செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

அரைவேக்காடு சு.சாமியும் மற்றும் சில இந்தியர்களும்


நேற்று NDTV-யில் தேசியத்தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்திய கம்யுனிஸ்ட் தோழர் டி.ராஜா, சானல்4 கல்லெம் மக்ரே,  ராஜபக்சேவின் நண்பன் சு.சாமி  மற்றும் சில இந்தியர்கள் பங்கேற்றிருந்தனர்.

சு.சாமி பற்றி சொல்லவே தேவையில்லை. ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என ஊளையிட்டவர். நேற்றும் அப்படித்தான் பேசினார். "போருக்கு பின்னர் இலங்கையில் மாபெரும் அமைதி நிலவுகிறது" என்றார்.

எது அமைதி?
முள்வேலிக்குள் ராணுவ பாதுகாப்புக்குள் சித்ரவதை அனுபவிப்பதுதான் அமைதியா?
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனரே? அது அமைதியா?
கச்சத்தீவு பக்கம் போனாலே நம்ம மீனவர்களுக்கு அடி விழுதே! அது அமைதியா?
ராணுவத்தில் தமிழ் யுவதிகளை கட்டாயப்படுத்தி சேர்த்து சித்தரவதை செய்கிறார்களே? அது அமைதியா?
 தமிழர்களுக்கு எந்த சுய உரிமையும் கிடையாது என ராஜபக்சே கொக்கரிக்கிறானே? அது அமைதியா?

விவாதத்தில் இடம்பெற்ற பல இந்தியர்களும்  "புலிகள் தீவிரவாதிகள்" என்றார்கள். புலிகள் ஆயுதம் எடுப்பதற்கு முன்னரே இனப்படுகொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சூலைக்கலவரம் மாபெரும் சாட்சி. இது பல தமிழர்களுக்கு தெரியாதநிலையில், இந்தியன் எப்படி புரிந்து கொள்வான்?
.குட்டக்குட்ட குனிந்து கொண்டே தமிழர்கள்  இருக்க வேண்டும் என்கிறார்கள் இந்தியர்கள்.
"புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உண்மையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome) "- மாவீரன் முத்துக்குமாரின் மரண சாசனம்.

"செயவர்த்தனே உண்மையான பௌத்தவாதியாக இருந்திருந்தால் நாங்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆயுதப்போராட்டமாக இருந்தாலும் எங்களது லட்சியம் அரசியல்ரீதியான விடுதலையே!!" -தேசியத்தலைவர் பிரபாகரன்.

இலங்கை மக்களை புலிகள் தாக்கினார்கள் என்கிறார்கள் சில அரைவேக்காடுகள்.
ஈழம் விசயத்தில் சில போராளி குழுக்களை இந்திய உளவுப்பிரிவு தங்கள் வசப்படுத்திக்கொண்டு  குழப்பம் விளைவித்தது, இலங்கையின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, தமிழ் தலைவர்களை கொன்றது மற்றும் பல மக்கள் விரோதச் செயல்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. ஆனால் பழி மட்டும் புலிகள் சுமக்க வேண்டும்! என்ன கொடுமை!

"முதலில் நாம் இந்தியர்கள், அப்புறம்தான் தமிழர்கள். இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்" என்கிறார் சு.சாமி. இந்தியாவை இந்து நாடாக்க துடிக்கும் மதவெறியன் சு.சாமி. இந்தியா என்ன செய்தாலும் தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் தமிழர்களுக்கு இல்லை. இனப்படுகொலையை நடத்தியதே இந்தியாதான் என்பது பல தமிழர்களுக்கு தெரியும்.
  விவாதத்தில் இடம்பெற்ற பலரும் திரும்ப திரும்ப 'இலங்கையில் நடைபெற்றது போர், மனித உரிமை மீறல்' என்று சாதாரணமாக முடித்துக் கொண்டார்கள். நம்மூரு டெசோ மாநாட்டிலும் இப்படித்தான் பேசினார்கள்.

இலங்கையில் நடைபெற்றது வெறுமென மனித உரிமை மீறல் மட்டும் அல்ல, மாபெரும்  இனப்படுகொலை. அப்படி சொல்ல யாரும் முன்வரவில்லை. அதுசரி காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இந்தியாவின் டவுசர் கிழியுமே!! அந்த பயமாக இருக்கலாம்.

வைகோ, திருமாவளவன், வேல்முருகன் மற்றும் பல தலைவர்களும் இலங்கையுடன் உள்ள உறவை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். இலங்கையுடன்  இந்தியாவுக்கு உள்ளது நல்லுறவு என்றால் உடனே முறித்துவிடலாம். ஆனால் இருப்பதோ கள்ள உறவு. கள்ள உறவில் சுகம் காண்கிறது இந்தியா.

"இந்தியாவின் போர் நியாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?"- என்று மாவீரன் முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

இலங்கையும்  இந்தியாவும் இணைந்துதான் இனப்படுகொலையை நடத்தியது. அதை தடுத்து நிறுத்த ஐ.நா தவறியது. அதனால் இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்காது.
"நாம் இலங்கையை எதிர்த்தால் சீனாக்காரன் அங்கு கால்பதித்து விடுவான். அதனால் இலங்கையோடு அனுசரித்து போக வேண்டும்"- இந்திய பிரதமர். சிங்களன் என்ன கொடுமை செய்தாலும் தமிழர்கள் கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்கிறது இந்தியம்.இலங்கையின் கோரமுகத்தை திரும்ப திரும்ப கிழிப்பதில் பயன் இல்லை.
இந்தியாவின் கோரமுகத்தையும், ஐ.நாவின் கோரமுகத்தையும் கிழித்தெறிய வேண்டும்.

10 கருத்துகள்:

 1. சுப்பிரமணிய சுவாமியை விடுங்கள் மத வெறி பிடித்த மிருகம் வாஞ்சூர் கக்கியுள்ள விஷ கருத்துகள் பற்றி என்ன சொல்கின்றீர்கள்???

  அங்கு நீங்களும் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரிடம் பேசி பயனில்லை.
   வரலாற்றை திரிக்கிறார்.
   சிங்களன் சொல்வதை அப்படியே இங்கு வந்து கொட்டுகிறார்.

   நீக்கு
  2. கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்களுக்கு இடையில் முறுகல் நிலை வர காரணம் இவர்கள் தான். அரசியல் காரணங்களுக்காக இவ்வாறன பிரச்சாரத்தை வெற்றி கரமாக செய்து வருகின்றனர். வாஞ்சூரும் அவர்களின் கைகூலிகளில ஒன்று

   குமுதினி

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. புலிகள் குறித்து என் நண்பர்கள் பலருக்கும் போதிய புரிதல் இல்லை.
   இந்தியா, சிங்களன் திரித்துவிடும் கதைகளை நம்புகிறார்கள்.
   அதற்காக என் நண்பர்களை ஒதுக்க முடியாது.
   சொல்லி புரிய வைப்போம்.

   நீக்கு
  3. எனது பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். உங்களுடைய பின்னோட்டத்தை நீக்கி விடுங்கள்

   நீக்கு
 3. கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்களுக்கு இடையில் முறுகல் நிலை வர காரணம் இவர்கள் தான். அரசியல் காரணங்களுக்காக இவ்வாறன பிரச்சாரத்தை வெற்றி கரமாக செய்து வருகின்றனர். வாஞ்சூரும் அவர்களின் கைகூலிகளில ஒன்று

  குமுதினி

  பதிலளிநீக்கு
 4. இதை படிக்கவும்

  http://viyaasan.blogspot.com/2013/02/27.html#comment-form

  கிழக்கு மாகாணத்தில் சிங்களவன் செய்த பாலியல் வன்கொடுமையை விட முஸ்லிம்கள் செய்தது பல மடங்கு அதிகம்.

  பதிலளிநீக்கு
 5. சத்தமான சமாதானத்தில் என்ன வின்னதிரும் வேங்கை வந்து விடுமோ தெரியவில்லை. பாட்டாளி சத்திரத்தில் பனம் நாக்கின் வேடுவக் கோடுகள் தெரிவதில்லை. வஜ்சிரா சூரிய விதை விழுந்த இடத்தை வேர் பகுதி பலா நிலத்தில் தேடுவதோ ? பக்கா சப்பாத்தி பாதி சாலட் என்றால் எப்படியாம்.

  பதிலளிநீக்கு