அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை மத அடிப்படையில் அடையாளக் கூடாது என்னும் கருத்தை வலியுறுத்தி தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல! என்னும் கட்டுரை பதிவு செய்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு.
கடந்த ஞாயிறு அன்று ஜெய்ப்பூரில் பேசிய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே "பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் இந்துத் தீவிரவாதத்தை வளர்க்கின்றன" என்று கூறியிருந்தார்.
இக்கருத்தை பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்ககும் அதேவேளையில் லஸ்கர்-இ-தொய்பா என்னும் தீவிரவாத அமைப்பு சுஷில்குமார் கருத்தை வரவேற்றுள்ளது.
"தீவிரவாதிகளின் செல்லப்பிள்ளை (Darling of Terrorists) சுஷில்குமார் ஷிண்டே" என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறியுள்ளது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மற்றும் பல தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்பு உள்ளதாகவும், பழியை சிறுபான்மையினர் மீது போடுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஷிண்டே கருத்தை பல காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கிறார்கள்.
நானும் வரவேற்கிறேன்.
ஆனால் அவர் சொன்ன விதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கூறிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்றுக்கொல்லும்பட்சத்தில் அவர்களை "ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்" என்று சொல்லலாம். தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை எக்காலத்திலும் மத அடிப்படையில் அடையாளக் கூடாது.
நேற்று CNN-IBN தொலைக்காட்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் "இந்துத் தீவிரவாதம் என்ற வார்த்தை தவறு. சங் தீவிரவாதம்(Sangh Terrorism) என்று சொல்லலாம்" என்று கூறியிருந்தார். திக்விஜய் சிங் சொல்வது ஏற்புடையது.
இந்துத் தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், கிருஸ்தவ தீவிரவாதம் போன்ற வார்த்தைகள் மக்களிடையே மேலும் மேலும் விரிசலை ஏற்படுத்துமே தவிர ஒருகாலமும் தீவிரவாதத்தை குறைக்காது.
மேற்கூறிய தீவிரவாத செயல்களில் முறையான விசாரணை இதுவரை செய்யப்படவில்லை. விசாரணையை ஏன் காங்கிரஸ் முடுக்கி விடவில்லை?
தேர்தல் நேரத்தின்போதும், மக்கள் பிரச்சினைகளை திசைமாற்றவும், எதிக்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பவும் காங்கிரஸ் எடுக்கும் கேவலமான ஆயுதம்தான் இந்துத் தீவிரவாதம், காவித்தீவிரவாதம் போன்ற வார்த்தைகள்.
குஜராத் தேர்தலின்போதும் இந்த ஆயுதத்தை எடுத்தார்கள்.
2G ஊழல், காமன்வெல்த் ஊழல் பிரச்சினைகள் உச்சத்தில் இருந்தபோதும் இந்த ஆயுதத்தை எடுத்தார்கள்.
இப்போது கூட ரயில் கட்டண உயர்வை திசைதிருப்ப இந்த ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள் என தோன்றுகிறது.
2014 தேர்தலின்போதும் இந்த ஆயுதத்தை எடுப்பார்கள். ஆனால் தீவிரவாதத்தை குறைக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.
இது பல கட்சிகளுக்கும் பொருந்தும்.
எத்தனை முறை சொன்னாலும் இந்த ஓட்டுப்பொறுக்கிகளுக்கு உரைக்காது. மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்த்தை விளையாட்டு விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைவர்களின் கருத்துக்கள், இந்திய நிகழ்வுகள் பற்றி நான் மிகுந்த அக்கறை செலுத்துவது கிடையாது. ஆனாலும் அவர்களது கருத்து, செயல்பாடுகளால் ஏற்கனவே பிரிந்து கிடக்கும் தமிழ்த்தேசத்தில் மேலும் பிரிவு வந்து விடக்கூடாது என்பதை சொல்லவே இந்த பதிவு.
மனித நேயம் குறைந்துவரும் இந்த காலக்கட்டத்தில் மனித நேயம் வளர்ப்போம்!
நன்றி.
இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம்
பதிலளிநீக்குஇந்துத்துவா பயங்கரவாதம்
எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான்.
எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.
ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள்.
பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள்.
மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.
ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.
வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை.
இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது.
இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும்,
பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும்,
இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை.
தண்டிக்கப்படவும் இல்லை.
உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய் திறப்பதுமில்லை.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.
பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.-
91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது.
எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது.
சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும்.
இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.
ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன.
ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது.
அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது.
இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை. –
குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.
குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.
ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை
ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள். - VINAVU.
THANKS TO SOURCE: VINAVU.COM
காவி பயங்கரவாதம்.
பதிலளிநீக்கு21 Jan 2013
மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில்,
காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே, “ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மலோகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்து அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது.
இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர்
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.
ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர்
'' இதில் 100 % நான் ஷிண்டேவுடன் உடன்படுகிறேன்.
இதில் ரகசியம் எதுவும் இல்லை.
எல்லாருக்கும் இது தெரிந்து இருந்தாலும் வெளிப் படையாகச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.
அதற்காக நான் ஷிண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்
>>>> 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா?
நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா? சம்மதமா?
>>>> 2.
இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்
>>>> 3.
ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான "இந்தியா டுடே" யில் வெளியான
“அம்பலமாகும் காவிப்படையின் இருட்டு ரகசியங்கள்." விடியோக்கள்
>>>> 4. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ
>>>> 5.
முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!
இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்.
பதிலளிநீக்குகீற்று இணைய தளத்தின் விடியோவை முழுதுமாக காணுங்கள்.
படத்தொகுப்பு செல்லையா முத்துசாமி.
குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.
சுட்டி சொடுக்கி விடியோவை காணுங்கள்
>>>>>> SITE 1. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்
>>>>>> SITE:2. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்
.
THANKS TO : செல்லையா முத்துசாமி
http://www.chelliahmuthusamy.com/2013/01/blog-post_21.html
THANKS TO : KEETRU.COM
.
உண்மைகள் என்ற பெயரில் மத வெறி பிடித்த மிருகம் வாஞ்சூர் வழமை போல் தனது மத வெறி வாந்தியை கக்கி விட்டு சென்றிருக்கிறார்.
பதிலளிநீக்குநீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை.
பதிலளிநீக்குசிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை.
ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன.
இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று.
சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?
இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.
அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன.
அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது.
சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.
நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?
அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை;
முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை.
அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை.
ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது.
பலர் விசாரணைகூட இல்லாமல் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர்.
இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே.
'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.
இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான்.
காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான்.
இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது.
பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர்.
இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.
SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9821:2010-07-02-10-22-25&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
THANKS TO KEETRU.COM
மீண்டும் வாஞ்சூர் என்னும் தொப்பி பிரட்டி தனது வாந்தியை எடுத்து விட்டு சென்றிருக்கின்றது.
பதிலளிநீக்குஉலகத்தில் இந்த சோனிகள் எங்கே ஒழுங்காக இருந்திருக்கிறார்கள். எங்கே போனாலும் பயங்கர வாதம் தான் செய்கின்றார்கள்
பதிலளிநீக்குஇவ்வளவு காலமாக ஊடகங்களில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லை பயன்படுத்திய போதெல்லாம் சுரணை இல்லையாம், இப்போது "இந்து தீவிரவாதம்" என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த உடன் அது எப்படி சொல்லலாம் என்று வரிந்து கட்டி கொண்டு வருவது, தீவிரவாதிகளை பாதுகாக்கும் முயற்சி போலல்லவா இருக்கிறது. குண்டு வெடித்தவுடன் முஸ்லிம்களின் மேல் பழியை போட்டு, நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்மானிக்கும் முன், ஊடகங்களே குற்றவாளி என்று தீர்ப்பு எழுதி மக்களின் மனங்களில் "முஸ்லிம் தீவிரவாதி" என்ற பொதுப்புத்தியை ஏற்படுத்தியவர்கள், இப்போது எழுதுகிறார்கள்.. "பிரஞ்யா சிங் என்ற பெண் துறவியின் குற்றம் நிரூபிக்கப்படு முன் எப்படி அவரை குற்றவாளியாக்கலாம்" என்று. இதை ஏன் முஸ்லிம்கள் விசயத்தில் கடைபிடிக்கப்படவில்லை?
பதிலளிநீக்குபொது இடத்தில் மத வெறியை தூண்டும் பேச்சை பேசியதாக, ஒவைசி, கமலாந்தா இருவர் மீதும் வழக்கு பாய்ந்தது. ஆனால் ஒவைஸி உள்ளே. கமலானந்தா வெளியே!! காவி தீவிரவாதிகளுக்கு அரசின் கரிசனம் கிடைப்பது தான் அதற்கு கிடைக்கும் உற்சாக பானம். காவி தீவிரவாதமோ, இந்த்துவ தீவிரவாதமோ, இந்து தீவிரவாதமோ, சங்கி தீவிரவாதமோ எப்படி வேண்டுமானாலும் சொல்லி விட்டு போங்கள். ஆனால், அப்படி ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
"இவ்வளவு காலமாக ஊடகங்களில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லை பயன்படுத்திய போதெல்லாம் சுரணை இல்லையாம், இப்போது "இந்து தீவிரவாதம்" என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த உடன் அது எப்படி சொல்லலாம் என்று வரிந்து கட்டி கொண்டு வருவது, தீவிரவாதிகளை பாதுகாக்கும் முயற்சி போலல்லவா இருக்கிறது. "
பதிலளிநீக்குஇஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று பதிவு குருநாதன் போட்ட போது இந்த மத வெறி பிடித்த உதயம் எங்கே போயிருந்தது
"அய்யா குருநாதன் முதலில் உங்களுக்கு என் நன்றிகள்.
பதிலளிநீக்குஎப்போதுமே தமிழக வலைப்பதிவு வரலாற்றில் "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்" இணைத்து எந்த விதமான பதிவு எழுதினாலும் "ஹிட்ஸ்" அல்லும். அதற்காகவே பலரும் ஒருமுறையாவது முயன்று பார்ப்பார்கள். ஆனால் உங்களை அந்த வட்டத்திற்குள் அடைக்க நான் விரும்பவில்லை. உங்கள் உள்ளத்தில் கிடக்கும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.
இஸ்லாத்தின் மீது நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் தீவிரவாத பிம்பத்தை எங்கே குருநாதன் அசைத்து விடுவாரோ என்று அஞ்சி கூக்குரலிடுகிறார்கள். அதிலும் "பெயரில்லா" வாக வந்து வேற வீரம் காட்டுகிறார்கள். இதில் முஸ்லிம் பெயரில் வந்தும் வேறு, காமெடி கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். இவர்களின் அச்சம் எப்படியெல்லம் வெளிப்படுகிறது பாருங்கள்.
இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்."
இது மதவெறி காட்டுமிராண்டி உதயம் திரு.குருநாதன் முஸ்லிம் தீவிர வாதிகள் அல்ல என்று பதிவு போட்ட போது போட்ட பின்னோட்டம். அன்று நேர்மையாளராகவும் நடுநிலையாளராகவும் தெரிந்த குருநாதன் இன்றைக்கு ................................................................................
இப்போ அதே குருநாதன் இந்துகள் தீவிர வாதிகள் அல்ல என்று பதிவு போட்டதும் பொங்கி எழுகின்றார்கள். அவர்களுக்கு சார்பாக யார் பதிவு போட்டாலும் நல்லவர்கள்.
ஆனால் அவர்கள் எதிரிகலை கொஞ்சம் சார்பாக பதிவு போட்டாலும் அவர்கள் கேட்டவர்கள். இதுதான் நபி அவர்களுக்கு கற்று கொடுத்த நீதி.
குருநாதன் இப்போதாவது இவர்களை பற்றி புரிந்து கொண்டு திருந்துங்கள்
விஷ பாம்பை கூட நம்பி போகலாம் ஆனா துலுக்கனை நம்ப கூடாது என்று சொல்வார்கள்.
பதிலளிநீக்குஇன்று குருநாதன் விடயத்தில் உண்மையாகி விட்டது.
"காவி தீவிரவாதமோ, இந்த்துவ தீவிரவாதமோ, இந்து தீவிரவாதமோ, சங்கி தீவிரவாதமோ எப்படி வேண்டுமானாலும் சொல்லி விட்டு போங்கள். ஆனால், அப்படி ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொண்டதற்கு"
பதிலளிநீக்குஇது இருக்கோ இல்லையோ.
இஸ்லாம் தீவிர வாதம் ரொம்பவே இருக்கு
அன்பின் குருநாதன்,
பதிலளிநீக்குஉங்களுக்கு இப்போது வந்திருக்கும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும்.
பாம்புக்கு பால் வார்த்தாலும் அது நஞ்சையே கக்கும்.
இவர்களுக்கு நீங்கள் எந்த வகையிலும் ஆதரவாக பதிவு போட்டாலும் இறுதியில் உங்களுக்கு கிடைக்க போவது கெட்டவன் என்ற பெயரே.
இதை மட்டும் நீங்கள் மறக்க வேண்டாம் "பாம்புக்கு பால் வார்த்தாலும் அது நஞ்சையே கக்கும்"
உங்கள் விடயத்தில் அது உறுதியாகி விட்டது.
வாஞ்சூரும், உதயமும் தாங்கள் பாம்புகள் என்பதனை உறுதிப்படுத்தி விட்டனர்.
இனிமேல் வேறு பலர் வருவர் (பாம்புகள்)
நாகூர் மீரான்
சுவன பிரியன்
ETC
PART 1. காவி தீவிரவாதம்.
பதிலளிநீக்குஇதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!
காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
காவி தீவிரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதில் தவறு என்ன?
அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே!
மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை
காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே.
அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும்,
அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்;
அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!
அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!
இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!
தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!
1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவாவாதிகள் அல்லாமல் வேறு யார்?
இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?
2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).
புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!
3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?
உ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்?
4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா?
அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்!
இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்?
தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?
காந்தியாரைக் கொன்றவன் யார்?
5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா!
அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?
6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?
Continued …….
PART 2. காவி தீவிரவாதம்
பதிலளிநீக்குஇதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!
7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?
8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?
ஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே?
உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.
திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்?
நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன?
ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?
என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்?
பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.
தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?
மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!
ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!
--கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
சென்னை"விடுதலை”22.1.201
http://www.viduthalai.in/headline/53195-kveeramani-arikkai.html
மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை
பதிலளிநீக்குமத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப் பனர்கள் அதில் மட்டுமல்லாமல்,
அய்தரா பாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு,
அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை திட்டமிட்டே அங்கே நிகழ்த்திவிட்டு,
முஸ்லீம்கள்மீது பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!
2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (NIA) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.
டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் - கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் - இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை - வழக்குகள் - நத்தை வேகத்தில் நகர வேண்டும்?
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்?
வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.
தீவிரவாதம் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந்துள்ளார்கள்.
மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால்,
காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும்,
ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு,
செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங்களாக இருக்க வேண்டும்!
நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?
தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள்மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?
எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 16.1.2013
http://www.viduthalai.in/headline/52798-2013-01-16-09-42-59.html