ஆரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 நவம்பர், 2014

பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கருங்குளம் கோவிலில் சிறப்பு பூஜை.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

news: http://www.tutyonline.net/view/31_80239/20141123184920.html




எனக்கு ஒரு டவுட்டு.
இந்த யாக பூஜை-ல அப்படி என்ன மந்திரம் சொல்லுவாங்க?
இதுக்குன்னு தனியா மந்திரம் இருக்குதா?
இல்லை ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்துள்ள வழக்கமான சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்களா??
அறிந்தவர்கள் தெளிவுப்படுத்தலாம்.

எது எப்படியோ, பார்ப்பான் காட்டுல நல்ல மழை!!

இந்த மந்திரம் மண்ணாங்கட்டியெல்லாம் பொய் என்று நாம் சொன்னால் பார்ப்பானுக்குத்தான் முதலில் கோபம் வரவேண்டும்.
ஆனால் பார்ப்பான் அல்லாதவர்களுக்குத்தான் அதிக கோபம் வரும்.

"பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்" என நாம் கண்டிஷன் போட்டால் யாகம் செய்யுற தொழிலை(?) பார்ப்பான் விட்டுவிடுவான். :)

வியாழன், 18 செப்டம்பர், 2014

காவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை


வகுப்பறை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்.
அப்பேர்பட்ட வகுப்பறையும், கல்வியும் இன்று எப்படி உள்ளன?

தனியார்களின் வசம் சிக்கி சீரழிந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்புக்கே  லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுக்கும் அவல  நிலையில் வந்து நிற்கிறது.
மேற்படிப்பு படிக்க பணம் இல்லாமையால் மாணவிகள் தற்கொலை செய்த அவலம்  இதே தமிழ் மண்ணில் அரங்கேறியுள்ளது.
இருக்கிற அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் கழிப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதனை அறிவாகப் பார்த்து, தனியாரிடம் பணத்தை வாரி இறைக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கல்வித்துறையில் பல அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதனை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர்  கல்வித்துறையில் செய்த சில புரட்சிகளைப் (?) பார்ப்போம்.

  • பள்ளிகளில் செத்தமொழி(சமஸ்கிருத) வார கொண்டாட்டம். 
  • குரு உத்சவ் என்னும் பெயரில் ஆசிரியர் தினம் 
  • ஆசிரியர் தினத்தில் மாணவர் முன்னர் தோன்றி, விளம்பரம் தேடிக் கொள்ளுதல்
  • தற்போது, இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிக்கை

இதுபோக 'இந்தியைத் திணிக்க வேண்டும்' என காவிக்குரல் கடுமையாக எழுகிறது.
குருகுலக் கல்விமுறையை கொண்டு வரவேண்டும் என ஒரு நீதிபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன அவலமும் உள்ளது.

எப்படியாவது கொல்லைப்புற வழியாக இந்தி, சமஸ்கிருதம் என ஆரியப் பண்பாட்டை புகுத்த துடிக்கிறார்கள் காவிகள். 


மேலும் வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல்,  இந்தியா வரலாற்று ஆய்வு குழுவில் பார்ப்பன ஆதிக்கம் என பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது பாஜக அரசு.

கல்வியை சேவையாக வழங்குவது குறித்து சிந்திக்காமல்,
அறிவியல் ரீதியில் மாணவர்களைப் பலப்படுத்தும்
செயலை முன்னிறுத்தாமல்,
'ஹிந்தி, ஹிந்து, ஹிந்தியா' என தனது பிற்போக்கு இந்துத்வ அரசியலை மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு.


பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கையை மாநில அரசு உடனே முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் காவிகளின் கையில் சிக்கி கல்வித்துறை நாசமாகும்.

வியாழன், 16 ஜனவரி, 2014

இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!

தமிழகத்தில் உள்ள 49 ஆயிரம் இந்து ஆலயங்களையும் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நடத்தும் டிரஸ்ட்டின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்.
- பொறுக்கி சுப்ரமணியசாமி



தமிழர்களின் சொத்துக்களை அவாள்  பெயரில் மாற்றி எழுதி ஆட்டைய போடப் போகிறோம் என்று வெளிப்படையா சொல்லுறான் சு.சாமி.
பார்ப்பனிய அடிமைகள் அனைவரும்  இந்த கருத்தை வழிமொழிவார்கள்.

'தயானந்த சரஸ்வதி சுவாமி யாரு?
அவர் பெயரில் ஏன் ட்ரஸ்ட்?
அதை நிர்வகிப்பது யாரு?' என்று எந்த இந்துவாவது கேள்வி கேட்பானா??
கண்டிப்பா மாட்டான். இவன்தான் அடிமையா இருந்து பழகிட்டானே!!

பார்ப்பனர் அல்லாதவர்களை அந்த 49 ஆயிரம்  ஆலயங்களில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று எந்த இந்துவாவது சொல்வானா??
[ வீரமணி காரில் கல்லை தூக்கி ஏறிய பார்ப்பான் ஆணையிட்டால் அதை நல்லா செய்வான். அதையும் ஒளிந்து கிடந்தது செய்வான் ]

தான் அடிமையாக்கப் படுகிறோம் என்று கூட  தெரியாமல் இருக்கிறார்களே!!
இந்த லட்சணத்துல 'இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!' என்று நமக்கு அறிவுரை கொடுப்பார்கள் அடிமைகள்.

எவனோ உழைக்க, எவனோ அனுபவிக்கிறான்..

ஒரு பார்ப்பானாவது கோவில் உண்டியலில் காசு போடுறானா?? நிலத்தை எழுதி வைக்குறானா??
நீங்க எதுக்குல அங்கே போயி கொட்டுறீங்க?

அந்த லிஸ்டுல கண்டிப்பா திருச்செந்தூர் முருகன் கோவில் இருக்குமென நம்புகிறேன்.  :(
முருகனுக்கு அரோகரா!!