ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

என்னாது? பெரியார் தீவிரவாதியா?

 'திராவிட பயங்கரவாதம்' என்னும் தலைப்பில் பெரியாரையும், திராவிடத்தையும் ஒரு பதிவர் சாடியிருந்தார். அவருடைய அந்த பதிவில் எனது பின்னூட்டம் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் இந்த தனிப்பதிவு. (அந்தப் பதிவர் மன்னிக்கவும்.)


அதுவும் ஒரு இஸ்லாமிய நண்பரிடமிருந்து அப்பதிவை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனால் அந்த நண்பரின் சுய சிந்தனையை வரவேற்கிறேன். ஆனால் சிந்தனை என்னும் பெயரில் தவறான கருத்துக்களை பரப்புவது சரியன்று. பெரியார் சொல்லாத ஒரு கருத்தை பெரியார் சொன்னதாக கூறுகிறது அந்த கருத்து. இம்மாதிரியான திரிப்பு வரவேற்கதக்கதல்ல.

பல மூட நம்பிக்கைகளை உட்கொண்ட, மக்களை சாதிரீதியாக பிளவுப்படுத்திய இந்து மதத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் மற்ற மதங்களை கடுமையாக  எதிர்க்கவில்லை. ஒரு கட்டத்தில் இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே வழி என்று சொன்னார். அதற்கு தாங்கள் அளிக்கும் மரியாதை பிரம்மாதம்.

சுயமரியாதை,  பகுத்தறிவு,  சாதி மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு,  சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை மற்றும் பல முற்போக்கு கருத்துக்களை தமிழ்ச்சமூகத்தில் விதைத்த தந்தை பெரியாரை எப்படி விமர்சிக்க முடிகிறது? அப்படி விமர்சித்து இந்த சமூகத்திற்கு தாங்கள் சொல்ல வரும் மாற்றுக் கருத்து என்ன? இல்லை வெறுமென பொழுதுபோக்குக்காக விமர்சிக்கிறார்களா?

திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்திற்கு என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. அதுவும்  தவறு. தமிழ்த் தேசியத்தின் முன்னோடியே  தந்தை பெரியார்தான் .
பெரியாரையும் அம்பேத்கரையும் ஓரம்கட்டி விட்டு சமூகத்தில் ஒரு புரட்சியையும் செய்ய முடியாது. புரட்சி செய்யாமல் தமிழ்த் தேசியம் அமைக்க முடியாது.

சாதி, மதங்களை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறது அந்த நண்பரின் பதிவு.
சாதிப்பெருமை, மதப்பெருமை பேசி இதுவரை கிழித்தது என்ன? இன்னும்  பேசி பேசி என்ன கிழிக்கப் போகிறீர்கள்?
 
"உன் சாத்திரத்தைவிட உன் முன்னோர்களைவிட உன் வெங்காயம் வெளக்கமாத்தவிட உன் அறிவு பெரிது, அதைச்சிந்தி" -தந்தை பெரியார்

குறிப்பு: நானும் சாதிப்பெருமை, மதப்பெருமை பேசியவன்தான். திருந்திவிட்டேன். மற்றவர்களும் திருந்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
 
நன்றி 

3 கருத்துகள்:

  1. மேற்கண்ட பின்னூட்டம் அளித்த 'சிந்திக்க உண்மைகள்' ஒரு மோசடி பதிவு, அதில் பெரியார் படத்தைப் போட்டு கிறிஸ்தவ மற்றும் இந்துக்களை மட்டும் கீழ்தரமாக எழுதப்பட்டு இருக்கும். தமிழ் மணத்தில் சிந்திக்க உண்மைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

    பெரியார் படத்தைப் போட்டு மதப்பிரச்சாரம் செய்யும் இந்தக் கூட்டம் தான் பெரியாரை தீவிரவாதி என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. பெரியார் தீவிரவாதியாக சித்தரித்தது கண்டிப்பாக ஒரு கூமுட்டையாகதான் இருக்கவேண்டும் நண்பரே!!!!!!!

    பதிலளிநீக்கு