகியவற்றில் தமிழில் எழுவதும், தமிழ்  நூல்கள் படிப்பதுமே இதற்கு காரணம்.

வாழ்க தமிழ்!!

(நேற்று நீயா நானா நிகழ்ச்சி வட்டார மொழி வழக்கு குறித்து இருந்ததால் பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.)

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜீன்ஸ் அணியும் ஆண்கள் யார் மனதைக் கெடுக்கிறார்கள்?

"ஜீன்ஸ் அணியும் பெண்கள், ஆண்களின் மனதை கெடுக்கிறார்கள்" என்று பாடகர் ஏசுதாஸ் சொல்லியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

'அந்தக் காலத்து ஆள். அப்படிதான் பேசுவார்கள்' என்று கருதிக் கொண்டு நகர்ந்து விடலாம்.

ஆனால் அவருக்கு ஆதரவாக இணையதளங்களில் பலரும் பேசுவதுதான் கடுப்பா இருக்குது.

ஒன்று புரிந்து கொள்ளுங்க மக்களே!

ஏசுதாசின் இந்த மோசமான பேச்சை அவரது மருமகளே காரித் துப்பியிருப்பார்.

ஜீன்ஸ் அணியும் பெண்கள், ஆண்களின் மனதை கெடுக்கிறார்கள்  என்றால் ஜீன்ஸ் அணியும் ஆண்கள் யார் மனதைக் கெடுக்கிறார்கள்? என்கிற கேள்விக்கு எந்த ஏசுதாசும் பதில் சொல்லப் போவதில்லை.

ஆணாதிக்க நிலையிலிருந்து வெளிவாருங்கள் மக்களே!!

வியாழன், 2 அக்டோபர், 2014

இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவம்

காஷ்மீர் விடுதலைப் போராளி யாசின் மாலிக் தமிழகம் வந்து உரையாற்றினால் தேசத்துரோகம் என்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன், ஞானதேசிகன் என அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள்.

ஆனால் ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் தலைவர் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றப் போகிறார்.
அதைக் கண்டித்து ஒரு பயலும் வாயைத் திறக்க மாட்டான் (காங்கிரஸ்காரன் உட்பட).
மோகன் பகவத் மக்களால் தேர்ந்தெடுப்பட்டவரா? என்று மறந்தும்கூட கேட்டுவிட மாட்டார்கள்.

பிற மதத்தினருக்கு எதிராக பல முறை சர்ச்சையாக பேசியவர் மோகன் பகவத்.
இதெல்லாம் தெரிந்தும் அவர் தூர்தர்சனில் பேச அனுமதிக்கிறார்கள் என்றால், இவர்களின் இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவமும் ஒட்டியிருக்கிறது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தீவிரவாதத்தின் ஆணிவேர்

ஒசாமாக்களையும் உசேன்களையும் உருவாக்கிவிடுவது,
பின்னர் 'தீவிரவாதத்தை அழிப்போம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவது,
போர் என்னும் பெயரில் அப்பாவிகளை கொன்றுகுவித்து விட்டு, எண்ணைய்க் கிணறுகளை தன் வசப்படுத்துவது,
அரபு நாடுகளின் ஆசியோடு அவர்கள் மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைக்க செய்வது.
இதுதான் காலம்காலமாக அமெரிக்கா நடத்தும் செயல்.
(இன்னும் 10000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கனில் அமெரிக்காக்காரனுக்கு என்ன புடுங்குற வேலை??)

தீவிரவாதத்தின் ஆணிவேரைத் தேட முயற்சித்தால் அந்த தேடல் அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் சென்று முடிவடையும்.


இப்போது புதிதாக ஐஸிஸ்(ISIS) என்னும் மற்றொரு மனிதவிரோதக் கூட்டம் கிளம்பியிருக்கிறது.
( எங்கே இருந்து கிளம்பியதோ! )

ஷியா முஸ்லிம்கள், குர்து மற்றும் யாசிடி இன மக்களைக்(அவர்களும் முஸ்லிம்கள்) கொன்று குவித்தது.
ஊடகவியலாளர்களின் தலையை துண்டிக்கிறது.
(இதுல அல்லா ஹூ அக்பர் கோஷம் வேற.. ).
ஷியாக்களின் மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் இடித்து நாசமாக்கியது.

அந்தக் காட்டுமிராண்டிகளை அழிக்க அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவும் இணையப் போவதாக ஒபாமாவுக்கு மோடி உறுதியளித்துள்ளதாக பொறுக்கி சுசாமி தெரிவித்துள்ளான்.

ஐஸிஸ் காட்டுமிராண்டிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர்களின் தோற்றம் மற்றும் பின்னணி குறித்தும், தீவிரவாதத்தில் அமெரிக்காவின் பங்கு என்னவென்பதும் விவாதிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் தீவிரவாதத்தை நிரந்தரமாக அழிக்க முடியாது.

மதம் மனிதனை மிருகமாக்கும்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பற்றியும், வேடமணியும் பக்தர்கள் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார்கள் மோகன் சி லாசரஸ் தலைமையிலான அல்லேலூயா கோஷ்டியினர்.

அந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு தசரா திருவிழாவில் தன் விஷம அரசியலை விதைக்க  இந்துத்வ கும்பல் கிளம்பியிருக்கிறது.

மதம் மனிதனை மிருகமாக்கும்.



குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து கடவுளாக வழிபட்டனர். முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள்.  அவ்வாறான அம்மனுக்கு இந்து அடையாளம் கொடுத்து அயோக்கியத்தனம் செய்கிறது இந்துத்துவ கும்பல்.

தன் முதுகில் உள்ள அழுக்கை துடைக்காமல் அடுத்தவனை குறை கூறுகிறது மோகன் சி லாசரஸ் கும்பல்.

source: http://tutyonline.in/node/9430

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா?

 பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார்.
இதே பதிவை பல சமயங்களில் இணையத்தில் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பதிவின் நோக்கம் என்னவென்றால் எப்படியாவது பெரியாரை சிறுமைப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

சமூக நீதிக்கும், மனிதனின் சிந்தனைக்கும் குறுக்கே மதமும் கடவுளும் வந்து நிற்பதால் நாத்திகத்தை முன்மொழிந்தார் பெரியார். அவ்வளவே!

அவரது கொள்கை சரியா? தவறா? என ஆராய்வதே சிறப்பு.
அதை விடுத்து பெரியார் மீது சேறு வாரி இறைத்து ஆனந்தம் காண்பது சிறப்பல்ல.


பதில் தெரியாமல் பெரியார் முழித்தார் என நடக்காத ஒன்றை எழுதி பரப்புகிறார்கள்.
ஆனால் பெரியார் கேட்ட பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமால் சாதி, மத வெறியர்கள் ஒடுகிறார்களே!

பெரியாரை, தேவரை விடுங்க.
நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்காவது பதில் சொல்லுங்க.

  • விக்ரஹங்கள் கடவுளின் பிம்பம் என்கிறீர்கள். சிலைக்கு நெய், பால், மற்றும் உணவுப் பொருட்களை ஊற்றி வீணாக்குகிறார்களே!  அதற்கு என்ன விளக்கம்(சமாளிஃபிகே ஷன்) வைத்துள்ளீர்கள்?
  • அலகு குத்துதல், தீ மிதித்தல் ஆகியவற்றை செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • விநாயகர் சிலையை கரைத்து கடல் வளத்தை மாசுபடுத்த எந்தக் கடவுள் சொன்னான்?
  • உன் மதம் பெருசு, என் மதம் பெருசு என்று தகராறு செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • பார்ப்பான் அல்லாதவரோ, பெண்களோ கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டு எந்த விளக்கெண்ணை கடவுள் சொன்னான்?

இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். எதற்கும் எந்த பதிலும் வரப்போவதில்லை

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ஆராய்ச்சிக்குள் போக விரும்பவில்லை.
மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சமூகத்தில் மூடப் பழக்க வழக்கங்களும், சீர்கேடுகளும், பூசல்களும் உள்ளதா இல்லையா?
கண்டிப்பாக இருக்கிறது.,

அதனை எதிர்த்து எந்த ஆன்மீகவாதியும் பிரச்சாரம் செய்வதில்லை.
அதை முதல்ல செய்யுங்க பாஸ்.

அதை விடுத்து பெரியார் முழித்தாரா? பசும்பொன் தேவர் கேள்வி கேட்டாரா? என்ற தேவையற்ற விவாதத்தை நிறுத்துங்க பாஸ்...

நீங்களே அறிவுப்பூர்வமாக அணுகுங்க பாஸ்.
அறிவுப்பூர்வமாக அணுக தேவரும் பெரியாரும் தேவையில்லை. சிந்தித்தால் போதும்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

அதிமுக அசுர பலம் அடைகிறதோ?

தூத்துக்குடி மாநகராட்சி:

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தல் வாக்குகள்:

எல். சசிகலா புஷ்பா(அதிமுக) 65,050
எம். பொன் இனிதா(திமுக) 41,794
பாத்திமா பாபு (மதிமுக) 29,336
ச. ராஜேஸ்வரி (தேமுதிக) 7,407

2014 உள்ளாட்சி இடைத்தேர்தல்:
அந்தோணி கிரேஸி (அதிமுக) - 1,16,693
ஜெயலட்சுமி  (பாஜக கூட்டணி)  - 31708

//தேர்தல் தில்லாலங்கடி என்று சொல்லிட்டு நகர முடியவில்லை.
அதிமுக அசுர பலம் அடைகிறதோ என்கிற டவுட்டுதான் வருகிறது. :(

திமுகவினரும் இரட்டை இலையில் குத்திட்டாங்களோ!!

தங்களுக்கு மாபெரும் வாக்குவங்கி இருப்பதாக பகல் கனவு காணும் பாஜகவினருக்கு நல்ல பாடம். அந்த வகையில் சிறு மகிழ்ச்சியே!!  :)

வியாழன், 18 செப்டம்பர், 2014

காவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை


வகுப்பறை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்.
அப்பேர்பட்ட வகுப்பறையும், கல்வியும் இன்று எப்படி உள்ளன?

தனியார்களின் வசம் சிக்கி சீரழிந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்புக்கே  லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுக்கும் அவல  நிலையில் வந்து நிற்கிறது.
மேற்படிப்பு படிக்க பணம் இல்லாமையால் மாணவிகள் தற்கொலை செய்த அவலம்  இதே தமிழ் மண்ணில் அரங்கேறியுள்ளது.
இருக்கிற அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் கழிப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதனை அறிவாகப் பார்த்து, தனியாரிடம் பணத்தை வாரி இறைக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கல்வித்துறையில் பல அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதனை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர்  கல்வித்துறையில் செய்த சில புரட்சிகளைப் (?) பார்ப்போம்.

  • பள்ளிகளில் செத்தமொழி(சமஸ்கிருத) வார கொண்டாட்டம். 
  • குரு உத்சவ் என்னும் பெயரில் ஆசிரியர் தினம் 
  • ஆசிரியர் தினத்தில் மாணவர் முன்னர் தோன்றி, விளம்பரம் தேடிக் கொள்ளுதல்
  • தற்போது, இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிக்கை

இதுபோக 'இந்தியைத் திணிக்க வேண்டும்' என காவிக்குரல் கடுமையாக எழுகிறது.
குருகுலக் கல்விமுறையை கொண்டு வரவேண்டும் என ஒரு நீதிபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன அவலமும் உள்ளது.

எப்படியாவது கொல்லைப்புற வழியாக இந்தி, சமஸ்கிருதம் என ஆரியப் பண்பாட்டை புகுத்த துடிக்கிறார்கள் காவிகள். 


மேலும் வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல்,  இந்தியா வரலாற்று ஆய்வு குழுவில் பார்ப்பன ஆதிக்கம் என பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது பாஜக அரசு.

கல்வியை சேவையாக வழங்குவது குறித்து சிந்திக்காமல்,
அறிவியல் ரீதியில் மாணவர்களைப் பலப்படுத்தும்
செயலை முன்னிறுத்தாமல்,
'ஹிந்தி, ஹிந்து, ஹிந்தியா' என தனது பிற்போக்கு இந்துத்வ அரசியலை மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு.


பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கையை மாநில அரசு உடனே முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் காவிகளின் கையில் சிக்கி கல்வித்துறை நாசமாகும்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தந்தைபெரியார் 136 -ஆவது பிறந்தநாள்


''மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை?''

- கவிஞர் காசி ஆனந்தன்.
 
 
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

-புரட்சிக்கவிஞர்.

 
படம்:  tamilmeetpu.blogspot.in

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பெரியார் என்னத்த கிழித்தார்?

நேற்று 'ஜீ தமிழ்'(ZEE Tamil) தொலைக்காட்சியில் 'நம்பிக்கை - மூட நம்பிக்கை' என்னும் தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

மூட நம்பிக்கைகளை சாடிய பலர் மிக அருமையாக தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். அதிலும் குறிப்பாக   'மூடர் கூடம்' திரைப்படத்தின் இயக்குனர் நவீன் மிக அருமையாக பேசினார்.

நம்பிக்கை தரப்பில் பேசிய பலரும் சொதப்பினர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
ஒரு கட்டத்தில்  நம்பிக்கையின் பெயரால் தாங்கள் செய்வது தவறு என்று ஒப்பு கொண்டனர்.


அப்போது பேசிய சோதிடக்காரர் ஒருவர் 'பெரியார் செய்த போராட்டங்களுக்குப் பின்னர்தான் நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று சொல்லும் கூட்டம் பெருகி விட்டதாக' தான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சரி, இந்த சோதிடக்காரர் உள்ளிட்டோர் சொல்லும் நம்பிக்கையான விசயங்கள் என்ன?
கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும்,
கணவனை இழந்த பெண் முகத்தில் முழித்தால் அபசகுணம்,
செவ்வாய் தோஷம், சனி தோஷம் என்று பொய் புரட்டுக்களை சொல்லும் சோதிடம்,
தீக்குழியில் இறங்கினால் தன்னம்பிக்கை கூடுமாம்..

மனிதனை சிந்திக்க விடாமல் 'முன்னோர் சொன்னார்கள்', 'பழைய பண்பாடு' என்று காட்டுமிராண்டியாகவே வைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை பார்க்க்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். 
(முன்னோர்கள் மரம் வைக்க சொன்னார்கள், ஏரி வெட்ட சொன்னார்கள். அதையெல்லாம் செய்யுங்கப்பா..)

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை தான் பெரியார் கிழி கிழின்னு கிழித்தார்.

குறிப்பு:
பெரியார் கருத்துக்களை நாத்திகர்கள் மட்டுமே செவிகோடுத்து கேட்க வேண்டும் என்கிற கட்டாயம் அல்ல.
நாத்திகம் என்பது மட்டுமே பெரியார் கொள்கையும் அல்ல.

வெள்ளி, 20 ஜூன், 2014

Stop the Hindi Imperialism! Treat all the languages equally

Dear Indian Govt and Hindi speaking people,

We are learning English as a secondary language to communicate with non-tamils.
Then what's the need of learning another language?? Why do try to impose Hindi on us?

If you wants Tamils to learn Hindi, why can't you learn Tamil which is an ancient and sweetest language??

Tamils didn't loose anything by boycotting Hindi.
You people didn't achieve anything great by accepting Hindi. But many of you lost your regional language.

There are many undeveloped states where Hindi was imposed.
When compared with those states, Tamilnadu is far better in education, employment, economy, etc.

If we want, we will learn 'n' number of languages. But don't try to impose any language on us.

Destroying the language is the fist step of destroying an ethnicity.
Don't try to do the experiment with Tamil ethnicity. Then India will be looking for a place in Chennai to locate its embassy.

Now it's #StopHindiImpositiion.
If you try to impose Hindi on us, we will  #AgainstHindi.





===
Some Tamils are thinking that Hindi will bring the people to better level.
Just think on why the Hindi speaking people are migrating to Tamilnadu for their employment?

சனி, 17 மே, 2014

தமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா?


தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.
'டெண்டுல்கர் சதம் அடித்தும் டீம் தோல்வி' என்ற வகையில் அருமையான ஒப்பீடு வேற நடத்துகிறார்கள்.
அதாவது இந்திய அரசிடம் தமிழக அரசு  பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்.


அப்படியான நண்பர்கள் முதலில் இந்திய அரசியலமைப்பை படித்து விட்டு வரவும்.
* மாநிலங்களுக்கு பாராபாட்சம் இல்லாமல் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
* மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.
* பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் 
என ஆயிரத்தெட்டு விதிகள் இருக்குது..

ஆனால் நடுவண் அரசினை ஆட்சி செய்பவர்கள்  இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் ஆட்சி அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். அதன் மூலம் அந்த மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுவாக காலூன்ற செய்கிறார்கள்.

தங்களுக்கு வாக்குவங்கி இல்லாத மாநிலங்கள் அல்லது தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்கள்.

தமிழக்திற்கு உரிய அளவில் மண்ணெண்ணை வழங்காமை, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை வழங்காமை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியது.
அதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியது பலருக்கும்  நினைவு இருக்கலாம்.

இந்நிலையில் "பாஜக ஆளுகிற மாநிலங்கள் மற்றும்  பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் மட்டுமே பயனடையும்" என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்  சிலர்.
அதாவது இந்திய போலி ஜனநாயகத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
மாநில சுயாட்சி என்கிற கொள்கையை  இந்திய ஒன்றிய நடுவண் அரசு விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.
"நம்ம மாநிலத்திலும் பாஜக ஜெயித்திருக்கலாமே!" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

அது தவறான பார்வை.
கூட்டணி இருக்குதோ இல்லையோ நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
எம்பிக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எம்பிக்கள் தாராளமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும்.
அல்லது மாநில அரசின் வழியாக நடுவண் அரசுக்கு செல்லும் நிதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

இதெல்லாம் இந்த எம்பிக்களால் சாத்தியமில்லை. இனப்படுகொலை அரங்கேறியபோதும் பதவியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள்தான் நம்ம எம்பிக்கள்.
( ஆந்திராவை பிரிக்கிறோம் என்று நடுவண் அரசு அறிவித்தவுடன் சீமாந்திரா பகுதியை சார்ந்த  எம்பிக்கள், அமைச்சர்கள்  அனைவரும் ராஜினாமா செய்தார்கள். அதில் ஒருவர் ஒருபடி மேலே போயி தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தார். )

அதிமுக எம்பிக்கள் உத்தமர்கள் கிடையாது. அதற்காக தமிழகத்தில் தேசியக் கட்சிகளை காலூன்ற செய்தால் தமிழகம் நாசமாகப் போகும்.

குஜராத்தி மோடி உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அதுபோல தேசியக் கட்சிகளில் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அவ்வாறு தமிழகத்திலும் கண்டவனும் வந்து போட்டியிட்டு ஜெயிக்கும் நிலை வரக் கூடும்.மாநில உரிமைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.மொத்தத்தில் அரசியல் நாசமாய் போகும்.
அதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.

ஒரு தேசிய கட்சியால் தமிழகம் அனுபவித்த கொடுமைகளை உணருங்கள்.

ஒரு தேசியக் கட்சியை அழிக்கவே இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் இன்னொரு தேசியக் கட்சியை காலூன்ற செய்யும் தவறை செய்யாதீர் மக்களே!!

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய தேசியக் கட்சிகள் மற்றும் மதவாதக் கட்சிகளைப் புறக்கணித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்.

மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுறது, நடுவண் அரசிடம் பொறுக்கித் தின்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் பறிபோகும்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தூத்துக்குடி தேர்தல் கள நிலவரம்

ஆறுமுனைப் போட்டியால் தூத்துக்குடி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

மின்சாரத் தட்டுப்பாடு, ஸ்டெர்லைட், அணு உலை ஆகியவைதான் தூத்துக்குடி தொகுதியில்  முன்னணி பிரச்சினைகள்.

                                                      படத்தில்: ஜெயசிங்(அதிமுக),  ஜோயல் (மதிமுக), ஜெகன் (திமுக)

அதிமுக:

மின்சார தட்டுப்பாடு பிரச்சினையால்  ஆளும் கட்சியான அதிமுகவின் நிலைமை பரிதாபம்.

தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வேட்பாளரை நிறுத்தியது அதிமுகவுக்கு பின்னடைவு.

கூடங்குளம் பகுதி மக்களை அதிமுக அரசு ஒடுக்கியதை மீனவ மக்கள் மறக்க மாட்டார்கள். அதனால் மீனவர்களின் ஓட்டுகள் இம்முறை அதிமுகவுக்கு கிடைப்பது கடினம்.

அதுபோக அதிமுக அமைச்சர் சண்முகநாதனுக்கு எதிராக கட்சியில் பலர் செயல்படுகிறார்கள்.

குளத்தை ஆக்கிரமித்த அமைச்சர் சண்முகநாதன், அடாவடி மேயர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கிய  சின்னதுரையை மீண்டும் அதிமுகவில் சேர்த்தது, தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகள் முடங்கி கிடப்பது ஆகியவை அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

ஜெயாவின் வான்வழி பிரச்சாரம் அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.

திமுக:

தனது இரண்டாவது அரசியல் வாரிசு ஜெகனை வெற்றி பெற செய்ய திமுக முன்னாள் அமைச்சர், கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி தீயா வேலை செய்யுறார். அதிமுகவினரை விலைகொடுத்து வாங்குகிறாராம். அதனால் அதிமுக பிரச்சாரம் மந்தமாக உள்ளது. வேட்பாளர் ஜெகன் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்கிறார்.

காயல்பட்டிணம் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு பெரும்பலமாக இருக்கும்.

அந்நியமுதலீடு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வியாபாரிகளுக்கு எதிராக உள்ளதால் வியாபாரிகளின் வாக்குகளை திமுக பெறுவது கடினம்.

பெரியசாமி குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜெகனுக்கு வாக்களிக்க மக்கள் தயங்குவார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி, ராதிகாசெல்வி கோஷ்டி, தற்போதைய எம்பி ஜெயத்துரை கோஷ்டி என பல கோஷ்டிகள் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.


மதிமுக:
தூத்துக்குடி தொகுதி   பாஜகவுக்கு கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே இத்தொகுதியில் மதிமுகவினர் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீனவர் பிரச்சினை, அணு உலை எதிர்ப்பு, சுங்கசாவடி எதிர்ப்பு என மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கென்று தொகுதியில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மதிமுக மேயர் வேட்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு 30000 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக - 61000, பாஜக - 27000 வாக்குகளை வாங்கியிருந்தார்கள். இம்முறையும் இந்த வாக்குகள் நீடித்தால் ஜோயலின் வெற்றி உறுதி செய்யப்படும்.

காங்கிரஸ்:

வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் அவர்களுக்கு தொகுதியில் நல்லபெயர் உள்ளது.

இவர்  தோல்வி அடைவது உறுதி. ஆனால் டெபாசிட் பெறும் அளவுக்கு கணிசமான வாக்குகளைப் பெறுவார்.


ஆம் ஆத்மி:

அண்ணன் புஷ்பராயன் அணு உலை எதிர்ப்பாளர்களின் வாக்குகளைப் பெறுவார்.

புன்னக்காயல், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, குலசை பகுதிகளில் அதிக வாக்குகள் பெறுவார். பிற பகுதிகளில் வாக்குகள் கிடைப்பது அரிது.


கம்யூனிஸ்ட்: கோவில்பட்டி பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார்.

இந்த ஆறுமுனைப் போட்டியால் வாக்குகள் நன்றாகப் பிரியும்.
வெற்றி பெறுபவர்  20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது என் கணிப்பு.

ஜெகனா? ஜோயலா? என்பதுதான் தற்போதைய நிலவரம்...

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மதவாத தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை என்னும் பெயரில் இந்த சமூகத்தில் மதவாதக் குப்பையை அள்ளி போட்டிருக்கிறது பாஜக.

அறிக்கையிலுள்ள சில விசயங்களை பார்ப்போம்.

ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம்.

//இருக்கிற கோவில்களை பராமரிப்பு செய்யாமல், ராமனுக்கு கோவில் கட்ட துடிப்பதன் நோக்கம் என்ன?
மனைவியை நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்ன ராமனுக்கு என்ன ***க்கு கோவில்??
(ராமாயணம் என்பதே கட்டுக்கதை.. அது வேற விடயம்)
அனைத்து இந்துக்களும் சமம் என்றால் பிராமணர் அல்லாதவர்கள் கோவில் அர்ச்சகர் ஆக முடியவில்லையே ஏன்?
சூத்திரனுக்கு கோவிலில் உரிமை கூட தர மாட்டாய்.. ஆனால் சூத்திரன் ஓட்டுக்கள் மட்டும் தேவைப்படுதோ!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை (370) நீக்கப் போகிறார்களாம்.
//காஷ்மீரில் காணாமல் போன பல இளைஞர்கள் நிலை , அதிகமான ராணுவ ஆக்கிரமிப்பு, ராணுவம் செய்யும் அட்டூழியங்கள் இவை எதுகுறித்தும் பேசாமல்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கணுமாம்.. என்ன ஒரு அயோக்கியத்தனம்!!!

பசுக்களைக் கொல்வதை தடை செய்யப் போகிறார்களாம்.
//அப்படியே ஆடு வெட்ட தடை, கோழி குழம்பு தடை, மீன் பிடிக்க தடை என்ன அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே!!
லூசுப்பயலுக!!
பசியாலும், மழையாலும், வெயிலாலும் மனுசன் சாவுறான்.
அதை தடுக்க முடியாத அயோக்கிய அரசியல் கூட்டம் மாடு குறித்து பேசுது.
த்தூ!!!

பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போகிறார்களாம்!!
இது குறித்து போதுமான  விவரம் எனக்கு தெரியல.
ஆனால் பல தேசிய இனங்கள்  வாழும் இந்திய ஒன்றியத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஏற்புடையதல்ல.
மாநில சுயாட்சியை ஏற்கனவே பறித்துவிட்டார்கள்..
இன்னும் என்னென்ன மாநில உரிமைகளை பறிக்கப் போகிறார்களோ!!



இந்த நான்கு விசயங்களும் பாஜகவினால் எழுதப்பட்டவை அல்ல.
மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்க ஆர்எஸ்எஸ் என்னும் பிற்போக்கு கும்பல் விதித்த கட்டளைகள்.
இங்கே பார்க்க: http://indiatoday.intoday.in/story/narendra-modi-rss-rss-conditions-for-modi-bjp-pm-candidate-ayodhya/1/309155.html

இந்த கட்டளைகளைத்தான் தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாஜக.
மதத்தை தாண்டி பாஜக கும்பலால் சிந்திக்க முடியாது என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்னும் உண்மையை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்த பிற்போக்கு அரசியல் பிற மதத்தினருக்கு ஆபத்து என்பது சொல்வது சரியல்ல.
உழைக்கும் வர்க்க மக்கள் அனைவருக்கும் எதிரானது.


கோவில் கருவறை போராட்டம் நடத்தினால் முதல் ஆளாக வந்து எதிர்ப்பது பாஜக , இந்து முன்னணி போன்ற கும்பல்கள்தான்.
இவர்கள் பார்ப்பனருக்கு சேவை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள்..
பார்ப்பனர் அல்லாதோருக்கு கோவிலில் உரிமை மறுப்பவர்கள்.
தமிழையும், தமிழனையும் கோவிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க கூட்டத்திற்கு அடியாள் வேலை செய்பவர்கள்.
சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஆதரிப்பவர்கள்.
ஆனால் இந்து ராஷ்டிரா, ராம ராஜ்ஜியம் என்று பேசி உழைக்கும் வர்க்க மக்களுக்குள் மனதில்  மதவாதத்தை விதைப்பவர்கள்.

இந்துத்வ கும்பலைப் புறக்கணிப்போம்.

இந்து என்னும் அடையாளம் என் மீது திணிக்கப்பட்டிருப்பதால்  இந்துத்வ பிற்போக்கு அரசியலை எதிர்க்க வேண்டியது என் கடமையாகிறது.

கடமை தொடரும்....