ராஜீவ்காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகள் வரிசையாக தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிலையில், அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டது ஏன் என காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்சல் குருவை குறிவைத்து தூக்கில் போடவில்லை என்பதை காஷ்மீர் இளைஞர்களுக்கும், உலகத்தாருக்கும் நிருபிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. ராஜீவ்காந்தி மற்றும் பியாந்த் சிங் கொலையாளிகளின் தூக்கு தண்டனை குறித்து பாஜ தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் சொல்வது எப்படி இருக்குது தெரியுமா: "என் வீட்டில் மட்டும் எழவு விழுந்து விட்டதே! ஊரில் மத்தவன் எல்லாம் நல்லா இருக்குறானே!!" என்று வன்மத்தோடு புலம்புவது போல உள்ளது.
அப்சல் குரு தூக்கு விசயத்தில் இந்தியாவின் பாசிசம் வெளிப்பட்டுள்ளது என்பது அறிந்ததே! சட்டம் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்பதும் அறிந்ததே! கண்டிப்பாக அது கண்டனத்துக்குரியதே!
அதற்காக பரிகாரமாக இன்னும் உயிர்களை எடுக்க வேண்டும் என சொல்வது எப்படி நியாயம் ஆகும்? அதுவும் மக்களை,ஊடகங்களை, பாஜக ஆகியவற்றை உசுப்பேற்றி விடுவது என்ன காரியம்??
உமர் அப்துல்லா மட்டும் இந்த கொலைவெறி பிடித்து அலையவில்லை. Times Now, CNN IBN போன்ற ஊடகங்களும் இதே கொலைவெறியில் மக்களை உசுப்பேற்றும் பணியில் இறங்கியுள்ளன.
ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல ஓட்டைகளை ஏன் இந்திய ஏகாதிபத்தியம் மூடி மறைக்கிறது? அதை பற்றி உமர் அப்துல்லாவும், ஊடகங்களும் ஏன் வாய் திறப்பதில்லை? பாராளுமன்ற தாக்குதல் வழக்கிலும் பல சர்ச்சைகள் உள்ளனவே! அதை பற்றியும் ஏன் வாய் திறப்பதில்லை?

"இந்திய
ஏகாதிபத்தியம் முக்கிய குற்றவாளிகளை கொன்றோ, (தப்பிக்கவோ) விட்டுவிட்டு
அப்பாவிகளை உள்ளே தள்ளி உண்மைகளை மறைத்துவிடும் என்பதே இந்த வழக்குகள்
நமக்களிக்கும் சேதி போலும்." - இக்பால் செல்வன்