புதன், 30 ஜனவரி, 2013

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப்படை

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாவீரர் நாள் கொண்டாடியதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் மட்டும்  விடுதலை செய்யப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டவர்களும் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி நேற்று காலை 11 மணியளவில் இலங்கை துணை தூதரக முற்றுகை போராட்டம் லோயலா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமானது. இதனையொட்டி அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தினை தோழர் தியாகு அவர்கள் தொடக்கி வைத்தார். பின்னர் கோசங்கள் எழுப்ப அதனுடன் சேர்ந்து இளைஞர்களும் கோசமிட்டனர்.இந்த போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் , அமைப்புகள் கலந்து கொண்டன . தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் , தந்தை பெரியார் திராவிடக் கழகம், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் , மே 17 இயக்கம் , தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பல மாணவர் இயக்கங்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 100 பேரை காவல் துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது .

நன்றி: newsalai.com

வாருங்கள். 

கட்சி, சாதி, எல்லைகள் கடந்து தமிழராய் ஒன்றாவோம். நாம் பெரும் திரளாய் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் சர்வதேச அரங்கில் நடக்கும் நாடகங்களை உடைத்து தமிழீழ விடுதலையை உறுதி செய்யட்டும். 2009இல் நாம் செய்யத் தவறிய பொறுப்புகளை தற்போது செய்து முடிக்க ஆயிரமாய் அல்ல, லட்சங்களாய் அவரவர் இயக்க, கட்சி அடையாளங்களோடு தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.
நாம் வெல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக