உலக நாயகன் அவர்களே!
'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே!
கருத்துரிமை பேசும் நடுநிலைவாதிகளே!
விஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே!
விஸ்வரூப எதிர்ப்பாளர்களே!
மற்றும் அனைவருக்கும் வணக்கம்.
எல்லாளன், ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், பாலை. இதுபோன்ற பல படங்கள் பல தடைகளை சந்தித்துள்ளன. சில படங்கள் கடைசிவரை திரையிடப்படவே இல்லை. இதுபோன்ற பல படங்கள் இன்னமும் தடைகளை சந்திக்கும். இந்த படங்கள் வெறும் கதையல்ல. நடந்த வரலாறு. யாரையும் புண்படுத்தும் படங்களும் அல்ல. ஆனால் அந்த படத்தின் மீதான தடை பற்றி நாம் கண்டுகொள்ள தாயாராக இல்லை. இனியாவது கண்டுகொள்வோம்.
பல கோடிகள் கொடுத்து 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை பல தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். யாரும் முன்வரவில்லையே! அந்த திரையிடப்படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் தடுத்தார்களே!
கமல் மாபெரும் நடிகன், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தமிழ் சினிமாவை உயர்த்தினார் என்று எப்படி சொல்ல முடியம்?
உதாரணத்துக்கு விஸ்வரூபம் வெளியான அதே நாளில் 'வழக்கு எண் 18/9' படமும் வெளியானால் நம் மக்கள் எதை பார்க்க கூடுகிறார்கள்?
100 கோடியை 20 புது இயக்குனர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கண்டிப்பாக 10 நல்ல படங்கள் கிடைத்திருக்கும். 10 திறமையான இயக்குனர்கள் கிடைத்திருப்பார்கள். அதெல்லாம் இங்கு சாத்தியமில்லையே! பின்னர் எப்படி தமிழ் சினிமா உயரும்?
கருத்துரிமை பேசும் நடுநிலைவாதிகளே!
சமுத்திரகனி அவர்களுக்கோ, தம்பி ராமையா அவர்களுக்கோ இப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் கண்டிப்பாக வாயை திறந்திருக்கவே மாட்டோம். அதுதான் நிதர்சனம்.
விஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே!
இங்கேயும் ஒட்டு வேட்டையா? என்ஜாய்!
இனியாவது படப்பெட்டிய தூக்கிட்டு ஓடாதீங்க.
கமல்ஹாசன் அவர்களே!
உங்கள் காட்டில் நல்ல மழை! ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு 'தமிழன்', மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க! ).
உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும்.
'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே!
உங்கள் நிலை வழக்கம் போல பரிதாபம்தான். தியேட்டர் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டார்கள்.
நன்றி: http://tamilmottu.blogspot.com/2013/01/blog-post.html
'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே!
கருத்துரிமை பேசும் நடுநிலைவாதிகளே!
விஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே!
விஸ்வரூப எதிர்ப்பாளர்களே!
மற்றும் அனைவருக்கும் வணக்கம்.
எல்லாளன், ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், பாலை. இதுபோன்ற பல படங்கள் பல தடைகளை சந்தித்துள்ளன. சில படங்கள் கடைசிவரை திரையிடப்படவே இல்லை. இதுபோன்ற பல படங்கள் இன்னமும் தடைகளை சந்திக்கும். இந்த படங்கள் வெறும் கதையல்ல. நடந்த வரலாறு. யாரையும் புண்படுத்தும் படங்களும் அல்ல. ஆனால் அந்த படத்தின் மீதான தடை பற்றி நாம் கண்டுகொள்ள தாயாராக இல்லை. இனியாவது கண்டுகொள்வோம்.
பல கோடிகள் கொடுத்து 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை பல தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். யாரும் முன்வரவில்லையே! அந்த திரையிடப்படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் தடுத்தார்களே!
"இது ஒருபுறம் இருக்கட்டும்.
எதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை
மாற்றவா? அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா
எடுக்கிறார்கள்? அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம்."- வன்னிஅரசு.கமல் மாபெரும் நடிகன், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தமிழ் சினிமாவை உயர்த்தினார் என்று எப்படி சொல்ல முடியம்?
உதாரணத்துக்கு விஸ்வரூபம் வெளியான அதே நாளில் 'வழக்கு எண் 18/9' படமும் வெளியானால் நம் மக்கள் எதை பார்க்க கூடுகிறார்கள்?
100 கோடியை 20 புது இயக்குனர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கண்டிப்பாக 10 நல்ல படங்கள் கிடைத்திருக்கும். 10 திறமையான இயக்குனர்கள் கிடைத்திருப்பார்கள். அதெல்லாம் இங்கு சாத்தியமில்லையே! பின்னர் எப்படி தமிழ் சினிமா உயரும்?
கருத்துரிமை பேசும் நடுநிலைவாதிகளே!
சமுத்திரகனி அவர்களுக்கோ, தம்பி ராமையா அவர்களுக்கோ இப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் கண்டிப்பாக வாயை திறந்திருக்கவே மாட்டோம். அதுதான் நிதர்சனம்.
விஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே!
இங்கேயும் ஒட்டு வேட்டையா? என்ஜாய்!
இனியாவது படப்பெட்டிய தூக்கிட்டு ஓடாதீங்க.
கமல்ஹாசன் அவர்களே!
உங்கள் காட்டில் நல்ல மழை! ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு 'தமிழன்', மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க! ).
உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும்.
'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே!
உங்கள் நிலை வழக்கம் போல பரிதாபம்தான். தியேட்டர் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டார்கள்.
கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு
தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா
கூறியுள்ளார்.
அய்யா பாரதிராஜா அவர்களே! வார்த்தையை அளந்து பேசுங்கள். எதிரிகளும், துரோகிகளும் எம்மை ஆண்டபோது நான் வெட்கித் தலைகுனிய வில்லை. ஈழத்தில் எம் இனம் அழிந்தபோதும் கண்ணீர்தான் விட்டேன். வெட்கித் தலைகுனிய வில்லை.இனியும் தமிழர்ப் பிரச்சினைகளைளுக்காக களத்தில் நின்று போராடுவேன், அல்லது கண்ணீர் வடிப்பேன். தமிழனாய் இருப்பதற்கு ஒருநாளும் வெட்கித் தலைகுனிய மாட்டேன்.
வெளியுலகில் தன்னை மாபெரும் இந்தியனாக காட்டிக்கொள்வதும், தனக்கு தமிழகத்தில் பிரச்சினை என்றதும் நானும் தமிழன்தான் என்று வீர வசனம் பேசுவதும் உங்களைப் போன்ற கூத்தாடிகளுக்கு (உதாரணம்: சின்மயி, ஜெயராம்) புதிதல்ல.
எம் தமிழக இளைஞர்கள் இன்று கூத்தாடிகளுக்கு கொடி பிடிக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் எம் இளைஞர்கள் தமிழ்த்தேசிய களத்தில் வீரநடை போட்டு மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
padhivittamaikku nandri
பதிலளிநீக்குsurendran
surendranath1973@gmail.com
kuppai
பதிலளிநீக்குஆம் விஸ்வரூபம் ஒரு குப்பை
நீக்குஅருமையாக சொன்னீர்கள். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குசகோ.குருநாதன்
பதிலளிநீக்குபாபர் மசூதிக்கு இடிப்பதற்கு கரசேவைக்கு ஆள் அனுப்பிய நம் அம்மா அவர்கள் விஸ்வரூபத்திற்கு கேட்டவுடனேயே தடை விதித்தது இஸ்லாமியர்களாலும் நம்ப முடியாதது...இருந்தாலும் வரும் தேர்தலில் ஓட்டுக்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தான் நான் நினைத்திருந்தேன்..ஆனால் அரசு தரப்பு முனைப்பை பார்க்கும் போது இது அரசியல் விளையாட்டு என்பது தெரிகிறது..இனி இஸ்லாமியர்களை திருப்தி படுத்தினாலும் விஷயம் எப்படி போகும் என்பதை சொல்ல முடியாது...எனது வலிகளையும் மீறி கமல் ஹாசன் மீது அனுதாபப்படுகிறேன்.. !
இங்கு கமல் அனுதாபிகளுக்கு சொல்லி கொள்வது இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை வெற்றுக்கூசலாக போய்விடாமல் அதற்க்கு வடிவம் கொடுத்தது யார் என்பது தெரிந்த விட்டது..உங்களால் முடிந்தால் உங்களின் கருத்துரிமை பலானது பலானதை அவர்களுக்கு எதிராக செய்ய முடியுமா என பாருங்களேன்..! :-))
** உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும். **
பதிலளிநீக்குசூப்பர் பாயிண்ட் .....
கமலின் மற்ற படங்களை அமெரிக்கர்களிடம் காட்டாமல் இந்த படத்தை மட்டும் காட்டுவது ஏன் ?
ஆஸ்கர் கனவா ..??
கேடுகெட்ட இந்த வியாபாரிக்கு இதுவும் வேணும்
இன்னமும் வேணும் .......
ஆம்...சகோ.குருநாதன் அருமையாக கேள்வி கேட்டிருக்கிறார்..இவர் இதற்க்கு முன் உலக படம் என்று எடுத்த ஆளவந்தான் விருமாண்டி ,போன்ற படங்களை ஏன் அமெரிக்காவில் போட்டு காட்டவில்லை..இது ஆப்கன் சம்பந்தப்பட்ட படமும் தானே அப்ப ஆப்கானிஸ்தானில் போட்டு காட்டி இருக்கிறாரா..? யாருக்கு நன்றி விசுவாசமா இருக்கிறாரோ அவர்களுக்கு தானே போட்டு காட்ட முடியும்..!! அப்போதுதானே ரெண்டு எலும்பு துண்டை சேர்த்து கொடுப்பா என்பார்கள்..எலும்பு துண்டு கிடைத்ததா கமல் அவர்களே..??????
நீக்குthis is very bad article
பதிலளிநீக்குகுழப்பமாக இருக்கிறது உங்கள் கருத்து.
பதிலளிநீக்குநல்ல படம் எது அல்லாதது எது என்பதை எவர் வரையறுப்பது? குறைந்த செலவில் எடுத்திருந்தால் நல்ல படம். இல்லையேல் கெட்ட படம் என்று சொல்வதா?
மற்ற படங்களுக்கு போராடவில்லை. அதனால், இதற்கும் போராடக்கூடாது என்பது என்ன வாதம்? இந்த படத்தின் போராட்டத்தை பற்றி பேசும்போது, இதை மட்டும் பேசுவோமே.
தமிழ் சினிமா உயர்வதற்கும் இந்த போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஏன் ஆப்கான் தீவிரவாதியை காட்டுகிறீர்கள் என்கிறீர். ஏன் காட்டக்கூடாது? எதை காட்டவேண்டும் எதை காட்டக்கூடாது என்று சொல்வதற்கு நாம் யார்? அது பணம் போடுபவரின் கவலை.
கமல் என்கிற உச்ச நட்சத்திரத்திற்காக தான் இந்த கூச்சல்கள்.
நீக்குஉண்மையில் இங்கு கருத்துரிமை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.
வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.
"ஜெய் ராம்" என்று சொல்லி தான்பாப்ரி மசூதி இடிக்கப்பட்டது. அதனை எந்த படத்திலாவது வைக்க தைரியம் இருக்கா? ஒரு சமூகத்தின் தீவிரவாதமே இங்கு காட்சிபடுத்தப்படுவதே இன்னொரு சமூகத்தின் தீவிரவாதத்தை மறைக்கவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அல்லாஹு அக்பர் என்று சொல்லும் தீவிரவாதத்தை இங்கு படமாக்க முடியும் ஆனால் ஜெய் ராம் என்று சொல்லி வளர்க்கப்படும் தீவிரவாதத்தை படமாக்கவோ ஒரு காட்சியையாவது வைக்கவோ கருத்து சுதந்திரம் இங்கு இருக்கிறதா?
பதிலளிநீக்குகருத்துரிமை இருக்கிறது என்பதற்க்காக, சமூக பொறுப்பின்மையும் பாரபட்சமும் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டுமா??
முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதில் ஊடகங்களும் சினிமாக்களும் துணை போகின்றன. இந்த கொந்தளிப்பின் விஸ்வரூபம் தான் விஸ்வரரூப படப்பிரச்சினையும். அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக இந்துக்களும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவதில்லை. அண்ணன் இந்துவாக இருக்க தம்பி முஸ்லிமானார், மாமன் இந்து வாக இருக்க மச்சான் முஸ்லிமானார். மதம் மாறினாலும் ரத்த பந்தமும் சொந்தமும் இன்னும் இந்துக்களிடமும் முஸ்லிம்களிடமும் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது. இந்த பந்த பாசத்தை உடைத்தால் யார் லாபம் அடைவார்கள் என்று ஆராய்ந்தாலே, முஸ்லிம்களை தனிமைப் படுத்த யார் விரும்பி செயல்படுகிறார்கள் என்பதை அறியலாம்
super......
நீக்குவீருமான்டி அமேரிக்காவில் பீரிமியர் ஷோ திரையிடப்பட்டது
பதிலளிநீக்குஉதயம் அவர்களே:
பதிலளிநீக்குஉங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். ”ஹே ராம்” திரைப்படத்தில் இந்து தீவிரவாதத்தை தெளிவாகவே கமல் காட்டினாரே. அதுவும் இந்து தீவிரவாதிகள் கூடிப்பேசும் அறையில், நாசிகளில் இலச்சினையான” சுவஸ்திகா“ வுடன் கம்பீரமாக இட்லரின் படமும் காண்பிக்கப்பட்டதே. அந்தப்படத்தில் காட்சிகள் மெதுவாக நகர்ந்ததாலும், தேவையற்ற குரூர வன்முறை காட்சிகளும் இருந்ததனால் என்னால் அந்தப்படத்தை ரசிக்க முடியவில்லை.
அமெரிக்காவில் பால்டிமோர் நகரிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு திரையரங்கில் “விசுவரூபம்” திரைப்படம் பார்த்தேன். முதலிலும், முடிவிலும் சிறப்பாக இருப்பினும் இடையில் பெரிதும் தொய்வு. இசுலாமியர்களுக்கு எதிராக இதில் எதுவும் இல்லை என்றே உணர்ந்தேன். இந்திய உளவுத்துறையில் அதிகாரியாக நடிக்கும் கமல், ஒரு சமய நம்பிக்கையுள்ள இசுலாமியராகவே இறுதிக்காட்சிவரை இருக்கிறார்.
தனக்குக்கீழ் பணிபுரியும் ஒரு உளவுத்துறைக்காரர் (இந்து) செய்யவேண்டிய ஒன்றை செய்ய இயலாமல் போனதால், இசுலாம் தீவரவாத அணியில் இருக்கும் ஒருவர் கொல்லப்படுகிறார். அதற்காக மிகவும் வருந்தி அவரை கமல் கண்டிப்பதாகவே காட்சி அமைந்திருக்கிறது.
பகுத்தறிவுவாதியான ஒரு கலைஞன் என்றே கமலை பார்க்கிறேன். தசாவதாரம் படத்தில் கூட அமெரிக்காவை திட்டும் காட்சிகளும், இசுலாம் சமயத்தினை தூக்கி பிடிக்கும் காட்சிகளும் இருக்கின்றனவே.
எந்த சமயமானாலும் தீவிரவாதம் ஆக்கபூர்வமான பயனை தந்ததாக வரலாறு இல்லை. அதனை திரைப்படமாக தருவதில் தவறும் இல்லை.
- அரசு
http://quizderek.blogspot.com/2012/08/the-obriens-of-india-and-pakistan_13.html
பதிலளிநீக்குSTUPID ARTICLE DAMEIT
பதிலளிநீக்கு