இந்த வருட தொடக்கத்தில் பலருக்கும் நாக்கில் சனி குடியேறிவிட்டது என நினைக்கிறேன். பாலியல் பலாத்காரம் பற்றி பல அரசியல், ஆன்மீக தலைவர்கள் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் மதவெறி பிடித்து பேசிய இருவரைப் பற்றி காண்போம். இவர்கள் டிசம்பர் மாதமே பேசி விட்டார்கள். ஆனால் இப்போதுதான் விவகாரம் சூடு பிடிக்கிறது.
"15 நிமிடங்களுக்கு காவல்துறை அகற்றப்பட்டால், 100 கோடி இந்துக்களை தாம் அழித்துவிட முடியும்". மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அஜந்தாவில் உள்ள எல்லோரா குகை சிற்பங்களையும் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
ஓவைஸியின் அடியாட்களே பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நச்ரூதீனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என 5 வருடங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
அடுத்து விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "
இருவரது பேச்சும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுமாதிரி அறிக்கை விடுபவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்து கொள்வார்கள். தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் தைரியம் கூட இவர்களுக்கு இல்லை.
இவர்கள் போன்ற அரைகுறைகளின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, மோதலில் ஈடுபட்டு பாதிப்புக்குள்ளாவது அப்பாவி மக்களே!
எனவே அக்பருதீன் ஒவைசி, பிரவீன் தொகடியா போன்ற விஷச்செடிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி, அகற்றுவோம்.
எனவே அக்பருதீன் ஒவைசி, பிரவீன் தொகடியா போன்ற விஷச்செடிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி, அகற்றுவோம்.
பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் பற்றி சற்று பார்ப்போம்.
1960 வரை சார்மினார் அருகில் அப்படி ஒரு கோவில் கிடையாது என்று பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நம்ம ஊரில் தெருவோர கோவில்கள் எப்படி தோன்றும் என்பது நாம் அறிந்ததே!
1960 வரை சார்மினார் அருகில் அப்படி ஒரு கோவில் கிடையாது என்று பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நம்ம ஊரில் தெருவோர கோவில்கள் எப்படி தோன்றும் என்பது நாம் அறிந்ததே!
சார்மினாரின் அழகிய தோற்றத்தை, பண்பாட்டை இக்கோவில் கெடுக்கிறது. இப்போது
இந்த கோவிலை விரிவாக்கம் செய்கிறோம் என்னும் பெயரில் கலவரத்துக்கு
வித்திடுகின்றன சில மதவாத சக்திகள். ஊருக்குள் எத்தனையோ பெரிய கோவில்கள்
பாழடைந்து கிடக்கும்போது இந்த ரோட்டோர கோவிலுக்கு இவர்கள் முக்கியத்துவம்
கொடுக்க என்ன காரணம்? (இன்னும் சில தினங்களில் நேரில் சென்று பார்த்த பின்னர் இது பற்றி இன்னொரு கட்டுரை இடுகிறேன்)
அக்பருதீன் ஒவைசி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
MIM கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என ஆந்திர காங்கிரஸ் அறிவித்துள்ளது.
MIM கட்சியை தடை செய்வது பற்றி பேச்சு எழுகிறது.
அனைத்தும் சரி.
பிரவீன் தொகடியா மீது என்ன நடவடிக்கை?
பொறுத்திருந்து பார்ப்போம்.
சலாம் சகோ.
பதிலளிநீக்குநல்ல பதிவு..அவசியமானதும் கூட... " ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; " என்கிறது அல் குர்ஆன். மேலும் கூறுவதை கேளுங்கள்...
" 7:56. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. "
இது மூமின்களை நோக்கி கூறுகிறது..இங்கு மக்கள் அமைதியாக ,சமரசமாக வாழும் இடத்தில இப்படி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற கருத்துக்களை வெளியிடுவோருக்கு இஸ்லாமிய ஷரியத் மரணதண்டனை விதிக்கிறது...சமுதாய அமைதியை இஸ்லாம் பேணுகிறது...அது முஸ்லிம் கட்சி எம் எல் எ இருந்தாலும் சரி ,பிரவீன் தொகாடியாகளாக இருந்தாலும் சரி...அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..அதுதான் மனித சமூகத்திற்கு நல்லது ..!!!
ஒவைசி கூறியதற்கு முஸ்லிம் சமூகமே ஒத்துக்கொள்ளது..இது பைத்தியக்காரனின் பிதற்றலாகவே காண்கிறோம்..இதை இஸ்லாம் அல்லாத அன்பர்கள் பெரிதாக நினைக்க தேவை இல்லை என்பதை இக்கணம் இங்கு பதிவு செய்கிறோம்...
தொக்காடிகளை பற்றி நீங்கள் வருத்தம் தெரிவிக்க தேவை இல்லை..இதுவும் பைத்தியக்காரனின் பிதற்றல் என்பதை நாங்கள் அறிவோம்..கண்டனங்களை மட்டும் பதிவு செய்தாலே போதுமானது ..
நன்றி !!!
நன்றி !!!
நீக்குஅக்பருதீன் உவைஸியின் வகுப்புவாத வெறியை தூண்டும் பேச்சு கண்டிக்கத்தக்கது கண்டனத்துக்குரியது. இது பிரவீன் தொகாடியா, வருன் காந்தி, அசோக் சிங்கால் போன்றவர்களின் மதவெறி பேச்சின் வகையினை சேர்ந்தது. இந்த மூவரையும் இவர்களைப் போன்றோர்களையும் கண்டிக்கும் சான்றோர்கள் யாவரும் இந்த உவைஸியையும் கண்டிக்க வேண்டும். இவரது பேச்சை ஒரு காரணமாக வைத்து மீண்டும் இன்னொரு வன்மம் கக்கும் பேச்சுக்கு யாராவது தயாரானால் அவரையும் பாரபட்சமில்லாமல் கைது செய்ய அரசிற்கு தயக்கம் இருக்கக்கூடாது.
இதுவரை சங்பரிவார்கள் தான் இப்படியான மதவெறி பேச்சுக்களை பேசி வந்துள்ளனர். அந்த புகழை உவைஸி தட்டிப் பறிக்க நினைப்பது இந்திய முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு சமம். இந்தப் பேச்சின் மூலம் கலவரம் உருவாக்கப்பட்டால் , எங்கும் எப்போதும் பாதிப்புக்குள்ளாவது முஸ்லிம் சிறுபான்மைகளே.. ஒவ்வொரு கலவரத்திற்குப் பின்னும் முஸ்லிம் சமூகம் பத்து ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது. அவர்களது சொத்துக்கள் பறிக்கப்படுவதுடன் உயிர் மற்றும் உடைமைகள் இழந்து நடுத்தெருவில் நடைபிணமாக வாழ நேரிடுகிறது.
குண்டு வெடிப்பின் பாதிப்பை விட" கலவர பாதிப்பு" தான் ஒரு சமூகத்தை நிர்கதியாக்குகிறது. குண்டு வெடிப்பில் செத்தவர்களை விட, இந்தியாவில் மதகலவரத்தில் செத்தவர்களே அதிகம். அதனால் தான் சிலர் அதை திட்டமிட்டு நடத்துகிறார்கள். முஸ்லிம்களின் மேல் கலவரம் நடத்துவதற்கும் "விலை நிர்ணயமும், பேரமும்" (ராம்சேனாவின் "பிரவீன் முத்தலிக்" ) பேசப்பட்டதும், அது மதசார்பற்ற இந்தியாவில் ஒரு "பிஸினஸ்" ஸாக மறைமுகமாக இருந்து வருவதையும் பார்க்கும் போது, இதற்கு பின்னால் ஒரு சதிவலையும் இருந்து வருகிறது.
இந்தியாவில் கலவரத்தில் சாவதற்கென்றே ஒரு இனம் உள்ளதென்றால் அது முஸ்லிம்கள் தான்.அதனால் மக்களின் பிரதிநிதியான இவர் பொறுப்புடன் அல்லவா பேசியிருக்க வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேச வேண்டியவர்; முஸ்லிம்களுக்கே பிரச்சினை ஆகி விட்டார்.
தொகாடியா போன்றோர்களின் மதவெறியூட்டும் பேச்சுக்களை பெரும்பான்மை இந்து சகோதரர்கள் எப்படி வெறுக்கிறார்களோ அப்படித்தான் இவரது பேச்சையும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வெறுக்கிறார்கள். இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
சலாம் சகோ.குரு நாதன்,
பதிலளிநீக்குஉவைசியின் மக்கள் விரோத பயங்கரவாத பேச்சுக்கு பின்னணியாக இப்படி ஒரு தொகாடியாவின் மத பயங்கரவாதம் இருப்பது இப்போதுதான் புரிகிறது.
விஷயத்தை தெளிவாக புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி சகோ.
பயங்கரவாதியை விட பயங்கரவாதியை உருவாக்குபவன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி..!
நாம் பயங்கவாதியாயை மட்டுமே கைது செய்து இன்னும் அதிக பயங்கரவாதிகளை உருவாக்கிகிக்கொண்டு வருகிறோம்..!
எங்கே போயி முடியுமோ.... இறைவன்தான் நம்நாட்டை காப்பாற்ற வேண்டும்..!
~சகோ முஹம்மத் ஆஷிக்,
நீக்குதங்கள் விருப்பத்திற்கு இணங்க ஒரு பின்னூட்டம்
தொகாடியாவின் பேச்சு பயங்கரமானது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவர் பேச்சுதான் ஓவசியை இப்படி பேச வைத்திருக்கின்றது என்று நீங்கள் நம்பினால் , அவ்வாறு பிறரும் நம்ப வேண்டும் என்று நினைத்தால் அது தவறானது.
இவர் ஏற்க்கனவே சல்மான் ருஷ்டியையும்,தஸ்லீமா நஸ் ரீனையும் கொல்ல பட்வா விதிப்பேன் என்று கூறியவர்.
நரசிம்மராவ் இறக்கவில்லை என்றால் என் கையாலே கொன்றிருப்பேன் என்று கூறியவன்.
//Owaisi is known for making inflammatory Islamist speeches.[2][3][4] In 2007, he threatened to carry out the fatwa to kill Salman Rushdie and behead Taslima Nasreen if they ever visited Hyderabad.[5][2][4] In 2011, he said that he would have killed P V Narasimha Raowith his own hands had he not died.[3] //
http://en.wikipedia.org/wiki/Akbaruddin_Owaisi
அதுமட்டுமல்ல இவனது தந்தையும் இந்த மாதிரி கலவரத்தை தூண்டும் மாதிரி பேசியவர்தான்.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hate-speech-not-new-for-Owaisi-clan/articleshow/17963124.cms
இருவர் பேசியதும் தவறு என்பதோடு விட்டுவிடுங்கள். இவர் ஒன்னும் தெரியாத பச்ச குழந்த, தொகாடியா தூண்டிவிட்டுட்டார் என்பதெல்லாம் உங்களை திருப்திபடுத்த மட்டுமே பயன்படும்.
என்னைப்பொருத்தவரை இருவருக்கும் ஒரேயளவு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும்.
//இறைவன்தான் நம்நாட்டை காப்பாற்ற வேண்டும்..!//
யாரு அல்லாவா? அவர்தான் தன்னை வணங்காதவரை அழித்துவிடுவாரே(அழித்துள்ளாரே) அப்புறம் எப்படி 100 கோடி இந்து மக்களை கொண்ட இந்திய நாட்டை காப்பாற்றுவார்? சிந்தியுங்கள் சகோ.
நன்றி சகோ
//இருவர் பேசியதும் தவறு என்பதோடு விட்டுவிடுங்கள்.//------
நீக்குஇருவர் சொன்னதும் தவறு என்றால்... ஒருவரை மட்டும் கைது செய்தது குற்றம் என்கிறேன்.
மேலும், தொகாடியா பேசியதை... அவ்வளவு ஈசியாக விட முடியாது சகோ.புரட்சிமணி.
ஏனெனில்... தொகாடியா சொல்ல மட்டும் மாட்டார். செய்தும் காட்டுவார். அப்படி செய்து காட்டியும் இருக்கிறார்... அவரின் அடிபொடிகளை வைத்து..! தொகாடியாவுக்கு படு ஸ்ட்ராங்கான செயல்முறை ட்ராக் ரிக்கார்ட் குஜராத்தில் உண்டு.
ஆனால்... இந்த ஒவைசி வெறும் ஓட்டுப்பொறுக்கி. வாய்ச்சொல்லோடு சரி. இதுவரை இவரின் அடிபொடிகள் இவர் சொன்னதை செய்தது இல்லை. அதனால், இருவர் பேச்சும் சம அந்தஸ்து கொண்டவை அல்ல.
தொகாடியா சொன்னதை கவனியுங்கள்.
//பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "//
-------குஜராத்தில் கோத்ரா ரயில் எறிந்த என்று சொன்ன அதே 'பாடம் புகட்டுவோம்' என்ற வசனம்.
மூன்று நாள் சட்டம் ஒழுங்குக்கு லீவு கொடுத்த பின்னர் 'இதற்கு என்ன அர்த்தம்' என்று இப்போது நமக்கு நன்கு தெரியும். ஒவைசிக்கும் தெரியும். அவரின் அடிபொடிகளுக்கும் தெரியும். ஆதனால் தான்... 'நீ என்ன மூணு நாள்... எனக்கு பதினஞ்சு நிமிஷம்' போதும் என்கிறார் ஒவைசி. 'ஆஹா.. நம்ம தலைவருக்கு என்னா ஒரு தகிரியம் பாரேன்..' என்று ... விசில் பறக்கும். அத்தனையும் ஓட்டாக மாறும்.
இந்த ஆள் ஒரு முட்டாள். புத்திசாலியாக இருந்திருந்தால்... தொகாடியா அப்படி சொன்னதுக்கு "அவரை கைது செய்" என்று தமது கட்சியை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் போட்டு இருந்தால்... ஒவைசி இன்று முஸ்லிம்களின் ஹீரோ ஆகி இருந்திருப்பார். புத்திசாலி முஸ்லிம்களின் ஓட்டும் இவருக்கு கிடைத்து இருக்கும். நடுநிலையாளர்கள் கூட ஒட்டு போடுவார்கள். இவரால்தான்... தொகாடியாக்களின் கை நாட்டில் ஓங்குகிறது.
தொகாடியாவை பற்றி பேசியவுடன் //இருவர் பேசியதும் தவறு என்பதோடு விட்டுவிடுங்கள்.// என்கிறார்..பதிலுக்கு பேசியவருக்காக ஒரு பதிவே போடுகிறார்.. என்ன ஒரு வில்லத்தனம்..
நீக்குஹிந்து பத்திரிக்கையில் பார்த்த செய்தி,இன்றைய அத்வானிஜி போல கங்கை நதி ஒரு காலத்தில் தூய்மையாய் இருந்தது என்று உமா பாரதி சொன்னதும் அத்வானி கண் கலங்கி விட்டாராம்...அது போல் புர்ட்சி செய்யுறேன்னு மணி கெளம்பிட்டாரு..விடுங்க..விடுங்க...
~முஹம்மத் ஆஷிக்,
நீக்கு//இந்த ஆள் ஒரு முட்டாள். புத்திசாலியாக இருந்திருந்தால்... தொகாடியா அப்படி சொன்னதுக்கு "அவரை கைது செய்" என்று தமது கட்சியை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் போட்டு இருந்தால்... ஒவைசி இன்று முஸ்லிம்களின் ஹீரோ ஆகி இருந்திருப்பார். புத்திசாலி முஸ்லிம்களின் ஓட்டும் இவருக்கு கிடைத்து இருக்கும். நடுநிலையாளர்கள் கூட ஒட்டு போடுவார்கள். இவரால்தான்... தொகாடியாக்களின் கை நாட்டில் ஓங்குகிறது.//
மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள் சகோ. ஏன் இன்னும் தொகாடியாவை கைது செய்யவில்லை,கைது செய்ய சொல்லவில்லை என்பது எனக்கும் வியப்பாகவே உள்ளது சகோ.
தொகாடியா பேசியதை கண்டித்து ஒரு இந்து பதிவு போட்டிருக்கார். ஆனால் ஒவைசி பேசியதை கண்டித்து இஸ்லாமியர் பதிவு போட்டிருக்கீங்களா? அதை சொல்லுங்க முதலில்
நீக்கு@guru nathan
பதிலளிநீக்குநேரத்திற்கு பதிவிட்டுள்ளீர்கள். என் தளத்திலும் உங்கள் பதிவை,ஒரு பத்தியை
பகிர்ந்துள்ளேன்.உங்களை கேட்காமலேயே :)
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post_9.html
பார்த்தேன். நல்ல கருத்துக்களை பகிர அனுமதி கேட்க தேவையில்லை :)
நீக்குமதவாதிகளின் மூளை மழுங்கி விடும், மிருகமாகி விடுவார்கள் என்பதற்கு இவர்களே சாட்சியங்கள் ... ! இவ்வாறு இனவெறியூட்டும் பேச்சினை பேசுபவர்களை அரசியல், அரசுப் பதவிகளில் இருந்து நீக்கி, தடை விதித்து சிறைக்குள் அடைக்க வேண்டும் ... ! பேச்சுரிமை என்பதை வன்மம் வளர்க்க அனுமதிக்க விடுதல் தேசத்துக்கு ஆபத்தாக அமையும் என்பதில் ஐயமில்லை .. !!! இவ்வாறான வெறியர்களின் பின்னாலும், ஆதரவு கூறியும் பல வெறியர்கள் சமூகத்தில் இருப்பது வேதனை தருகின்றது ... ! மதுப் பித்து விடிந்தால் கலையும், மதப் பித்து எப்போதும் கலையாது .. !
பதிலளிநீக்குசகோ.
பதிலளிநீக்கு" நோய் நாடி நோய் முதல் நாடி " என்கிறார் வள்ளுவர்..ஒரு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் அது முதலில் எங்கிருந்து வந்தது என்றே பார்க்க வேண்டும்..அந்த வகையில் முதலில் பிரச்சனையை தூண்டும் விதமாக பேசிய தொகாடியாதான் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்..ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிறது அறிவியல்..அந்த வகையில் ஒவைசி பேசியது எச்சரிக்கதக்கது..
ஆனால் சகோ.புரட்சிமணி முதல் கல்லை மறைத்து விட்டு பதிலுக்கு கல் எறிந்தவனை சாடுகிறார்...அவரது பதிவின் இறுதியில் தாம் பதிவிட்டவுடன் பார்த்ததாக ஒப்புக்காக தொகாடிய விவகாரத்தை குறிப்பிடுகிறார்..ஒரு குற்றம் சுமத்துகிறோம் என்றால் எதனால் ஏற்பட்டது என்று இருபுறமும் தானே பதிவிடவேண்டும்.சகோ.குருநாதன் பதிவை போல...ஆனால் புரட்சிமணி ஒரு நடுநிலையாளனாக காட்டிக்கொள்ள ஆசை படுகிறார்..அதை நாம் வரவேற்போம்..ஆனால் அவரது எந்த செயலும் அவ்வாறு அமையவில்லை...அங்கு சம்பந்தமே இல்லாமல் இதுதான் சான்ஸ் என்று இஸ்லாமிய வகாபியத்தில் ஆரம்பித்து நபி கொடுத்த மார்க்கம் என்ன தெரியுமா..? என்பது வரை பொய் விட்டார்..இதுதானா உங்க நடுநிலைமை..பிரச்சனைக்கு தூபம் போட்டதே தொகாடியாதான் .இது அனைவருக்கும் தெரியும்..அதற்காக அவர் சார்ந்த மதத்தை என்றாவது புரட்சிமணி விமர்சித்தது உண்டா..?அண்ணன் எப்ப சாவன் தின்ன எப்ப காலியாகும் என்று காத்திருப்பது போல் இஸ்லாமை விமர்சிக்க காத்திருப்பதை வரவேற்கிறேன்..ஆனால் கொஞ்சம் நேக்கு பார்த்து செய்யணும் சகோ...
வரட்டா !!..
டிஸ்கி.: இங்கு யாரையும் திருப்தி படுத்தவேண்டும் என்ற அவசியம் எமக்கு இல்லை..முதலில் நோய் முதல் நாடி அறியாததால் ஒவைசிதான் பிரச்சனையை ஆரம்பித்தார் என்று அவரை சாடினோம்..இப்போது தொகாடிதான் காரணம் என்று அறிந்ததால் அவரை சாடுகிறோம்...
நாகூர் மீரான் என்ற போலி பெயரில் இருக்கும் சகோ,
நீக்கு//பதிலுக்கு பேசியவருக்காக ஒரு பதிவே போடுகிறார்.. என்ன ஒரு வில்லத்தனம்..//
வார்த்தையில் கவனம் தேவை சகோ. பிறரை வில்லனாக பார்க்காமல் அன்புடன் பார்க்க பழகுங்கள்.
//" நோய் நாடி நோய் முதல் நாடி " என்கிறார் வள்ளுவர்..ஒரு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் அது முதலில் எங்கிருந்து வந்தது என்றே பார்க்க வேண்டும்..அந்த வகையில் முதலில் பிரச்சனையை தூண்டும் விதமாக பேசிய தொகாடியாதான் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்..ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிறது அறிவியல்..அந்த வகையில் ஒவைசி பேசியது எச்சரிக்கதக்கது..//
சரியாக சொன்னிர்கள் சகோ. நீங்களும் கொஞ்சம் கண்களை மூடி யோசித்து பாருங்கள். பல பிரச்சனைகளுக்கு காரணம் இசுலாமியர்கள் படையெடுப்பு என்ற உண்மை உங்களுக்கு கிடைக்கும். இசுலாமியர்கள் படையெடுப்பின் பொழுது உங்கள் பூட்டனும் என் பூட்டனும் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இசுலாமிய படை எடுப்பிற்க்கு பல காலம் கழித்து நீங்கள் என்னை வில்லனாக பார்க்கிறீர்கள். இதுதான் எனக்கு வேதனையை தருகிறது சகோ :(
//அங்கு சம்பந்தமே இல்லாமல் இதுதான் சான்ஸ் என்று இஸ்லாமிய வகாபியத்தில் ஆரம்பித்து நபி கொடுத்த மார்க்கம் என்ன தெரியுமா..? என்பது வரை பொய் விட்டார்.//
இதுவும் நோய் நாடி நோய் முதல் நாடி தான் சகோ
//பிரச்சனைக்கு தூபம் போட்டதே தொகாடியாதான் .இது அனைவருக்கும் தெரியும்..அதற்காக அவர் சார்ந்த மதத்தை என்றாவது புரட்சிமணி விமர்சித்தது உண்டா..?//
என்னுடைய பழைய பதிவுகளை கொஞ்சம் பாருங்கள் சகோ. அங்கு நான் மதங்களுக்கு உள்ள ஒற்றுமையை பற்றித்தான் எழுதிருப்பேன்.
நான் எப்பொழுது அளவுக்கு அதிகமான இசுலாமிய மத பிரச்சாரத்தை பார்த்தேனோ அப்பொழுதுதான் ஆசிக் சகோவிடமிருந்து குரானை வாங்கி படித்தேன். அதற்க்கு முன்பும் என்னிடம் வேறு இரு குரான்கள் இருந்தது வெளியூரில். பிறகு இசுலாமை பரப்பும் ஒரு சகோவின் சில பதிவுகளில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டினேன். சில பதிவுகளையும் இட்டுள்ளேன். இசுலாமை விமர்சிக்க காரணம் பதிவுலகில் இருக்கும் மதப்பிரச்சாரம் தான்.அதிலும் எனக்கு தவறு என்று தெரிந்தால் மட்டுமே சுட்டிக்காட்டுவேன். பல நேரங்களில் அதை செய்யாமலும் விட்டுள்ளேன் என்பது வேறு. இந்து,கிருத்துவ மதத்தை யாராவது பரப்பினால் அதில் உள்ள தவறுகளையும் சுட்டி காட்டுவேன். உண்மையில் இதுவரை எனக்கு தொகாடியா பற்றி தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் விமர்சித்திருப்பேன்.
இந்த பதிவிற்கு காரணம் கூட பதிவுலகில் யாரும் இதுபற்றி எழுதாமால் என் கண்ணுக்கு இது பட்டுத் தொலைதத்துதான்.உண்மையில் எனக்கு இந்த பதிவில் விருப்பம் இல்லை. இதை நான் போலி மத்ச்சார்ப்பின்மைவாதிகளை சாடவே எழுதினேன்.கூடவே என்னை உறுத்திய குரான் வசனத்தையும் விமர்சிக்க வேண்டியதாகிவிட்டது.
மற்றபடி என்னை நடுநிலையாளர் என்று அடையாளப்படுத்த நான் விரும்பியதே இல்லை. உண்மையின் பக்கம் மட்டுமே நின்று உண்மையை அறியாதவர்களை வெறுக்காமல், எதிரியாக பார்க்காமல் அன்புடன் உண்மையை எடுத்து சொல்வதே என் கொள்கை.
(குறிப்பு: நீங்கள் யார் என்று எனக்கு தெரியும். நாம் ஒருமுறை சந்தித்தும் உள்ளோம்.எனவே நாம் நேரில் சந்தித்து கூட உரையாடலாம். என்னை வில்லனாக எண்ணாமல் நட்பாக நினைத்தால்,விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.)
நன்றி
சகோ.புரட்சிமணி
பதிலளிநீக்குநடுநிலையாளர்களின் நட்பை நாம் என்றுமே விரும்புவோம்..இங்கு பாருங்கள் ..நம் ராவணன் என்னை யார் என்று நினைக்கிறார்..
//ராவணன் Said,
அண்ணாச்சி சுகவீனம் நாக்கூர் நாகப்பனாக உலாவராமல் சுகவீனமாக வந்தால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை.//
நீங்கள் , நான் யார் என்று நினைக்கிறீர்கள்..?
//நீங்கள் யார் என்று எனக்கு தெரியும். நாம் ஒருமுறை சந்தித்தும் உள்ளோம்.//
:-))
சகோ,
நீக்குநான் சுவனத்தின் மீது பிரியம் கொண்ட பெயரை கொண்டவரை இதுவரை சந்தித்ததில்லை . ஆனால் உங்களை ஒருமுறை சந்தித்துள்ளேன் என்று தெளிவாகவே கூறியுள்ளேன். (அன்று நீங்கள் சிவப்பு சட்டை அணிந்திருந்தீர்கள்...அன்று சாப்பிட்ட.......சரி இதுபோதும் என நினைக்கின்றேன்.)
உங்கள் பெயரை பொதுவில் சொல்வதில் எனக்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் உங்கள் நலனுக்காகவே அதை நான் செய்ய விரும்பவில்லை.
:)
சகோ.புரட்சிமணி
நீக்குநாகூர் மீரான் என்பது எனது போலி பெயரல்ல...மேலும் நீங்கள் நினைக்கும் நபரும் நாமல்ல..ராவணன் நினைக்கும் நபரும் நாமல்ல..!!!
நன்றி !!!
நீங்கள்கூறுவது பொய்யென்று நானறிவேன் :)
நீக்கு"நாகூர் மீரான் என்பது எனது போலி பெயரல்ல...மேலும் நீங்கள் நினைக்கும் நபரும் நாமல்ல..ராவணன் நினைக்கும் நபரும் நாமல்ல..!!!
நீக்குநன்றி !!!"
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
தொகாடியா பேசியதை கண்டித்து ஒரு இந்து பதிவு போட்டிருக்கார். ஆனால் ஒவைசி பேசியதை கண்டித்து இஸ்லாமியர் பதிவு போட்டிருக்கீங்களா? அதை சொல்லுங்க முதலில்
பதிலளிநீக்கு