வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ராஜபக்சே வருகை - கொதித்தெழுந்த தமிழகம் [புகைப்படத் தொகுப்பு]

பல லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக மக்களின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து தொடர்ந்தும் ராஜபக்சேவை அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வாழ்வுரிமை கட்சி தோழர் வேல்முருகன் தலைமையில்ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். கைது செய்ய திணறிய காவல்துறை !
 

கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் ஆர்பாட்டம்

புதுவை ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல்
வடசென்னை கிழக்கு  தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில்  நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
  கோவையில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நடத்திய போராட்டம் 
மதுரையில்  ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு
 
மதுரையில் ஆதி தமிழர் பேரவையினர் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
 ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டு எரித்தனர் இடிந்தகரை மக்கள்


 
தமிழர் எழுச்சி இயக்கம் சார்பாக ராஜபக்சே திருப்பது வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்
  சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடியை அகற்றிய தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள்

உலகத் தமிழ் அமைப்பின் இளையோர் அணி ஒருங்கிணைத்த போராட்டத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அவர்கள் கல்லூரி வளாகத்தில் பதாதைகள் ஏந்தி ராஜபக்சேவிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்பாட்டம்

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்ற வைகோவின் தொண்டர் படை

டெசோ அமைப்பு சார்பாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கருப்பு உடையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் . இதில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஓசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டம்
கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம்

கோயம்புத்தூர் சந்திப்பில்  SDPI கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் 30 பேர் மறியல் 

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்சே உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மக்கள் விடுதலைக் கட்சியினர் 50 பேர் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னையில் சட்டசபை வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள்  போராட்டம்

இவ்வாறு தமிழகத்தின் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நியாயப்படி வாழ்த்து சொல்லக்கூடாது. ஏனெனில் இது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஆனாலும் இதற்காக நேரம் செலவிட்டு களத்திற்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்நேரத்தில் தமிழகத்தில் இல்லாமைக்கு வருத்தங்கள்.


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

"ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே புத்த பூமியில் கால் வைக்கக் கூடாது. "என்று முழங்கி தமிழர்களுக்கு ஆதரவளித்த பீகார் ஒபரா  தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங் அவர்களுக்கு நன்றி 

அப்புறம் இந்த தேமுதிகவும், அதிமுகவும் எங்கே போனாங்க?
அவங்க மக்களுக்காக குரல் கொடுக்க சட்டசபைக்கு போனாங்க.
சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடிதடி.
அதைக்கண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரசிப்பு!!

நன்றி: newsalai.com, tamil.oneindia.in

 

4 கருத்துகள்:

  1. தனித்தனி வளைகளாக இருந்தாலும் கூட ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்களை வரவேற்கிறேன்.    பதிலளிநீக்கு
  2. எல்லா கட்சியினரும் போராடியிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. குரு உண்மையிலே கலக்கிறிங்க .அருமை

    பதிலளிநீக்கு