புதன், 23 ஜனவரி, 2013

முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"

போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.

உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள  வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.

சில உதாரணங்கள் 
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே  சென்றிருந்தார்கள்?

மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்கள்  இத்தனை நாள் எங்கே  சென்றிருந்தார்?

ராஜீவ் கொலை வழக்கில் மூன்று நிருபராதிகளின்  விடுதலைக்காக ஏன் இத்தனை நாள் போராடவில்லை?

இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை. தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள். ஒரு மூலையில்  கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)

இப்போது விசயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள்  இத்தனை  நாள் எங்கே சென்றிருந்தார்கள்? இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.

அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.
பாமக, மதிமுக கட்சிகள் மது ஒழிப்பை தீவிரமாக ஆரமிக்கும் முன்னரே தமுமுக, போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழகமெங்கும் தீவிர மது ஒழிப்பு பிரச்சாரங்கள், மாநாடுகள் நடத்தினார்கள். வழக்கம் போல அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.


கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழக காவல்துறை நடத்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், அணுஉலை எதிர்ப்பாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரியும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் - ஆபத்தான ஆறு அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான 40 இயக்கங்கள் அக்டோபர் 29ல் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
சட்டமன்ற முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியான உடன் வழக்கம்போல மமகவினர் களத்தில் மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். வீதியெங்கும் மமகவினர் மக்கள் உரிமையில் வெளியான அணுஉலை குறித்த செய்தியினை மறுபிரசுரம் செய்து பொதுமக் களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினர்.  மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டக் களத்தில் குவிந்தனர்.காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.  காவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க  கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட்டது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை செய்யப்பட்டன.நவம்பர் 7 அன்று ஆதிக்க சக்திகளால் தர்மபுரி அருகே நத்தம் உள்ளிட்ட 3 கிராமங்களில் வாழும் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்


தமிழக  மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ராஜபக்சே வருகையை கண்டித்து,  இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன

விலைவாசி உயர்வு, ரயில்வே கட்டண உயர்வை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராடுகிறார்கள்.


இரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள், கல்வி உதவிகள் என பல சமூக நலத்திட்டங்களை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு தமிழக களத்தில் மக்களுக்காக  மும்முரமாக போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளை பார்த்து 'இத்தனை  நாள் எங்கே சென்றிருந்தார்கள்?' என்று கேட்டால் நியாயமா?

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள்  எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான  தவறான கருத்துக்களைத்தான்.

வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான். 

தனது படங்களில் திரும்ப  திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.

நன்றி: http://www.tmmk.in/

46 கருத்துகள்:

 1. இந்தியாவில் மட்டும் தான் ரிலீஸ் இல்லை. உலகம் முழுக்க நாளைக்கு ரிலீஸ்.
  தமிழனுக்கு திருட்டு dvd ல் விஸ்வரூபம் பார்க்க வேண்டும் என்ற தலைவிதி என்ன செய்வது.
  நான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.
  வந்து கதை சொல்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பின்னூட்டம் நான் போட்டது
   சொர்ணாக்கா

   நீக்கு
 2. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.

  வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.

  தனது படங்களில் திரும்ப திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.//

  சரியான நேரத்தில் சரியான காரணத்தை மக்களுக்கு நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரரே...

  இந்த போராட்டம் குறித்து என்னுடைய பதிவு.
  விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?

  படிக்க : http://sunmarkam.blogspot.com/2013/01/blog-post_24.html

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 3. சகோதரரே !

  உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்..!

  *****

  விஸ்வரூபம் தடையும் சில மக்களின் உணர்வுகளும் :

  இந்நேரத்தில் சில மக்களின் மன உணர்வுகளை இங்கு பார்ப்போம்..விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததற்கு மூன்று தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வரும்..

  ஒன்று இஸ்லாமோபோபியா பிடித்தவர்கள்..நேற்று வரை படமே ஓடாது நீங்கள் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள்..என்று எகத்தாளமிட்ட கூட்டம் இன்று ஆதரவாம்..காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு மட்டும் தான் ..அதனால் இவர்களை பற்றி பேச தேவை இல்லை..

  இரண்டாவது ஒரு கூட்டம் நடுநிலை பேசிக்கொண்டு உண்டு..அவர்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் கமலுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கண்டு அவர்மேல் பரிதாபம் கொண்ட கூட்டம்..இவர்கள் பற்றியும் பேச தேவை இல்லை..!

  மூன்றாவது கமல் ரசிகர்கள்..ஆம் இவர்களுக்காக தான் முஸ்லிம்களின் விளக்கம் அமையவேண்டும்..இங்கு இவர்கள் இஸ்லாமியர்கள் மேல் தவறான எண்ணம் கொள்ள வைப்பு உள்ளது ..ஏனெனில் பல பிரச்சனைகளை கடந்து ஒரு வழியாக திரைக்கு வர தயாரான நேரத்தில் இப்படி நடந்திருப்பது அவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்..ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு..இதற்க்கு முந்தைய ஹே ராம்,உன்னை போல் ஒருவன் படங்களில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியது அவர் அறியாததா..? சினிமா என்பது இன்னைக்கு திட்டம் போட்டு நாளைக்கு முடிப்பது அல்லவே..! பலநாள் திட்டம் போட்டு தான் எடுப்பது..கமலின் மனதில் எவ்வளவு நஞ்சு இருந்திருந்தால் இப்படி ஒரு கேவலமான கதையை கையாண்டிருப்பார்.(என்னென்ன தவறுகள் என்பதை பல தளங்களில் காண முடிகிறது.) ஏற்கனவே துப்பாக்கி எனும் படத்திற்கு எதிர்ப்பு வந்ததே அப்போதே சுதாரித்திருக்க வேண்டாமா..? எல்லாமே கமல் தவறுதான் !

  இங்கு முஸ்லிம்கள் மேல் காட்டம் கொள்வோர் கவனத்திற்கு ,இவ்வளவு நாள் கமல் படத்தை திரையிட்டு அதனால் லாபம் அடைந்தும் இருந்திருக்கலாம்.அப்படி பட்ட திரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..?எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா.? சாதாரண பணம் விசயத்திலேயே கமலின் பங்காளிகள் அவருக்கு வில்லன்களாக ஆன போது , எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை..எங்களின் உணர்வுகளை புண்படுத்த முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டுமா.?

  சினிமா எடுப்பவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் படம் எடுத்து சம்பாதித்து வாழ்ந்துட்டு போகட்டுமே..! யார் கேட்க போகிறார்.? ஆனால் அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்திய உள்ளங்கள் அமைதி அடையவே முடியாது..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..? //super

   நீக்கு
 4. காசாப் ஒரு முஸ்லிம்தானே

  பதிலளிநீக்கு
 5. நாகூர் மீரான்..
  \//இவ்வளவு நாள் கமல் படத்தை திரையிட்டு அதனால் லாபம் அடைந்தும் இருந்திருக்கலாம்.அப்படி பட்ட திரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..?எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா.?//

  வெரி வேலிட் பாயிண்ட்... கமல் படத்தை டி.டி.ஹெச் சில் வெளியிட முடியாமல் செய்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிரா போராடுங்களேன்பா??? நடுநிலை சிங்கங்களா.. போராடுங்க.. கமலுக்கு தடை விதித்தளா தியேட்டரில் படத்தை பார்க்க மாட்டோம் என்று அறிவியுங்கள் அறிவு ஜீவிகளா?? ஹி..ஹி..ஹி...

  பதிலளிநீக்கு
 6. அண்ணே பெயரில்லா..
  /நான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.
  வந்து கதை சொல்கின்றேன் //

  ஹி.ஹி..ஹி இப்படி சொன்னா நாங்க கோப படுவோமாக்கும்?? இன்னும் நீங்க எங்கள புரிஞ்சுக்கல அண்ணே... நாங்களும் படத்த பார்ப்போம்.. ரொம்ப கஷடபட்டு கதைலாம் சொல்ல வேணாம்... சிலெ பேர் அல்ரெடி பார்த்துட்டாங்கன்னும் சேதி அடிபடுது..ஹி..ஹி.ஹி... புரியுதா??? என்னத்த புரிய போகுது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ.சிராஜ் ,

   பாண்டிச்சேரியில் தடை இல்லையாம்....நமக்கும் கருத்து சொல்ல வசதியாக இருக்கும்..! படம் எங்கு ரிலீஸ் ஆனா என்ன ..இனியும் இது போன்ற சினிமாக்கள் வரவே கூடாது அதுவே நம் அவா.!! அதை இந்த சினிமா காரர்கள் புரிந்துகொண்டால் அதுவே போதும்..

   நீக்கு
  2. மலேஷியாவில் படம் ஒரு சோ முடிஞ்சிடுச்சு.. ரிசல்ட் எனக்கு வந்திடுச்சு.. நான் சொல்ல மாட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

   ஹா..ஹா..ஹா..

   இப்பையும் சொல்றேன் கமல எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் பிரச்சனைகளில் இருந்து சுமூகமாக மீண்டு வர வேண்டும் என்றே விரும்புகிறேன்...

   நீக்கு
 7. நீங்க நல்லா வருவீங்கடா நல்லா வருவி௩்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ.பெயரில்லா

   யாரையும் மரியாதை இல்லாமல் பேசக்கூடாது ...கமல் என்றாவது ஒருநாள் உணர்வார்..அதுவரை நாம் பொறுமையாக நம் கடமையை செய்ய வேண்டுமே ஒழிய தடித்த வார்த்தைகளால் கமலை பேசக்கூடாது. புரிந்ததா.?

   நீக்கு
  2. நாகூர் மீரான்..

   புல் பார்முல இருக்கீங்க போல...???

   நீக்கு
  3. //புல் பார்முல இருக்கீங்க போல...???//

   குருஜியே நீங்கதானே..!

   நீக்கு
 8. கமல் இல்ல உங்கள் முதுகள் பாருங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா சகோதரரே !
   என் முதுகை பார்த்துட்டேன்.
   எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

   நீக்கு
  2. ஹல்லோ ! அதிரடி சொர்ணாக்கா ! நீங்கதான் உங்க முதுக பார்க்கணும் ..முதுகெலும்பு இருக்கான்னு ...அனானியா வர்றீங்களே.. :-))

   நீக்கு
  3. நாகூர் மீரான் அந்த பின்னூட்டம் நான் போட்டது அல்ல.
   நான் போடுவது என்றால் எனது புனை பெயர் குறிப்பிட்டே போடுவேன் .

   சொர்ணாக்கா

   நீக்கு
 9. இனிமேல் திரைப் படங்களுக்குத் தணிக்கை குழுத் தேவையில்லை .மடாதிபதிகளும் மதத் தலைவர்களும் படத்தைப் பார்த்து அங்கீகாரம் செய்வது சரியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனையோ படங்கள் வெளியாகின்றன.
   விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் ஏன் இந்த நிலை?
   அதற்கு காரணம் கமலின் பழைய படங்கள்

   நீக்கு
  2. ஆமாம் ராம்கி...

   ரொம்ப சரியா சொன்னீங்க..
   அப்டியே டேம்999 அனுமதிக்கக்கோரி ஒரு பதிவு போடுங்க பார்ப்போம்.. எத்தனை பேரோட நடுநிலை முகமூடி கிழிஞ்சு தொங்குதுன்னு பார்ப்போம்.. வடை பஜ்ஜில பதிவு வருது.. அங்க வாங்க, வந்து கருத்து சொல்லுங்க.. 3 கேள்வி வட்சிருக்கேன் கருத்து சுதந்திரம் பேசும் வேடதாரிகளுக்கு..

   நீக்கு
  3. // அப்டியே டேம்999 அனுமதிக்கக்கோரி ஒரு பதிவு போடுங்க பார்ப்போம்.. //

   கமல் என்ற படைப்பாளிக்கு கருத்து சுதந்திரம் தேவை என்றால், டேம் 999 எடுத்த படைப்பாளிக்கும் தேவை தானே???

   அதை ஏனப்பா எதிர்த்தீர்கள்??? மாற்றி மாற்றி பேச கூச்சமா இருக்காதா சகோ?? கருத்து மோதலில் வெற்றி தோல்விய விடுங்க... மனசாட்சின்னு ஒன்னு இருக்குல????

   நீக்கு
 10. நீர்ப்பறவை படக்குழுவினர்களிடம் கமல் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு உழைக்கும் கடலோர அடித்தட்டு இந்து, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்களின் நல்லிணக்கத்தை மிக அழகாக சொல்லியிருப்பார்கள் அது போன்ற பாடங்கள் தேவையும் கூட

  பதிலளிநீக்கு
 11. விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது


  கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

  கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.

  பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

  இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

  விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

  இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

  Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/vishwaroopam-screening-suspended-168525.html

  பதிலளிநீக்கு
 12. புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை!

  Posted by: Mathi Published: Thursday, January 24, 2013, 17:26 [IST]

  புதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

  கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு.

  இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

  இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

  இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

  Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/puducherry-also-bans-vishwaroopam-168529.html

  பதிலளிநீக்கு
 13. ஆமா நாகூர் நான் அனானி நீங்க ஆல் இந்தியா பிகரா அந்த பிக்சர் உங்களதா பார்த்தாலே. தொ ரியுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது நான் கொயந்தையா இருக்கும் பொது எடுத்த போட்டோ ! அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க ! ஆனா பெயர் என்னுடையது தான்.. :-))

   நீக்கு
 14. @ நாகூர் மீரான் ...
  நீங்க அனானிக்கு " கௌண்டெர் " கொடுப்பது சூப்பர் ....
  ** அது நான் கொயந்தையா இருக்கும் பொது எடுத்த போட்டோ ! அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க ! ஆனா பெயர் என்னுடையது தான்.. :-)) **
  த .ம ஓட்டு ஓக்கே ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது வேற ஒன்னும் இல்ல நாசர் ...இன்னைக்கு ரொம்ப வெட்டியா இருந்தேன் ...அதான் அனானிக்குணா கவுண்டர் கொடுத்துகிட்டு இருந்தேன்.. :-))

   நீக்கு
  2. விஸ்வரூபம் திரை படத்தை தடை செய்தது மிக மிக சரி , ஒரு திரை படம் வெளிவந்து நாட்டின் சமூக நல்லிணக்கம் பதிக்க பட்டு அமைதி கெட்டு மக்கள் வாழ வேண்டிய சூழல் உருவாக்கு மேயானால் கமலை போன்ற கலை கூத்தாடிகளின் பதிப்பாய் எல்லாம் மனதில் எண்ணாமல் நாட்டின் அமைதியை நிலை நாட்ட தடை விதிபதி மிக சரியாகும். இதை தான் இன்று டேம் 999 படத்திற்கு உச்ச நீதி மன்றம் தீர்ப்பாக கொடுத்துள்ளது.

   முதலில் ஒன்றை நாம் தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும் , இந்தியா நாட்டில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் . அவர்களை தவறுதலாக சித்தரிப்பது சமீபகாலமாக அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களின் புனிதமாக நினைப்பவற்றை கேவல படுத்தினால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும் கமல் தனக்கு எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்க உரிமை உண்டு என்றால் எடுத்து அவர மட்டும் பார்த்து கொல்லட்டும்.

   இந்தியை பொறுத்தவரை இந்து முஸ்லீம் என்ற ஒரு விஷயம் மிக மிக சென்சிடிவான விஷயம் .ஏற்கனவே நிறைய மத கலவரங்களால் எண்ணற்ற மனித உய்ரிகளை காவு கொண்ட விசயம் , இதை தெரிந்து கொண்டே மீண்டும் அந்த விஷயம் பூதாகரம் ஆக கூடாது என்பதுதான் அனைத்து இந்திய மக்களின் எண்ணமும் , அதுதான் நல்லிணக்கம்.

   இவை அனைத்தும் தெரிந்து கொண்டே பெரிய மேதாவி என்று தன்னை எண்ணி கொண்டிருக்கும் கமல் ஹாசன் இதை கையாண்டிருப்தே மக தவறு. வேறு கதைக்கலாமே இந்தியாவில் அவருக்கு இல்லையா?

   சினிமா என்பது ஒரு வலிமையான மீடியா எளிதில் பாமர மக்களை சென்றடையும் வலிமை அதனிடம் உண்டு . சினிமாவை சினிமாவ பாருங்கள் என்று மேதாவிகளின் கூக்குரல் இடுகிறார்கள் , பாமர மக்கள் சினிமாவை உண்மை என்றே நம்ம்பு கிறார்கள் , ஆதலான் தான் எம்ஜியார் போன்றோர் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளனர் . ஒரு பொய்யான விஷயத்தை தொடர்ச்சியாக் ஒவ்வொரு படத்திலும் விதைக்கும் பொது எதிர் வரும் சந்ததி இனருக்கும் அந்த விஷயம் உண்மை என்றே பழகி விடும்.

   கமல் எதார்த்தமாக இந்த படத்தை எடுத்ததாக தெரியவில்லை வேண்டுமென்றே இஸ்லாமியரை கேவல படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தால் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில் முன் கூட்டியே இதை டிடிஎச் இல் விற்க பார்த்துள்ளார் அங்கயும் இவருக்கு அஷ்டமா சனி வேலையே காட்டி விட்டான் ஒன்னும் போணியாக வில்லை .

   யாரும் எல்லா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஒரு படம் ஓர் பெரும் சமூகத்தை பாதித்து அவர்கள் மனதை புண் படுத்து கிறது என்று உணரும் பொது எதிர்ப்பு வலு வடிகிறது. ரஜினி இன்றளவும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் அவர் இது வரை எந்த படத்திலாவது எதாவது ஒரு சமூகத்தை தாக்கி , கேவல படுத்தி நடிதிருகிறாரா?
   ஏன் அவர் படம் வெற்றி பெறவில்லையா ?அந்த அறிவு ஏன் கமல்லுகு இல்லை. அப்போ கமல் மனதில் விஷம் இருபது ஊர்ஜிதமாக தெரிகிறது.

   இந்த படம் வெளிவந்தால் இந்த படத்தை பார்க்கும் மற்ற சமூக நண்பர்கள் இந்த படத்தை முன்னுதாரணமாக வைத்து கொண்டு இஸ்லாமிய புனிதங்களை கிண்டல் செய்வார்கள் இதனால் கலவரங்கள் ஏற்படும் அமைதி நிச்சயம் கெடும். நல்லிணக்கம் பாதிக்க படும் .

   இவற்றை அனைத்தும் உணர்ந்த கமல் அவர்களுக்கு வேறு கதைக் களமே கிடைக்கவில்லையா..?

   இஸ்லாமிய புனித விஷயங்களை கேவலமாக சித்தரித்து தான் நீங்கள் படம் எடுத்தது சம்பாரிக்க வேண்டுமா?

   சீக்கியர்களை பற்றி கேவலாமக் படம் எடுத்து பஞ்சாப்பில் வெளியிட உங்களுக்கு தைரியம் இருக்கா ?

   சிவா லிங்கம் , ஐயப்பன் உருவான கதைகள் புராணத்தில் உள்ளன அந்த கேவலங்களை படமாக எடுத்து வெளியிட கமல் சார் ஏன் முன் வரவில்லை.?

   குஜாரத் கலவரத்தில் மோடியின் பங்கை படமாக எடுக்க தைரியம் இருக்கா?

   ========================


   இதுக்கு மட்டும் போராடும் முஸ்லீம்கள் நாட்டில் எவலோவோ பிரச்னை இருக்கு அதேக்கேல்ம் போராடாமல் எங்கே சென்றார்கள் என்று புதிளிசாலி தன்மான கேள்வி கேட்டுவிட்டு எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொளாத அறிவு ஜீவிகளே

   முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்? என்று கூகுளில் தேடவும் அவர்கள் நாட்டின் மற்ற பிரச்னைகளுக்கு வீடில் இறங்கி போராடும் செய்திகள் ஆதாரத்துடன் உள்ளன

   நீக்கு
  3. "சிவா லிங்கம் , ஐயப்பன் உருவான கதைகள் புராணத்தில் உள்ளன அந்த கேவலங்களை படமாக எடுத்து வெளியிட கமல் சார் ஏன் முன் வரவில்லை.?"
   6 வயசு சிறுமியை புணர்ந்த கதையும் இருக்கு. அதையும் படம் ஆக்கலாம்.

   சொர்ணாக்கா

   நீக்கு
 15. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

  சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
  பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 16. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

  சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
  பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 17. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

  சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
  பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 18. இஸ்லாமை சாடிய வசனங்கள் இருந்திருந்தால் அந்த பகுதியை நீக்க/ திருத்த கோரலாம்.
  படத்தை முழுமையாக தடை செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்?

  இந்த கேள்விக்கு குருநாதன மட்டுமே பதில் கேட்கிறேன்.
  வகாபிகளின் பதில் எனக்கு தேவையில்லை.
  அவர்கள் என்ன சொல்வார்கள் என்பது எனக்கு தெரியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கேள்வி.
   படத்தை முழுமையாக தடை செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம் இல்லை.
   அது அவர்களின் விருப்பமும் கிடையாது.
   படத்தில் இஸ்லாமியர்களை சாடாமல் இருந்தால் ஏழைகளுக்கு பிரியாணி தருவதாக இந்திய தேசிய லீக் அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
   சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அவர்கள் குறுக்கே நிற்கமாட்டார்கள்.
   படம் முழுவதும் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கேள்விபட்டேன்.

   நீக்கு
  2. இல்லை நண்பரே,
   முழுவதும் இல்லை. ஒரு சில வசனங்கள். சில காட்சிகள். இவை சில நிமிடங்கள் மட்டுமே வரும்.
   படம் பார்த்து விட்டேன் US ல்
   அதை வெட்டினால் ஒரு பிரச்சினையும் இல்லை.

   மயூரன்

   நீக்கு
 19. பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

  முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

  இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

  சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

  இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

  பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

  இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

  பதிலளிநீக்கு
 20. ஒரு இஸ்லாமிய நண்பர் எழுதிய விமர்சனம்

  படம் பார்த்துவிட்டேன் நான் .
  நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னைத் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .

  துப்பாக்கி படத்தைப் பார்த்துவிட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .

  கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கத்தில் பெண் சாயல் கொண்டவர் ..

  .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனை துப்பறிய அனுப்புகிறார்மனைவி . அந்த துப்பறிவு நிபுணர் கமலை பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.

  ஒருமுறை துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுற்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரியைப் படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் கமல் மனைவியின் முதலாளி பெயர் என அதில் இருக்கிறது..மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்திச் சென்று கொடுமை படுத்துகின்றனர் .

  அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியைக் காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கைதாவில் பயிற்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .

  கதை- இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிற்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவுப் படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .

  இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .

  கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும் மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .

  அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணைக் கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதைச் சரியாக சொல்வார் .

  இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

  அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது. தன் பணியின் பொருட்டே கமல் அவரைக் கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அதையும் தவறாகச் சொல்லமுடியாது .

  கடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு விட்டோம் .

  நான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையைப் பேசாமல் இருக்கமுடியாது

  எழுதியவர்: @Farouk Mohamedohamed

  நான் டேவிட்

  பதிலளிநீக்கு
 21. ivalo pesaregale kamal muslim pathe matham pathe thapa solararu nu ithuvaraikum setha terriost la most of people muslim thana entha kuran makala kola soluthu nabikal sona karutha ketu iruntha avan thapu panuvana thapu panaravanu ku tha kamal sutti ktu kirar ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, intha flim kaka nega tha peruma padanum,,,,,,,,,, inimel entha muslim thapu pana matan,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ayooo yar ivan ipadi solaran ivan hindu than think panathega after 60 70 years la we r gone ,,,,,,,,,,,,,,,,,,,, nama future la nama childrens entha problem ilama valatume ,,,,,,,,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
 22. குருநாதனின் அரவேக்கட்டுதனமான அறிவு மற்றும் புரிதல் மத வெறியை விட கொடூரமானது.

  பதிலளிநீக்கு