வெள்ளி, 1 மார்ச், 2013

அழுகை மட்டுமே மிச்சம்.....


அது ஈழப்பிரச்சினை. நாம் தலையிடக்கூடாது என்கிறது மனிதாபிமானமற்ற ஒரு கூட்டம்.

எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்று 
அடுத்த செய்திக்கு நகர்கிறார்கள் நடுநிலைப் போலிகள் .

இலங்கை நட்பு நாடு என்கிறான் டெல்லியில் ஒருவன்.

அதை கேட்டவுடன் எம்.பி பதவிகளை
தூக்கியெறிய   சொல்லாமல்
டெல்லியில் மாநாடு நடத்த செல்கிறார் மூத்த தலைவர்.

தமிழர் பிரச்சினை என்றாலே
கண்ணையும், காதையும் மூடிக்கொள்கிறார்களே!
பின்னர் அங்கு ஏன் மாநாடு??

தீர்மானமும், இலங்கை வீரர்களுக்கு தடையும் போட்டு விட்டு நல்லபிள்ளையாக நகர்கிறார் முதல்வர். இதுதான் தீர்வா??

எல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம்
என்று ஒருவரியில் கூறிவிட்டு
தங்கள் உணர்வை காண்பிக்கிறது இன்னொரு கூட்டம்.

வரும் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவோம்
என்று ஓட்டு அரசியல் பேசும் கூட்டம்.

ராஜீவ்காந்தியை  கொன்றதுதான் எல்லாத்துக்கும் காரணம்
என்று வரலாறு தெரியாமல் பேசும் மற்றொரு கூட்டம்.

இந்தியாவும் குற்றவாளி என்று சொன்னால்
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
என்கிறார்கள் பாரத மாதாவின் செல்லப்பிள்ளைகள்(வேறு மாநிலத்தவர்)

அமெரிக்கத் தீர்மானத்துக்கு
இந்தியா ஆதரவு அளிக்குமா என்று
ஏங்கிக் கிடக்கும் நாதியற்ற தமிழர் கூட்டம்!

எத்தனை போராட்டம் நடத்தினாலும்
நம்மைக் கண்டுகொள்ள யாருமில்லையே!

இப்படி பல கூட்டத்திற்கு மத்தியில்
இந்த அடிமைக்கு அழுகை மட்டுமே மிச்சம்!!

மன்னித்துவிடு பாலச்சந்திரா!!


4 கருத்துகள்:

  1. ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது, ஈழப் பிரச்சினை பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் சாதாரணத் தமிழனுக்கு அக்கறையில்லை. அவன் ஈழத் தமிழனுக்காக்கஃ குரல் கொடுக்கமாட்டான். அரசியல்வாதிகள் தங்கள் சுய நலனுக்காக ஈழத் தமிழன் பிரச்சினை பற்றி அவ்வப்போது பேசுவார்கள்.

    மொத்தத்தில் ஈழத்தமிழனுக்கு நாதியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் சொல்லி விட முடியாது ஐயா!
      தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அதில் அரசியல் செய்யும் கூட்டத்தால் தமிழன் வஞ்சிக்கப்படுகிறான்.

      ஈழத்தமிழன் என்று இல்லை! உள்ளூர் தமிழன் பாதிக்கப்பட்டாலும் கேட்க ஆளில்லை.
      மொத்தத்தில் சுயநலத்தால் ஆட்கொள்ளப்பட்டு விட்டோம்

      நீக்கு
  2. அடிமை தமிழர் களின் உள்ள குமுறல்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றி!" டெல்லியில் இருப்பது தரகுமுதலாளிய பார்பனிய ஏகாதிபத்திய அரசு சென்னையில் இருப்பது டெல்லியின் அடிமை எடுபிடி அரசு" இதில் இருந்து விடுபடுவதே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உணர்ந்தது போல, நான் உணர்ந்தது போல அனைவரும் உணரும் காலம் வரும். அன்று விடிவு பிறக்கும்

      நீக்கு