செவ்வாய், 12 மார்ச், 2013

இந்தியா நடத்தும் இன அழிப்பு

எப்படியெல்லாம் ஒரு இனத்தை அழிக்கலாம்?
  • இனத்தின் மக்களை அழித்தல்
  • இனத்தின் மொழியை அழித்தல்
  • இனக் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு இவற்றை திரித்தல்/அழித்தல்
இதில் கடைசி இரண்டு முறைகளை அவ்வப்போது தமிழினம் மீது ஏவுகிறது இந்திய ஆதிக்கம்.

ஏற்கனவே இந்திய ஆதிக்கத்தால் தமிழினம் மீது நடத்தப்பட்டத்  தாக்குதல்கள்
  • தமிழர் வரலாறுகளை மத்தியப்  பாடத்திட்டங்களில் திரித்து எழுதுதல்
  • தமிழர் வரலாற்றைக்  கேலி செய்தல்
  • தமிழர் வீரவிளையாட்டைத் தடை செய்தல்
இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதத்   தடை

கடந்த சில வருடங்களாக தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது. இனி தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். பலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இதுவும் ஒருவகையில் மறைமுக இந்தி திணிப்பே! 
பிற மொழிகளில் எழுதத் தடை விதித்தவர்கள் ஏன் இந்திக்கும் தடை விதிக்கவில்லை? ஆங்கிலத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தலாமே? அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் உள்ளதே!
 
ஏற்கனவே தமிழகத்தில் பலரும் 'ஐயோ! நமக்கு இந்தி தெரியலையே!' என்று வருந்துவதுண்டு (ஒரு காலத்தில் நானும் வருந்தினேன்). இப்போது அந்த குரல் பலம் பெறும். இந்தி மிக அவசியம் என்னும் உணர்வு தமிழாகளிடம் ஏற்படும்.

ஏற்கனவே தமிழகத்தின் நகரங்களில் பல பள்ளிகளில் (வித்யாலயா) இந்தியைக் கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இது யார் செயல் என்பதும் பலர் அறிந்ததே!

பிற இனங்களின் மொழிகளைப் புறக்கணித்து, ஒடுக்க நினைக்கும் இந்திய ஆதிக்கத்தின் நரித்தனத்தை முறியடிப்போம்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இவ்விசயத்தில் தமிழகத்தின் பல கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசை எதிர்த்து நம் உரிமையை மீட்க வேண்டும்.


இந்திய ஒன்றியம்  என்பது பல இனங்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட கட்டமைப்பே.

என் இனத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு அனைத்தையும் மறைத்துவிட்டு எனக்கு 'இந்தியன்'னு பட்டம் கொடுப்பீங்க. அதை வாங்கிட்டு இளிச்சுட்டு போக நான் முட்டாள் இல்லை.

பின் குறிப்பு:
நான் எந்த மொழிக்கும் எதிரானவனில்லை.
எந்த மொழியையும் கற்பதில் தவறில்லை.
ஆனால் கட்டாய மொழித்திணிப்பு  மாபெரும் குற்றம்.

இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரை
தமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்

10 கருத்துகள்:

  1. ரொம்ப சரி.. சந்தேகமே இல்லாம மத்திய அரசு செய்யும் அயோக்கியத்தனம் இது..

    பதிலளிநீக்கு
  2. இந்த விடையங்கள் உண்மைதான் தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் இந்தி பேசுகின்றார்களே ஏன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் படங்களில் இந்தி தவிர்க்கப்பட வேண்டும்.
      இன்னொரு வேண்டுகோள்:
      எதுக்கெடுத்தாலும் சினிமா பக்கம் போகாதீங்க நண்பா!!

      நீக்கு
  3. Soak the saffron strands in 1 tablespoon of warm milk for 10 minutes.
    Soak the almonds in hot water for 15 minutes and take out the skin.oil the remaining milk by adding cardamom,( i added 2 pinches of cardamom powder) cinnamon and cloves. Keep the flame low.
    grind the almonds with little milk into a smooth paste.After 5 minutes , add the ground almond paste to the milk and the soaked saffron.
    Boil in a low flame for 5 minutes.
    Switch off the flame and strain the milk.
    Add sugar and mix well and garnish with pisatchios or cashew nuts or sliced almonds.வாசனை வேண்டுவோர் நெத்திலி மீனை அதில் மிக்ஸ் செய்யவும். அதன் பின் அது நெத்திலி மசாலா பால் எனப்படும். தூத்துக்குடி தண்னீர் உப்புதனம் அதிகம் எனவே பக்கத்து ஊரில் கிடைக்கும் நல்ல தண்ணீர் உயோகித்து பால் செய்யவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோவ்! என்னய்யா சொல்ல வர்ற??

      நீக்கு
    2. kuru Thambi,

      என்னா இங்லீஸ் புர்யலையா.....மசாலா பால் ரெசிபி கண்ணா ரெசிபி.... தூத்துக்குடி தண்ணீர் போடாது செய்யனும் ...தூத்துக்குடி தண்ணீரை கலந்தா திரையும் அவ்ளோதான்....
      சத்யராஜகுமாரன்

      நீக்கு
    3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
  4. இது ஒரு முட்டாள் தனமான முடிவாக தெரிகிறது....இது விரைவில் கைவிடப்படவேண்டும்....கைவிடவைக்கவேண்டும்...அதற்க்கு முன்பு இதுபற்றி அரசானை இருந்தால் கொடுங்கள்....ஏன் எதற்க்காக இந்த முடிவு என்பதை அறிய விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு