புதன், 6 மார்ச், 2013

மாண்புமிகு அய்யா கருணாநிதியே!

அய்யா கருணாநிதியே! 

மெரினாவில் படுத்துக்கொண்டு 'போர் முடிந்து விட்டது' என்றீர்கள்.

பின்னர் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றீர்கள்.

தீக்குளிப்பவர்கள் கடன் தொல்லை, குடும்பப் பிரச்சினைகளுக்காக தீக்குளிக்கிறார்கள் என்றீர்கள்.

ஆங்காங்கே கிளர்ச்சி செய்தவர்களை சிறையில் அடைத்தீர்கள்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமைச்செயலாளர் மூலம் அறிக்கை அனுப்பி பல தலைவர்களை மிரட்டினீர்கள்.

தமிழக மீனவர்கள் பேராசை கொண்டவர்கள் என்றீர்கள்.

இனி ஈழம் சாத்தியமில்லை. அது பற்றி யாரும் பேசக்கூடாது என்றீர்கள்.

பின்னர் 'ஈழம் என் நிறைவேறாக் கனவு' என்று சொல்லி டெசோவைக்  கையில் எடுத்தீர்கள்.

டெசோ மாநாட்டில் ஈழம் பற்றி பேச மாட்டோம் என காங்கிரசுக்கு அடிபணிந்தீர்கள்

ஸ்டாலின் டெசோ தீர்மானத்தை ஐ.நா-வில் கொடுத்துவிட்டார்.
ஈழம் கிடைத்தாச்சு என்றீர்கள்.

நீங்கள் எல்லாம் கையில் துப்பாக்கி ஏந்தி போராடிக் கொண்டிருந்தீர்களா? என்று எம்மைக் கேள்விகேட்டு உம்  குற்றத்தை மறைக்கப் பார்க்கிறீர். (போராடியவர்கள் , முள்ளிவாய்க்கால்  கிளம்பியவர்கள் எல்லோரையும் ஏனய்யா  சிறையில் அடைத்தீர்கள்?)

அவர் மட்டும் யோக்கியமா என்று ஜெயா அம்மையாரைக் கைகாட்டுகிறீர் (நீங்கள் இரண்டு பேரும் ஒரே வகையினர்தான்).

கடைசியாக இப்போது சானல்4 கல்லம் மெக்ரெ வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என்று அண்டப்புழுகு புழுகுகிறீர்கள்.

ஆக மொத்தத்தில் உங்கள் மீது விழுந்த கறையை நீக்கத்தான் பல போராட்டங்களே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இளம்தலைமுறை உம்  பெயரைக் கேட்டாலே காரித் துப்புகிறது.


 குடும்ப நலனுக்காக ஒரு இன அழிப்பிற்குத் துணை போன உமக்கு வரலாற்றில்  'தமிழினத் துரோகி' என்னும் பெயர் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன அழுது புரண்டாலும் அப்பெயர் உம்மை விட்டு அகலாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மற்றும்  பொது வாக்கெடுப்பு  பற்றி வாயைத் திறக்காமல் திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் இந்தியா, அமெரிக்காவின் பித்தலாட்டம். நீங்களும் அதற்குத் துணை போக வேண்டாம்.

ஈழத் தமிழர்களுக்கு உருப்படியாக ஏதாச்சும் செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் ஒதுங்கிக்கொண்டு தேர்தல் நிதி சேகரித்தல், கூட்டணி வியூகம் அமைத்தல், வேட்பாளர் தேர்வு செய்தல் என வரப்போகும்  தேர்தலுக்கு  தங்கள் பணிகளைத் தாயார் செய்யுங்கள்.

நன்றி 

6 கருத்துகள்:

  1. palaya kavithai ondru padithathu:
    AAhayathirku keele parakkum Vaanabadihalai,
    Vaahaay sudum saamarthiyasaliye,
    engae oru arai adi paranthu kaanbi!!!!

    பதிலளிநீக்கு
  2. guru nathan nee enna panna ELAM FREEDom Enna panna ELAM people penam ^male-- politicas pannathea^

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கள அடிப்பொடியே, நான் என்ன கிழிச்சேன்னு எனக்கு தெரியும்.
      அதை இங்கு விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

      நான் தமிழர்களைக் காட்டிக்கொடுக்க வில்லை.
      என் குடும்பத்துக்காக எவன் காலிலும் விழவில்லை.
      உதவிப் பண்ணுறேன்னு சொல்லிட்டு நாடகம் ஆடல.

      ஈழம் எமக்கு அரசியல் அல்ல.
      அது ஈழத் தமிழர்களின் உரிமை.
      சகத் தமிழன் என்னும் முறையில் நான் ஆதரிப்பேன்.
      உலகில் எந்த மூலையில் இனப்படுகொலை நடந்தாலும் எதிர்ப்போம்.

      நீக்கு
  3. தான் யாருக்கும் வாழ்த்து தெரிவிக்கவில்லை ஆனால் திமுக கட்சியினருடன் பேசியது உண்மை தான் என்று சனல் 4 கல்லம் மெக்ரெ விளக்கமளித்துள்ளார்

    பதிலளிநீக்கு