நேற்று சன் டிவி செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது, விளம்பரவேளையில் தற்செயலாக CNN பக்கம் திருப்பினேன். 'Bomb Blasts in Hyderabad ' என்று ப்ளாஷ் நியுஸ் போய்க்கொண்டிருந்தது.
உடனே எனது பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரிசையாக தொலைப்பேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. 'குண்டு வெடித்தது எந்த ஏரியா? உங்க ஏரியாவா? பத்திரமா இரு. வெளியே எங்கும் போகாதே. யாரிடமும் ரொம்ப பழகாதே!' என்று ஏகப்பட்ட அன்புக்கட்டளைகள்.
சம்பவம் நடந்த தில்ஷுக் நகர் ( Dilsukhnagar), ஹைதராபாத் பற்றி எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்கிறேன்.
தில்ஷுக் நகர் கிட்டத்தட்ட சென்னை கோயம்பேடு மாதிரியான பகுதி. ஆந்திராவின் கோட்டி(Koti) என்னும் பகுதியில் வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் புறப்படும். அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் அடுத்து மலாக்பெட்(Malakpet) வழியாக தில்ஷுக் நகரை வந்தடையும். ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பயணம் செய்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.
ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் வட மாநில நண்பர்கள் அதிகம். பானிபூரி, குட்கா, பாஸ்ட்புட் உணவுக்கடைகள், டீ கடைகள் மற்றும் பல சிறுகடைகள் சாலைகளை ஆக்கிரமித்து எங்கும் நிறைந்திருக்கும். பெரும் வணிக வளாகங்களில் பல துணிக்கடைகள், செருப்புக்கடைகள் அமைந்திருக்கும். இதனால் சாலைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.
பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் சொல்லவே தேவையில்லை. மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
அமீர்பேட், பேகம்பேட், தில்ஷுக் நகர் ஆகிய பகுதிகளில் மென்பொருள் படிப்பு, ப்ராஜெக்ட் சொல்லித்தரும் சிறுசிறு நிறுவனங்கள் பல உள்ளன. மாணவர்கள் கூட்டம் இந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.

இதுபோக சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள் நகர் முழுவதும் நிறைந்திருக்கின்றன.
நகரின் இன்னொரு புறத்தில் (மாதாபூர், ஹைடெக் சிட்டி) நம்ம ஆட்கள் (அதாங்க சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்) ஆக்கிரமிப்பு அதிகம்.
இதுபோக மெட்ரோ ரயில் கட்டமைப்பு வேலைகள் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறாக ஹைதராபாத், செகந்திராபாத் நகர் முழுவதும் மக்கள் அடர்த்தி அதிகம். சென்னையை விட அதிகம் என்றுதான் தெரிகிறது.
இப்படிப்பட்ட மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள ஹைதராபாத்தின் தில்ஷுக் நகர் பகுதியை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் ஏற்கனவே பல தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
சம்பவ இடத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, காவல்துறை, உளவுப்பிரிவு, மீட்பு பணியில் ஈடுபடுவோர், மீடியாக்கள் என கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
இவ்வாறு பதட்டமான இடத்திற்கு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஏன் வருகின்றனர்? முதல்வர், அந்தப்பகுதி எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வருகையில் தவறில்லை. ஆனால் மற்ற ஓட்டுப்பொறுக்கிகள் ஏன் வருகிறார்கள்? அங்கும் ஓட்டுப்பொறுக்கவா?
மக்கள் அதற்கும் ஒருபடி மேல். வேடிக்கை பார்க்க கூட்டம் கூட்டமாக வந்துகொண்டு இருந்தனர். போலிஸ் தடியடி நடத்தும் அளவிற்கு கூட்டம் அதிகமானது
குண்டுவெடிப்பு நடந்த இடத்திலும் வேடிக்கையா??